ஸ்பினாச் ஆரஞ்சு சாலட் - Spinach Orange Saladஸ்பினாச் சாப்பிடுவதால் உடலிற்கு தேவையான சத்துகள் நிறைய கிடைக்கின்றது. சக்கரை அதிகம் உள்ளவர்கள் மற்றும் உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

நிறைய நார்சத்து, புரதம், விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பாக வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.

வால்நட்யில் அதிக அளவு Omega-3 fatty acids இருப்பதால் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         ஸ்பினாச் இலை(Baby Spinach Leaves) – 2 கப்
·         ஆரஞ்ச் பழம் – 1
·         வால்நட் – 1/4 கப்
·         உப்பு – 1/4 தே.கரண்டி
·         ஆலிவ் ஆயில் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         ஸ்பினாச் இலையினை தண்ணீரில் அலசி கொள்ளவும். ஆரஞ்ச் பழத்தில் இருந்து ஆரஞ்ச் சுளையினை தனியாக நீக்கி கொள்ளவும்.


·         ஆரஞ்ச் சுளையினை நீக்கிய பிறகு இருக்கும் தோலில் இருந்து 2 மேஜை கரண்டி அளவிற்கு சாறினை பிழிந்து கொள்ளவும்.

·         ஆரஞ்சு ஜுஸ் + ஆலிவ் ஆயில் + உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஸ்பினாச் இலையுடன் சேர்த்து கலக்கவும்.

·         பரிமாறும் தட்டில், ஸ்பினாச் இலைகள் மீது ஆரஞ்சு சுளை + வால்நட் சேர்க்கவும். சுவையான சத்தான சாலட் ரெடி.


16 comments:

ஸாதிகா said...

கலர்ஃபுல் சாலட்.பார்க்கவே ரம்யமா இருக்கு.

Chitra said...

We make it at home very often. I add some apple slices and seedless grapes too. :-)

நிரூபன் said...

படங்களைப் பார்க்கவே வாய் ஊற சைக்கும் அருமையான ஓர் ரெடிப்பினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

அம்மாவிடம் சொல்லிச் செய்து சாப்பிட்டாப் போச்சு,
பகிர்விற்கு நன்றி.

Lifewithspices said...

crunchy healthy salad..

Reva said...

Super salad akka. Recently I had a similar salad in a restaurant. This looks yum:)

Herbs and Flowers:Basil. Do send in your entries:)

Reva

சசிகுமார் said...

Thanks for sharing

Menaga Sathia said...

சாலட் கலர்புல்லா ரொம்ப நல்லாயிருக்கு..

KrithisKitchen said...

Super colorful salad.. loved the texture combo...

தெய்வசுகந்தி said...

colorful salad. Looks Yummy!!

Jeyashris Kitchen said...

nice combo of ingredients. very healthy salad

Unknown said...

I love any salad and this looks so refreshing and healthy

San said...

Refreshing salad dear, i was drooling on seeing the fish biryani:)

http://sanscurryhouse.blogspot.com

Anonymous said...

நமக்கு சாலட்லாம் ஒத்து வராதுங்க...நமக்கு தெரிஞ்சதெல்லாம் seafood ...சிக்கன்...மட்டன்...

ஏகப்பட்ட செயல்முறை
பதிவு செஞ்சிருக்கீங்க...படிக்கவே நாளாகுமே...செய்ய?...ஹ்ம்ம்...யாராவது செய்து தந்தால் நல்லாதானிருக்கும்...அதுவரை பெருமூச்சு தாங்க மிச்சம்....

Kanchana Radhakrishnan said...

healthy salad

aotspr said...

மிகவும் அருமையான உணவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

aotspr said...

மிகவும் அருமையான உணவு.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Related Posts Plugin for WordPress, Blogger...