ரவா இட்லி - Rava Idlyஊறவைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடஙள்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ரவை – 2 கப்
·         தயிர் – 1 கப்
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
·         உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         முந்திரி – 10 – 15

பொடியாக வெட்டி கொள்ள :
·         கருவேப்பில்லை – 5 இலை
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :
·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தாளித்து கொண்டு, பொடியாக நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·         இத்துடன் மஞ்சள் தூள் + ரவையினை சேர்த்து மேலும் 1 நிமிடம் வறுத்து கொள்ளவும்.


·         ரவையில் சூடு சிறிதளவு ஆறியதும், அத்துடன் தயிர் + 1 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி சிறிது நேரம் ஊறவிடவும்.·         இட்லி தட்டில் மாவினை ஊற்றி 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய ரவா இட்லி ரெடி.


கவனிக்க:
தண்ணீர் அதிகம் சேர்த்தால் இட்லி நன்றாக இருக்காது. 2 கப் ரவை என்றால் 1 கப் தயிர் + 1 கப் தண்ணீர் என்பது சரியாக இருக்கும்.

விரும்பினால் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளலாம். நான் சிறிது நேரம் ஊறவைத்து இட்லி செய்ததால், எதுவும் சேர்க்கவில்லை.


22 comments:

Unknown said...

Simple and yummy breakfast.

Chitra said...

simple and good. Adding turmeric powder is a new tip.

Priya ram said...

கீதா, இட்லி பார்க்க நல்லா இருக்கு. செய்முறையும் ஈஸியா இருக்கு. ட்ரை பண்ணி பார்த்து விட்டு சொல்கிறேன்.

ஹுஸைனம்மா said...

ரவை இட்லி ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி செய்வேன். (இதே முறைதான்) கூடுதல் டிப்ஸுக்கு நன்றி கீதா.

Raks said...

Looks super soft and yumm! Love the addition of turmeric,gives a nice look!

Menaga Sathia said...

கலர்புல் ரவா இட்லி...மஞ்சள்தூள் சேர்த்திருப்பது நல்ல ஐடியா!!

graceravikuwait said...

இட்லியும் சட்னியும் பாக்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு..! presentation நல்ல இருக்கு ....!

Unknown said...

Wow too soft idlis,luks very tempting...

Jeyashris Kitchen said...

soft and yummy idlis, nice explanations too

ஸாதிகா said...

வாவ்..இட்லியை பார்த்ததுமெ விண்டு சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

சுவீட் 16 அதிரா:) said...

சூப்பர் கீதா, இக்குறிப்பைத்தான் தேடினேன்(மனதில், எங்கும் தேடிப் பார்க்கவில்லை), ஒரு தடவை செய்தேன் பிழைத்துவிட்டது, பயத்தில் கொஞ்சத் தயிர்தான் போட்டேன், அத்தோடு ரவ்வை வறுக்கவில்லை.

என் நண்பி செய்து தந்தா, அது சூப்பராக பஞ்சுபோல இருந்தது, ஆனா பச்சைப்புளி:), இதே அளவில் இன்னொருதடவை செய்துபார்க்கிறேன்.

Sensible Vegetarian said...

Simple and delicious one.

puduvaisiva said...

it very easy and healthy

thanks

கவி அழகன் said...

கடவுளே உங்களை கை எடுத்து கும்புடணும்

Valarmathi Sanjeev said...

Lovely and yummy breakfast recipe....looks delicious.

Mahi said...

Idli looks colourful and soft!

Vardhini said...

Yummy idlis. Since hubby is not a fan of idlis, I don't make them often.

Vardhini
Check out my 100th post giveaway

Jayanthy Kumaran said...

I am going to try this...delicious..:P
Tasty Appetite

Kanchana Radhakrishnan said...

delicious recipe.

கோவை நேரம் said...

உங்கள் வீட்டுக்காரர் ரொம்ப கொடுத்து வைத்தவர் .(திருஷ்டி சுத்தி போடுங்க )விதவிதமான சமையல்..வாழ்த்துக்கள் .அப்புறம் உங்களோட அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது .

Gita Jaishankar said...

Hi Geetha, how are you pa? Rava idli have come out real good...very soft and fluffy...I usually dont add turmeric...your verison sounds very interesting...will try this soon...take care dear :)

mathangi said...

I also make Rava idli, , but I add sliced onion, peas, grated carrots and before pouring the batter, I put round cut tomatoes and they come out nice. Secondly I add Ragi flour for diabetic patients in this batter.

Related Posts Plugin for WordPress, Blogger...