டோஃபு ரைஸ் - Tofu Riceசமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
         டோஃபு – 1/2 பக்கட்
·         வேகவைத்த சாதம் – 2 கப்
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·         வெங்காயம் – 1
·         பூண்டு – 5 பல்
·         பச்சைமிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 5 இலை
·         வெங்காய தாள் –Scallions – 2
·         கொத்தமல்லி – சிறிதளவு

முதலில் தாளிக்க:
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         சீரகம் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·         நறுக்கி கொள்ள கொடுத்துள்ள பொருட்களை வெட்டி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து பூண்டு +பச்சைமிளகாய் + வெங்காயம், கருவேப்பில்லை என ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.


·         வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இத்துடன் டோஃபுவினை உதிர்த்து சேர்த்து கொள்ளவும்.
·         அடிக்கடி கிளறிவிட்டு சுமார் 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும்.


·         இத்துடன் வேகவைத்த சாதம் + வெங்காயதாள் + கொத்தமல்லி சேர்த்து கிளறவும் மேலும 1 – 2 நிமிடங்கள் வேகவிடவும்.


·         சுவையான சத்தான டோஃபு ரைஸ் ரெடி.


கவனிக்க:
விரும்பினால் சாதம் கிளறுவதற்கு 2 நிமிடங்கள் முன்பாக, 1 முட்டையினை உடைத்து இதில் சேர்த்து கிளறினால் Egg Rice மாதிரியே இருக்கும்.

இதில் நான் பயன்படுத்தி இருப்பது Firm Tofu. விரும்பினால் Extra Firm Tofuவினை பயன்படுத்தலாம். (Silken Tofuவினை இதற்கு பயன்படுத்த வேண்டாம்.)

18 comments:

ஸாதிகா said...

பனீரில் ரைஸ் பிரமாதம்.

சசிகுமார் said...

super

Pushpa said...

Love this yummy rice,I make this too,its our family fav.

Lifewithspices said...

wow super simple perfect for lunch box .. i will sure try it am left with tofu..

Radhika said...

Romba healthyaana recipe.

Priya Suresh said...

Wat a healthy one pot meal, simply inviting..

Unknown said...

Delicious and healthy rice,love the adding of tofu...yummy.

Jeyashris Kitchen said...

nice addition of tofu in rice. quite a healthy version too

Sensible Vegetarian said...

Delicious and a very colorful one.

San said...

Healthy rice at its best and such a comfort rice to try.

San

KrithisKitchen said...

Naanum oru murai senchaen idhupola... paaka egg fried rice maadhiri irukku :)
Krithi's Kitchen
Event: Serve It - Steamed

Anonymous said...

just now now i tried onion chutney&oats dosai. excellent combination. thanks

Unknown said...

I love the idea of crumbling the tofu, geetha - never thought of doing that - This I must try - I am sure rice was fab :) thanks for sharing dear!

தெய்வசுகந்தி said...

Looks Yummy!!!

Aparna said...

super Geetha ! easy and healthy ! had a tofu packet sitting at home, so tried it out with egg..so good...thankyou again !! (Geetha, chicken green pulao recipe irundhaa post pannungalen. The one in which we grind green chillies, ginger garlic, coriander leaves etc., and then do . Thankyou !)

GEETHA ACHAL said...

நன்றி அபர்ணா...செய்து பார்த்துவிட்டு பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...நன்றி...

Raks said...

If tofu is cooked this way I can have tofu :)

Anonymous said...

What is the difference of silken tofu and firm tofu? And why did u say dont use the silken tofu..

Related Posts Plugin for WordPress, Blogger...