வெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney / Venkayam Pudina Chutney - Side Dish for Idly and Dosa


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1 பெரியது
·         தக்காளி – 1
·         புதினா – 1 கைபிடி
·         கொத்தமல்லி – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு

முதலில் வறுத்து அரைக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
·         காய்ந்தமிளகாய் – 3
·         தேங்காய் – 2 – 3 துண்டு
·         புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

கடைசியில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு + பெருங்காயம் – தாளிக்க
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
·         வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். புதினா + கொத்தமல்லியினை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தமபருப்பு + காய்ந்தமிளகாய் சேர்த்து வறுத்து கொண்டு தனியாக வைக்கவும்.


·         அதே கடாயில் வெங்காயம் + தக்காளியினை சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன், கடைசியில் புதினா + கொத்தமல்லி சேர்த்து மேலும் 1 நிமிடங்கள் வதக்கவும். இதனை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும்.


·         மிக்ஸியில் முதலில் வறுத்த பொருட்கள் + தேங்காய் + புளியினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


·         அரைத்த கலவையுடன் வதக்கி வைத்துள்ள பொருட்களை + தேவையான அளவு உப்பு + சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும். (மிகவும் மைய அரைக்க வேண்டாம்.)


·         கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சத்தான சட்னி ரெடி.


கவனிக்க:

  முதலில் வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு வதக்கிய பொருட்களை சேர்த்து அரைக்கவும். அப்பொழுதும் தான் சட்னி சுவையாக இருக்கும்.
40 comments:

ஜெய்லானி said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்...இந்த இட்லி எல்லாம் எனக்குதான் ..நாந்தான் ஃபஸ்டூஊஊஊஊ :-))

ஜெய்லானி said...

உடனே செய்யக்கூடிய எனக்கு பிடிச்ச சட்டினி இது :-)

Aparna said...

Unga recent chutney post ellaame usual chutney-ya vida romba different-a irukku. Super !

RAKS KITCHEN said...

Wonderful! I love mint chutney, this sounds really nice have to try next time when I make idly!

Jay said...

I am trying now for my crisp golden dosa..cant wait to taste..:P
Tasty Appetite

நிரூபன் said...

சிம்பிளான + சூப்பரான ரெசிப்பி.

Premalatha Aravindhan said...

wow geetha,ur chutney recipe are always delicious...enntha idly pathathu:)

மாய உலகம் said...

மினி இட்லி... ரெசிபி சூப்பர் வாழ்த்துக்கள்

Raji said...

This sounds like a wonderful chutney..will try this out soon.

Vardhini said...

Onion and mint is a new combo for chutney. Looks yummy.

Lakshmi said...

சுவையான குறிப்பு. படங்களும் செய்முறை விளக்கமும் நல்லா இருக்கு.

Valarmathi Sanjeev said...

Lovely and yummy chutney....perfect with idlis.

athira said...

சூப்பர் சட்னி அண்ட் இட்லி...


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அது ஜெய்க்கு இல்லை நோஓஓ:)), நான் சொல்லிவச்சிட்டேன் உள்ளால முதலயே எனக்குத்தான் என:)).

Kannan said...

சூப்பர் சமையல்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Pushpa said...

Very flavorful and yummy chutney.

S.Menaga said...

நல்ல வாசனையான சூப்பர்ர் சட்னி!!

Priya said...

Super flavourful chutney,love the addition of mints..

கோவை2தில்லி said...

அருமையான சட்னி. செய்து பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

குட்டி இட்லி பார்க்கவே நல்ல இருக்கு

ChitraKrishna said...

புதினா வாசம் மூக்கை துளைக்குது கீதா.... இட்லி சூப்பர்... ஒரே வாயில் லபக் லபக்!

ஆயிஷா அபுல் said...

அருமையான இட்லி,சட்னி.

jeyashrisuresh said...

flavourful and easy to make chutney

jeyashrisuresh said...

flavourful and easy to make chutney

Malini said...

hi geetha nice chutney... i too do this frequently but i always add ginger and garlic... will try this also...

அம்பலத்தார் said...

அம்மாதாயே உங்க புண்ணியத்திலை என் ஆத்துக்காரி புதிது புதுதான வாய்க்கு ருசியான அயிற்றமெல்லாம் செஞ்சுதாறாங்க

Sensible Vegetarian said...

I totally second Chitrakrishna, looks absolutely tempting.

GEETHA ACHAL said...

நன்றி ஜெய்லானி....

நன்றி அபர்ணா...கண்டிப்பாக செய்து பார்த்திவிட்டு சொல்லுங்க...

நன்றி ராஜி....அடுத்த முறை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஜெய்...ரொம்ப மகிழ்ச்சி..செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...நன்றாக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி நிரூபன்..

நன்றி ப்ரேமா..

நன்றி மாய உலகம்..

நன்றி ராஜி...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி வர்தினி...

GEETHA ACHAL said...

நன்றி லஷ்மி அம்மா..

நன்றி வளர்மதி..

நன்றி அதிரா...உங்களுக்கு இல்லாமலா...

நன்றி கண்ணன்..

நன்றி புஷ்பா..

GEETHA ACHAL said...

நன்றி மேனகா..

நன்றி ப்ரியா..

நன்றி ஆதி..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி சித்ரா...

GEETHA ACHAL said...

நன்றி ஆயிஷா..

நன்றி ஜெய்ஸ்ரீ..

நன்றி மாலினி..

நன்றி அம்பலத்தார்...ரொம்ப மகிழ்ச்சி..

நன்றி Sensible..

Kanchana Radhakrishnan said...

சூப்பர் சட்னி அண்ட் இட்லி...

இமா said...

இட்லி குட்டி குட்டியா அழகா இருக்கு. சட்னி... ட்ரை பண்ணிட்டு வந்து சொல்றேன்.

suthirecipe said...

hai
i am fan of ur recipes. i like this chutney with idli yummy.

adrinaalonajinivalan said...

very nice

adrinaalonajinivalan said...

hi geetha iam new to u r blog u r recipies r very nice .i have one doubt what is quinova

Mahi said...

கீதா,இந்தச் சட்னி செய்தேன்,ரொம்ப நல்லா இருந்தது,தேங்க்ஸ்!:)

Seetha said...

I tried this Chutney... came out yummy, my husband liked it very much... Thanks Geetha

vasanthi said...

i used to make mint thuvaiyal for only rice. this is very nice and tasty.i have got appreciation from husband for making this.

GEETHA ACHAL said...

நன்றி சீதா..

நன்றி வசந்தி...செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

Related Posts Plugin for WordPress, Blogger...