கத்திரிக்காய் சட்னி & பிரவுன் ரைஸ் இட்லி - Kathirikkai Chutney / Brinjal Chutney & Brown rice Idly - Brown Rice Indian Recipe / Idly Varieties - Side Dish for Idly and Dosaசமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         கத்திரிக்காய் – 1/4 கிலோ
·         தக்காளி – 2 பெரியது
·         பச்சைமிளகாய் – 4
·         வெங்காயம் – 2
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
·         கத்திராய் + + தக்காளி + பச்சைமிளகாயினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + கொத்தமல்லியினை பொடியாக  நறுக்கி கொள்ளவும்.

·         பிரஸர் குக்கரில் கத்திரிக்காய் + தக்காளி + பச்சைமிளகாய் + மஞ்சள் தூள் + 2 கப் தண்ணீர் சேர்த்து 3 – 4 விசில் வரும் வரை வேகவிடவும்.


·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம்பருப்பு தாளித்து அத்துடன் வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.


·         வேகவைத்துள்ள கத்திரிக்காயினை மசித்து கொள்ளவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன், மசித்த கத்திரிக்காய் + தேவையான அளவு உப்பு சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·         கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான சத்தான கத்திரிக்காய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


பிரவுன் ரைஸ் இட்லி

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         பிரவுன் ரைஸ் – 2 கப்
·         இட்லி அரிசி – 1 கப்
·         உளுத்தமப்ருப்பு – 1 கப்
·         வெந்தயம் – 1 தே.கரண்டி

செய்முறை :
·         பிரவுன்ரைஸ் + இட்லி அரிசியினை ஒன்றாக சேர்த்து தண்ணீரில் குறைந்தது 3 – 4 மணிநேரம் ஊறவைக்கவும். அதே போல உளுத்தம்பருப்பு + வெந்தயம் சேர்த்து ஊறவைத்து கொள்ளவும்.

·         ஊறவைத்த உளுத்தம்பருப்பினை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும். அதே மாதிரி அரிசியினையும் அரைத்து கொண்டு, இரண்டு மாவினையும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.


·         மாவினை குறைந்தது 4 – 5 மணி நேரம் புளிக்கவிடவும். மாவு புளித்தவுடன்,இட்லிகளை சுடவும்.

·         சுவையான சத்தான இட்லி ரெடி


கவனிக்க:
பிரவுன் ரைஸுடன் இட்லி அரிசியினையும் சேர்த்து இட்லி செய்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

Grinderயில் மாவு அரைப்பது என்றால், பிரவுன் ரைஸ் 3 கப் + இட்லி அரிசி 1 கப் என்று அளவில் சேர்த்து கொள்ளவும்.

27 comments:

Shanavi said...

Parkave saapidanum pola aasaiya iruku pa..Sooper

Angel said...

இட்லி பார்க்கவே அழகா இருக்கு .இதுவரை பிரவுன் ரைஸ் சேர்த்து செய்யவில்லை .கண்டிப்பா இந்த வாரம் செய்றேன் .பகிர்வுக்கு நன்றி

சார்வாகன் said...

அருமை பார்த்தாலே பசி வரும் போல் இருக்கிறது

Pushpa said...

Yummy combination Geetha.

சசிகுமார் said...

அக்கா அருமையான இன்னொரு டிப்ஸ் கொடுத்து இருக்கீங்க மிக்க நன்றி....

Unknown said...

Enga amma,kathirikkai ya,suttu,idhe madhiri chutney seyvaanga.looks mouthwatering.

நிரூபன் said...

கத்தரிக்காய் சட்னி பற்றிய சுவையான படங்களோடு கூடிய ரெசிப்பி, பகிர்விற்கு நன்றி அக்கா.

Vardhini said...

Wow .. looks so yummy. Nice combo and healthy too.

Vardhini
Event: Herbs and Flowers - Garlic

சாருஸ்ரீராஜ் said...

கத்திரிக்காய் சட்னி சூப்பரா இருக்கு கீதா.

Priya Suresh said...

Rendu idly extrava saapidalam intha chutneyoda, excellent dishes together..

இமா க்றிஸ் said...

கட்டாயம் செய்து சாப்பிடணும்.

ஜெய்லானி said...

கத்திரிகாய் சட்னிக்கு எனக்கு நாலு இட்லி பத்தாது ஒரு பத்தாவது வேனும் :-))))

Lifewithspices said...

romba pasikudhu... superrr n tasty..

Unknown said...

have not tried idlis with brown rice yet - must try soon - Brinjal chutney looks super yum :)

சாருஸ்ரீராஜ் said...

நேத்து நைட் உப்புமாவிற்கு இந்த சட்னி தான் ரொம்ப நல்லா இருந்தது கீதா..

Kanchana Radhakrishnan said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.

Jayanthy Kumaran said...

looks delicious dear...
I've tagged you in my post...check out..:)

Tasty Appetite

பித்தனின் வாக்கு said...

aakaa please please antha thattai appadiyey parcel anuppavum.

nallu ideli paththathu oru 8 ideli pottu annuppungal

GEETHA ACHAL said...

நன்றி ஷானவி...

நன்றி ஏஞ்சலின்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சார்வாகன்..

நன்றி புஷ்பா..

நன்றி சசி...

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...

நன்றி நிரூபன்..

நன்றி வர்தினி..

நன்றி சாரு அக்கா..

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா..

நன்றி இமா..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஜெய்லானி..

நன்றி கல்பனா..

GEETHA ACHAL said...

நன்றி சாரு அக்கா...செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்தில் மகிழ்ச்சி..

நன்றி கஞ்சனா..

நன்றி ஜெய்..

நன்றி பித்தனின் வாக்கு...இது உங்களுக்கே ஒவராக தெரியவில்லையா...நான் உங்களுக்கு அக்காவா...நீங்க தான் எங்களுக்கு அண்ணா...

shanthi said...

haiiii geetha akka vanakkam.super chatni.parkave sapidanum pola irukku

GEETHA ACHAL said...

நன்றி சாந்தி..

Ani said...

Do we need to add any masala powder(thaniya powder or so?) to this chutney?
Looks yummy!

GEETHA ACHAL said...

நன்றி ani..

இதில் எந்த வித தூள் வகைகள் (மஞ்சள் தூள் தவிர) எதுவும் சேர்க்க தேவையில்லை. காரத்திற்கு ஏற்றாற் போல பச்சைமிளகாய் சேர்த்தால் போதும்.

விரும்பினால் தனியா தூள் சேர்த்து கொள்ளலாம்.

Ani said...

Hi Geetha,

I made this yesterday as like in ur blog...came out well..
Eventhough i wud like to add some tamarind and dhaniya pdr by next time to increase the taste!

I thank u so much for ur blog...nowadays i m entering into my kitchen with new recipes everyday...

Related Posts Plugin for WordPress, Blogger...