தந்தூரி சிக்கன் - Tandoori Chicken
சமைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 – 3 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ

சேர்க்க வேண்டிய பொருட்கள் 1 :
         எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் 2 :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         ஒமம் – 1 தே.கரண்டி (பொடித்தது)
·         கடலைமாவு – 3 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய பொருட்கள் 3 :
·         தயிர் – 1 கப்
·         இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         கரம்மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·         கடுகு – 1/2 தே.கரண்டி (பொடித்தது)
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து கொண்டு இரண்டு முன்று இடங்களில் கத்தியினால் கீறி கொள்ளவும்.

சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 1 யினை சிக்கன் மீது தடவி அதனை சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவிடவும்.


சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 2 : ஒமம் மற்றும் கடுகினை தனிதனியாக வறுத்து கொண்டு தனி தனியாக பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒமம் பொடியினை போட்டு தாளித்து அத்துடன் கடலைமாவினை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.


சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 3 யினை எல்லாம் கலந்து கொள்ளவும். அத்துடன் கடலைமாவு கலவையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


இந்த கலவையினை சிக்கன் மீது தடவி கொண்டு குறைந்தது 2 – 3 மணி நேரம் ப்ரிஜில் வைத்து ஊறவைக்கவும்.


அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும்.சிக்கன் அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.


அவனில் 400Fயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும். சிக்கனை வெளியில் எடுத்து அதன் மீது சிறிது எண்ணெய்  spray செய்து திரும்பவும் 400F Broil Modeயில் 15 - 20 நிமிடங்கள் வேகவிடவும்.


சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.

கவனிக்க:
சிக்கனை குறைந்தது 2 – 3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும்.

சிறிது ரெட் கலர் சேர்த்து கொண்டால் சிக்கன் நன்றாக கலராக இருக்கும்.

தயிர் மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.22 comments:

KrithisKitchen said...

Super appetizing.. inviting color...

http://krithiskitchen.blogspot.com/

Chitra said...

ஓமம் சேர்த்து தந்தூரி சிக்கன் செய்து பார்த்ததில்லை. ட்ரை பண்றேன்.

சுபத்ரா said...

Looking great..Different recipie.

Unknown said...

Wow delicious version of tandoori chicken,am sure it must be yummy!!!

Pushpa said...

Spicy chicken with lemon will make my day drools...

தினேஷ்குமார் said...

சகோ ஓமம்னா நல்சீரகமா .... பெருஞ்சீரகமா....

ஸாதிகா said...

வித்தியாசமான முறையில் முயற்சித்துள்ளீர்கள் தந்தூரி சிக்கனை.படத்தை பார்க்கவே ரொம்ப அருமையாக உள்ளது.

Unknown said...

ஆஹா! ரொம்ப ஈஸியாத்தானிருக்கு

ஊரில் போய் செய்து பார்க்கனும்

இன்ஷா அல்லாஹ்

நன்றி சகோ ...

ஹுஸைனம்மா said...

வித்தியாசமா இருக்கு. டிரை பண்ணனும்.

Priya Suresh said...

Looks soo delicious and succulent..

நிரூபன் said...

அக்காச்சி, பெரிய படமாக ரெசிப்பியினைப் பகிர்ந்து, நாவில் எச்சில் ஊற வைக்கிறீர்களே.

நிரூபன் said...

அழகான சமையற் குறிப்பின் சுவையினைக் கூட்டப் படங்களோடு சேர்த்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

மிக்க நன்றி.

GEETHA ACHAL said...

நன்றி கீர்த்தி..

நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சுபத்ரா..

நன்றி ப்ரேமலதா..

GEETHA ACHAL said...

நன்றி புஷ்பா..

நன்றி தினேஷ்...ஒமம் என்பது முருக்கு செய்யும் பொழுது சேர்ப்பாங்க...ஆனால் அது பெருஞ்சீரகம் கிடையாது.

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பார்க்க சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா..

நன்றி ப்ரியா...

நன்றி நிரூபன்...நன்றி...

aotspr said...

அருமையான உணவு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Saraswathi Ganeshan said...

Thanks for trying dear..very inviting!!!

கேரளாக்காரன் said...

Enga ammakitta solren naanga barbecue la thaan pannuvom

Arun said...

நன்றி.. கண்டிப்பா try பண்ரேன்.. fridgeல எதுக்கு ஊர வைக்க வேண்டும்? ஏன் வெளிய வைக்கக் கூடாது?

Anonymous said...

all your recipes are looks very nice. i havenot tried yet. yesterday only i came to know about your blog. soon i will try.please mention how much in degree centigrade. aluminium foil caught fire in my microwave oven. so i am not using it. how is it possible in your microwave oven? what is broil mode? i have not broil mode in my microwave oven. alternate method for broil? thanks

Seetha said...

My Favorite dish! Looks great!!

Do visit my blog

http://seethaskitchen.blogspot.com

geetha said...

hi microwave la vaikum time sollunga

Related Posts Plugin for WordPress, Blogger...