மல்டிக்ரேயின் சப்பாத்தி - வெங்காயம் தேங்காய் சட்னி - Multigrain Chapathi & Onion coconut Chutney / Venkayam Thenkai Chutney - Side Dish for Idly and Dosaசமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         பார்லி மாவு – 1/4 கப்
·         ஒட்ஸ் மாவு – 1/4 கப்
·         கேழ்வரகு மாவு – 1/4 கப்
·         சோயா மாவு – 1/4 கப்
·         கோதுமை மாவு – 1 கப்
·         எண்ணெய் – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
·         அனைத்து மாவு வகைகளுடன் தேவையான அளவு தண்ணீர் + 1 மேஜை கரண்டி எண்ணெய் + தேவையான அளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


·         சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக உருட்டி கல்லில் போட்டு வேகவிடவும்.


·          ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, சப்பாத்தியினை திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.


·         சுவையான சத்தான சப்பாத்தி ரெடி.


வெங்காயம் தேங்காய் சட்னி

இந்த சட்னி சப்பாத்தி, பூரி, ரொட்டி வகைகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 4 இலை
·         உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க

அரைத்த கொள்ள :
·         தேங்காய் – 4 சிறிய துண்டு
·         காய்ந்த மிளகாய் – 2 – 3

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம் + கருவேப்பில்லை + தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.


·         தேங்காய் + காய்ந்தமிளகாய் + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த கலவையினை சேர்த்து கிளறிவிடவும்.


·         சுவையான எளிதில் செய்ய கூடிய சட்னி ரெடி.
கவனிக்க:
இந்த சட்னியில் தேங்காய் விழுது சேர்த்த பிறகு வேகவைக்க தேவையில்லை. 

23 comments:

Malini said...

Hi geetha few days back only i saw ur blog... wow lots of new recpies... tried some of urs and got gr8 compliments from my hubby... this onion coconut chutney is very new to me... wll try today itslef..thanks ya.. :)

Aparna said...

Good idea !

Jayanthy Kumaran said...

sounds irresistable..:P
Tasty Appetite

Lifewithspices said...

superr chutney.. nalla method ..will sure try..

Samantha said...

lukin nice... soooper

Kanchana Radhakrishnan said...

onion coconut chutney is easy and super.

சசிகுமார் said...

அசத்தல் நாளைக்கு நமக்கு டிபன் ரெடி

Radhika said...

This is very good. Thanks for sharing. You have been tagged for 7 links challenge. For more details visit my space.

Aruna Manikandan said...

looks healthy and delicious dear :)

பனித்துளி சங்கர் said...

சிறப்பான சமையல் விளக்கங்களுடன் அழகான புகைப்படங்களின் இணைப்பும் அசத்தல் . அப்படியே எனக்கு இரண்டு பார்சல் கொடுத்திங்கனா நல்லா இருக்கும் என்று கேட்கத் தோன்றுகிறது

Priya Suresh said...

Wow both dishes looks super inviting and interesting..

Sensible Vegetarian said...

Delicious one Geetha and I love this onion coconut chutney.

GEETHA ACHAL said...

தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி மாலினி..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா..

நன்றி ஜெய்..

நன்றி சமந்தா...

நன்றி கஞ்சனா..

நன்றி சசி...

GEETHA ACHAL said...

நன்றி ராதிகா..

நன்றி அருணா..

நன்றி சங்கர்...

நன்றி ப்ரியா...

இமா க்றிஸ் said...

அருமையான குறிப்பு.

ஸாதிகா said...

இத்தனை வகை மாவு சேர்த்து கண்டிப்பாக நல்ல சத்துமா சப்பாத்திதான்.

Jaleela Kamal said...

நல்ல சத்தான சப்பாத்தி

நான் சோயா மாவு சேர்க்கல

வெங்காயம் சட்னியும் அருமை

ADHI VENKAT said...

நல்ல ஹெல்தியான ரெசிபி தான்.
சட்னி வித்தியாசமா இருக்குங்க.

Sai Kanakha Lakshmi said...

hai geetha, different chutney and superb duper healthy chappathi.

Malini said...

hi geetha i tried this and my 2 yr harshikaa kutti loved this a lot... actually it was very soft than normal chappathi.

GEETHA ACHAL said...

நன்றி கனகா...

நன்றி மாலினி..குட்டிமாவிற்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி...செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்தில் சந்தோசம்...

ஆமாம், இந்த சப்பாத்தி சாதரண சப்பாத்தியினை விட நன்றாகவே இருக்கும்.

vidya said...

vazhaka poriyal nice

Related Posts Plugin for WordPress, Blogger...