கோதுமை ஜீரா - Godhumai Jira - Wheat Flour Halwaஅம்மா எப்பொழுதும் கோதுமைமாவில் அல்வா செய்வாங்க…ரொம்ப நல்லா இருக்கும்…அதே மாதிரி கோதுமைமாவில், சிறிது மாறுதலுடன் ரொம்பவும் சுலபமாக கை வலிக்காமல் செய்த கோதுமை ஜீரா ஸ்வீட் இது….

இந்த ஸ்வீட்டிற்கு எந்த வித கலரும் சேர்க்க தேவையில்லை. கோதுமை மாவினை நன்றாக வறுத்தாலே போதும்.

எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் இது…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி பாரதி.

சமைக்க தேவைப்படும் நேரம்- Cooking Time : 8 - 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கோதுமை மாவு – 1/2 கப்
·         சக்கரை – 3/4 கப்
·         தண்ணீர் – 1 & 1/2 கப்
·         நெய் – 1/2 கப்

செய்முறை :
·         கடாயினை சூடுபடுத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும். அத்துடன் கோதுமை மாவு சேர்க்கவும்.


·         கோதுமை மாவினை கட்டியில்லாமல் அடிக்கடி கிளறிவிட்டு வேகவிடவும்.
·         சுமார் 2 – 3 நிமிடங்களில் கோதுமை மாவு கலர் மாறி நன்றாக வாசம் வரும்.


·         தண்ணீரினை சூடுபடுத்து கொள்ளவும். (மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைத்தால் போதும்).கொதிக்கவிட வேண்டாம்.

·         கோதுமை மாவு கலவையுடன், சக்கரை + சூடுதண்ணீர் சேர்த்து உடனே கிளறவும். (கவனிக்க: சூடுதண்ணீர் சேர்த்தவுடன் பெரிய பெரிய Bubbles மாதிரி வரும். அதனால் பெரிய பாத்திரத்தில் செய்வது நல்லது.)
·         கலவையினை மேலும் 2- 3 நிமிடம் கிளறவும். (கைவிடாமல் கிளற வேண்டும் என்று இல்லை…அடிக்கடி கிளறினால் போதும்.)


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்வீட் ரெடி.


குறிப்பு :
நெயிற்கு பதிலாக பாதி நெய் + பாதி எண்ணெய் சேர்த்தும் செய்யலாம்.

1 பங்கு கோதுமை மாவு என்றால் அதே பங்கு நெய் (அ) எண்ணெய் சேர்த்தால் தான் கலர் வரும். நெய் குறைவாக சேர்த்தால் சுவை மற்றும் நிறத்தில் மாறுப்படும். (கண்டிப்பாக இந்த கலர் வாரது…வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.)

கண்டிப்பாக சூடுதண்ணீர் பயன்படுத்தவும். 1 பங்கு கோதுமை மாவிற்கு 2 & 1/2 பங்கு தண்ணீர் என்ற கணக்கில் சேர்த்து கொள்ளவும்.

சக்கரையினை பொடித்து சேர்க்க தேவையில்லை. அப்படியெ சேர்த்து கொள்ளலாம். கொடுத்துள்ள அளவின் படி பொருட்களை சேர்த்தால் கண்டிப்பாக நல்லா இருக்கும் இந்த ஸ்வீட்.

சூடான தண்ணீர் சேர்த்தவுடன், பொங்கிவருவது போல இருக்கும். ஆனால் கிளறிவிட்டால் தண்ணீர் எல்லாம் காணாமல் போய்விடும்.


46 comments:

Chitra said...

simple method to make halwa. இந்த weekend , இதுதான் ஸ்வீட். கண்டிப்பாக செய்து பார்க்க போறேன். Thank you for this recipe.

குறையொன்றுமில்லை. said...

ஆஹா, சுவையான கோதுமை
ஜீரா பாக்கும்போதே பண்ணிட
தோனுது. படங்களும் செய்முறை
விளக்கமும் தெளிவா இருக்கு,

குடந்தை அன்புமணி said...

பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html

Lifewithspices said...

Abbadiye enakku kudunga andha bowlii.. so good very well explained.. enakku eppavume water level sonna romba pidikkum will try n let u know..thanks !!!

சசிகுமார் said...

அல்வா சூப்பர்

Bharathy said...

மிக மிக சந்தோஷமாக உள்ளது . ஸ்வீட் சூப்பர் அக பண்ணி விட்டர்கள் ! :)

Happy that you liked it too :)

aotspr said...

சூப்பர் அருமையான உணவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ChitraKrishna said...

sooooo tempting geetha!

Priya Suresh said...

Glossy halwa looks delicious..

Geetha6 said...

super.
see this also!!
http://udtgeeth.blogspot.com/2011/08/blog-post_24.html

Priya ram said...

கோதுமை அல்வா பார்க்கவே சூப்பரா இருக்கு கீதா. :) எனக்கு ஒரு கப் பார்சல்.... :)

ஹுஸைனம்மா said...

தண்ணீரின் அளவு தேவையான பொருட்கள் பகுதியில் ஒண்ணரை கப் என்றும், பதிவின் இறுதியில் இரண்டரை கப் என்றும் சொல்லிருக்கீங்க, எது சரி?

