காளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         காளிப்ளவர் – 1 சிறிய பூ
·         கடலைமாவு (அல்லது) கார்ன்மாவு – 3 மேஜை கரண்டி
·         சிக்கன் மசாலா – 1 மேஜை கரண்டி
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
·         எண்ணெய் – சிறிதளவு

(சிக்கன் மசாலாவிற்கு பதில் மிளகாய் தூள் + கரம்மசாலா சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை :
·         காளிப்ளவரினை சிறிய சிறிய பூக்களை வெட்டி கொள்ளவும்.  சிக்கன் மசாலா + மஞ்சள்தூள் + உப்பு + கடலைமாவு + சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் காளிப்ளவரினை சேர்த்து கலந்து சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·         அவனை 350 Fயில் மூற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் ட்ரேயில் காளிப்ளவரினை தனிதனியாக வைக்கவும் அதன் மீது எண்ணெயினை Spray செய்யவும்.


·         காளிப்ளவரினை அவனில் வைத்து முதலில் 350 F,  Broil Modeயில் 5 – 8 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு Bake Modeயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.
·         ட்ரேயினை வெளியில் எடுத்து காளிப்ளவரினை திருப்பி விட்டு அதன் மீது எண்ணெயினை Spray செய்து, அவனில் வைத்து மேலும் 5 – 8 நிமிடங்கள் திரும்பவும் Broil Modeயில் வேகவிடவும்.


·         சுவையான காளிப்ளவர் ப்ரை ரெடி.


கவனிக்க:
சிக்கன் மசாலாவிற்கு பதிலாக அவரவர் விருப்பததிற்கு ஏற்றாற் போல தூள் வகைகள் சேர்த்து கொள்ளலாம்.

கடலைமாவிற்கு பதிலாக Corn Flour சேர்த்து கொள்ளலாம்.

காளிப்ளவரினை தனி தனியாக அடுக்கி ட்ரேயில் வைக்கவும். இல்லை என்றால் நன்றாக க்ரிஸ்பியாக இருக்காது.

12 comments:

ஸாதிகா said...

kaaகாலிபிளவர் ஃபிரையும் அர்மை.சிகப்பு நிற தட்டும் அருமை.

Nandinis food said...

I want to munch on these golden-brown beauties! Yum!

Lifewithspices said...

wow super oille illamal fry.. gud one..

Pushpa said...

Varuval looks perfect.

Sensible Vegetarian said...

Simply delicious one.

ஆயிஷா said...

அருமை.

Unknown said...

All recipes are turned so healthy in geetha's kitchen...very tempting:)

Aparna said...

mmm!!!..Geetha pudhu dropdown menu category front page super ! Romba naala ungalukku suggest pannalaamnu irunden ! Appappa...ethhanai variety ! Kudos to your great work! ("Home" button onnu page top-la irundha nalla irukkum)

சசிகுமார் said...

நன்றி அக்கா

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி நந்தினி..

நன்றி கல்பனா..

நன்றி புஷ்பா..

நன்றி Sensible..

GEETHA ACHAL said...

நன்றி ஆயிஷா..

நன்றி ப்ரேமா...

நன்றி அபர்ணா...ஏற்கனவே முகப்பு என்ற பட்டன் இருக்கின்றது..இப்பொழுது உங்களுக்காக Home என்று அத்துடன் சேர்த்து இருக்கின்றேன்...

நன்றி சசி....

Raks said...

Once tried in oven and ended up very dry and soggy fires,will try your method and see...

Related Posts Plugin for WordPress, Blogger...