கோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyalகோலர்ட் க்ரீன்ஸில் அதில் அளவு புரதம், விட்டமின்ஸ் K , A , C , E, B1 , B5 , கல்சியம், நார்சத்து, Omega -3 Fatty Acids மற்றும் நிறைய மினரல்ஸ் போன்றவை அதிக அளவில் காணப்படுக்கின்றது.

சுமார் 100 கிராம் கீரையில் 30 – 40 கலோரிஸ் தான் காணப்படுக்கின்றது. டயட்டில் இருப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

நார்சத்தில், இது நீரில் கரையாத நார்சத்து வகையினை சேர்ந்தது. அதனால் மலசிக்கல் இல்லாமல் இருக்கும்.

அதே மாதிரி சக்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகம் இருப்போர் இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.

இந்த கீரை கொஞ்சம் கசப்பு தன்மையுடன் இருக்கும். (நம்ம ஊர் அகத்தி கீரை மாதிரி இருக்கும்.)

சமைக்க தேவப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கீரை – 1 கட்டு
·         வெங்காயம் – 1
·         பூண்டு – 5
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·         கீரையினை நன்றாக கழுவி, சிறியதாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + பூண்டினை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பினை தாளித்து அத்துடன் பூண்டினை சேர்த்து வதக்கவும்.


·         பூண்டு வதங்கியவுடன், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், கீரை + தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்.·         சுவையான சத்தான கீரை பொரியல் ரெடி.

குறிப்பு :
கீரை பொரியலில் கடைசியில் தேங்காய் துறுவல் சேர்த்தால சுவையாக இருக்கும்.

18 comments:

Sensible Vegetarian said...

Delicious Geetha, I usually make this poriyal using coconut never tried with onion. Definitely got to try your way.

Uma said...

I haven't prepared any recipes using this keerai. Looks so easy. Will try next time.

Cheers,
Uma

Pavithra said...

Love this a lot and make this often.. very healthy too.

RAKS KITCHEN said...

Very nice recipe,wish to mix with rice and ghee and have it now :)

Vardhini said...

I do this poriyal too and sometimes add channa dal or moong dal.

Vardhini
Zesty Palette

ஸாதிகா said...

கீரைப்பொரியல் பார்க்கவே பசுமை.

jeyashrisuresh said...

this variety of keerai is quite new to me and love the way u made this. simple and delicious

சசிகுமார் said...

ஆஹா சூப்பர்

Priya said...

Love this healthy poriyal,i can have it just with rice..

Premalatha Aravindhan said...

I have seen this keerai,love the way u prepared,luks delicious...

vanathy said...

நானும் அடிக்கடி செய்வதுண்டு. நல்ல ரெசிப்பி.

Nandini said...

The poriyal is very healthy! I want to try it right away!

ஆமினா said...

எங்கூர்ல கிடைக்கிற கீரைய வச்சு செஞ்சு பாக்குறேன் :-)

Kanchana Radhakrishnan said...

super and healthy poriyal.

San said...

Healthy veggie with lots of nutritional facts. Wonderful prep dear.

S.Menaga said...

Healthy n nice poriyal!!

சிநேகிதி said...

ஆஹா சூப்பரா இருக்கே

Kannan said...

சூப்பரா இருக்கு.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Related Posts Plugin for WordPress, Blogger...