ADHI VENKAT said...

ரொம்ப சுலபமாக இருக்குங்க. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...ரொம்ப நல்லா இருக்கும்..

நன்றி லஷ்மி அம்மா...ரொம்ப நன்றி..

நன்றி குடந்தை அன்புமணி...

நன்றி கல்பனா..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி பாரதி...ரொம்ப ரொம்ப நன்றி...அருமையான ஸ்வீட் ..பகிர்வுக்கு நன்றி...

GEETHA ACHAL said...

நன்றி சசி..

நன்றி கண்ணன்...

நன்றி சித்ரா...

நன்றி ப்ரியா..

நன்றி கீதா...

நன்றி ப்ரியாராம்...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...

செய்முறையில் கொடுத்துள்ள அளவில் கோதுமை மாவு 1/2 கப் தான் கொடுத்து உள்ளேன்..அதான் 1 & 1/2 கப் தண்ணீர் அளவு .

கடைசியில் கவனிக்க பகுதியில் கொடுத்துள்ளது....1 பங்கு(Part) கோதுமை மாவிற்கு 2 & 1/2(Parts) பங்கு என்று விகிதத்தில் சேர்த்து கொள்ளுங்க என்று எழுது இருக்கின்றேன்.

GEETHA ACHAL said...

நன்றி ஆதி...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

கோவை நேரம் said...

இனி எல்லோருக்கும் அல்வாதான்...ஹி ஹி ஹி. போங்க ..எச்சில் ஊறுது...வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லி அல்வா பண்ண சொல்லணும்

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப ஈசியா இருக்கு கட்டாயம் செய்து பார்கிறேன்.

athira said...

சூப்பராக இருக்கு கீதா, எப்படியும் செய்து பார்க்கோணும்.

Kanchana Radhakrishnan said...

சூப்பர் .

KrithisKitchen said...

Paakka romba arumaiya irukku!
http://krithiskitchen.blogspot.com/

ஜெய்லானி said...

ஆஹா...சிம்பிள் ஹல்வாவா இருக்கே :-))

படத்தை காட்டி ஜொள்ள வச்சிட்டீங்க :-)

Unknown said...

ஆஹா பாத்ததும் நாக்குல எச்சி ஊருதே

Unknown said...

Looks so rich that i feel like having the entire bowl in one go

Saraswathi Ganeshan said...

Halwa supera iruku geetha, bookmark panniten!!

Shylaja said...

Halwa supera iruku.athuvum easy recipe.Intha week end panna poren...
South Indian Recipes

Mahi said...

simple and sweet recipe Geetha! thirunelveli halwa maathiriye irukku! :P :P

Mahi said...

simple and sweet recipe Geetha! thirunelveli halwa maathiriye irukku! :P :P

Mahi said...

simple and sweet recipe Geetha! thirunelveli halwa maathiriye irukku! :P :P

Mahi said...

simple and sweet recipe Geetha! thirunelveli halwa maathiriye irukku! :P :P

Sensible Vegetarian said...

Super halwa, looks fantastic.

Sensible Vegetarian said...

Super halwa looks fantastic.

Jaleela Kamal said...

ஹல்வா நல்ல இருக்கு.

ரொம்ப சிம்பில் அண்ட் ஈசி

Anonymous said...

super iruku parkarathu.......

Raks said...

I dont have patience like you to make this,wish I could taste while other person makes ;) haha!

GEETHA ACHAL said...

நன்றி கோவை நேரம்..

நன்றி சாரு அக்கா...

நன்றி அதிரா...

நன்றி கஞ்சனா...

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி..

நன்றி ஜெய்லானி..

நன்றி ராஜா..

நன்றி விமிதா..

நன்றி சரஸ்...

GEETHA ACHAL said...

நன்றி மகி...

நன்றி sensible..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி அனானி...

நன்றி ராஜி..ரொம்ப சிம்பிள் தான் பா...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

Malini said...

geetha i tried this today it came out well and this is harshi kutti's first sweet she enjoyed a lot.... and it was very easy n simple kalakal sweet..

Anonymous said...

very nice recipe

GEETHA ACHAL said...

நன்றி மாலினி..செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி..அதிலும் குட்டிமாவிற்கு பிடித்தது கூடுதல் சந்தோசம்...

நன்றி அனானி..

Lali said...

அன்பு கீதா!
இன்னிக்கு இங்க நல்ல மழை, இரவு உணவுக்கு பிறகு நீங்க சொன்னா இந்த கோதுமை ஜீரா செய்து சுட சுட சாப்பிட்டோம்.
மிக அருமை! நன்றி தோழி! :)

Lali said...

அப்படியே கோதுமை மாவில் அல்வா செய்யும் முறையையும் சொல்லி கொடுங்கள்.
உங்களோட செய்முறைகளை பார்த்ததும் உண்மையிலேயே சமையல் செய்வது என்பது சந்தோஷத்தை அளிக்கிறது.
வாழ்த்துக்கள் கீதா!

Anonymous said...

I tried today.
Halwa looks super.
But raw smell came.
whts the problem?

Related Posts Plugin for WordPress, Blogger...