பேக்ட் கடலைப்பருப்பு வடை - Baked Chanadal Vadai / Kadalai Paruppu Vadai


I'm Back.....

நீண்ட இடைவெளியிற்கு பிறகு மீண்டும் ப்ளாக் பக்கம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி… என்னை நலம் விசாரித்த ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி….

சரி வாங்க….எப்பொழுதும் வடையினை எண்ணெயில் பொரிக்காமல் இப்படி பேக்ட் செய்து சாப்பிடுவது நல்லது… சுவையில் எந்த வித மாற்றமும் இருக்காது…..சுவையான சத்தான வடையினை செய்து பார்த்துவிட்டு உங்களுடைய அன்பான கருத்தினை தெரிவிக்கவும்….

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கடலைப்பருப்பு – 1 கப்
·        காய்ந்த மிளகாய் – 1
·        வெங்காயம் – 1
·        பச்சைமிளகாய் – 1
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        கொத்தமல்லி + கருவேப்பில்லை – சிறிதளவு
·        உப்பு – தேவைக்கு
·        எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :
·        கடலைப்பருப்பினை கழுவி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் + காய்ந்தமிளகாய் சேர்த்து சுமார் 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·        பிறகு, கடலைப்பருப்பு + காய்ந்தமிளகாய் + சோம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

·        வெங்காயம் + கொத்தமல்லி, கருவேப்பில்லை + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·        அரைத்த விழுது + பொடியாக நறுக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அவனை  400 Fயில் முற்சூடு செய்து கொள்ளவும்.

                       

·        அவனில் வைக்கும் ட்ரேயில் வடை மாவியின சிறிய சிறிய வடைகளாக தட்டி அதில் அடுக்கி அதன் மீது சிறிது எண்ணெயினை spray செய்து கொள்ளவும்.(கவனிக்க: நான் Non-stick Aluminium Foil பயன்படுத்தி இருப்பதால் எண்ணெயினை வடைகளை அடுக்குவதற்கு முன்பு Spray செய்யவில்லை. இல்லை என்றால், சிறிது எண்ணெய் ட்ரேயில் spray செய்து கொண்டால் நல்லது.)

                       

·        ட்ரேயினை அவனில் 400Fயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

                         

·        ட்ரேயினை வெளியில் எடுத்து வடைகளை திருப்பி போட்டு சிறிது எண்ணெய் Spray செய்து சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும். கடைசி 5 நிமிடங்கள் Broil Modeயில் வேகவைத்தால் நன்றாக க்ரிஸ்பியாக இருக்கும்.

                           

·        சுவையான எளிதில் செய்ய கூடிய சத்தான கலோரிஸ் குறைவான வடை ரெடி.
  19 comments:

Padhu Sankar said...

Really ! won't there be any difference in taste while baking.
Nice low fat vadai

ஸாதிகா said...

கீதா ஆச்சல் ரொம்ப நாட்களுக்கு பின் வந்திருக்கீங்க.பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

எண்ணெயில் இல்லாமல் வடை சுட்டு காட்டி இருக்கீங்க.சூப்பர்ப்/

Priya ram said...

ஹாய் கீதா, எங்க ரொம்ப நாளா காணாம போயிட்டீங்க.... வடை கிரிஸ்பி - யா சூப்பர் ரா இருக்கு......

ADHI VENKAT said...

வாவ்! பேக்டு வடை பிரமாதம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பக்கம் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

KrithisKitchen said...

Nice to have you back!! Baked vadai romba pramadham!! Try pannanum kandippa...

Radha rani said...

எண்ணெய் குறைவாக செய்யும் குறிப்புகள் மிக ஆரோக்கியமானது..வடை பார்க்க எண்ணெய் இல்லாமல் மொறுமொறுப்பாக தெரிகிறது.அருமை.

Christy Gerald said...

Awesome Baked Vada recipe Dear. I too tried it n it turned out yumm

Lifewithspices said...

ada super idea i will try it..

foodydelight said...

very delicious.
You have a wonderful blog here.
Do visit my new blog in your free time.
http://www.foodydelight.com/

Lali said...

Hi Geetha! Glad to see you after a long gap, Delightful and healthy recipe as usual. Keep going!

அம்பலத்தார் said...

ரொம்பநாளுக்கு அப்புறம் வந்திருக்கிறிங்க. அதுவும் எண்ணையில் பொரிக்காமல் வடை சுடும் நல்லதொரு சமையல் குறிப்புடன்... நன்றி.

Vijiskitchencreations said...

கீதா வாங்க எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்களுக்கு பின் அதுவும் நல்ல ஒரு ஹெல்தியான ரெசிப்பி. சூப்பர். நான் இதை விரைவில் செய்வேன் ஏன் என்றால் நானும் என்ணெய் இல்லாமல் செய்கிற ரெச்சிப்பிஸ் தான் நிறய்ய,இப்ப எங்க வீட்டில்.

Mahi said...

Glad to see you back Geetha! Nice vadai!

Asiya Omar said...

கீதா கிட்டதட்ட 4 மாதங்கள் கழித்து திரும்பி வந்து வழக்கம் போல ஆரோக்கியமான குறிப்பு,சூப்பர்.
தொடர்ந்து குறிப்புக்கள் கொடுங்க.

Anonymous said...

கீதா ரொம்ப ஹெல்தி வடை செஞ்சு காமிச்சு இருக்கீங்க. உங்க ப்ளாக் பார்த்து கட்லெட் பேக் செஞ்சேன் அருமையா இருந்தது. நெறைய ஹெல்தி ரேசிபிஸ் கொடுங்க

San said...

Welcome back, good to see you after a while. Baked lentil vada is so captivating. Oil free recipe is always good.

Sensible Vegetarian said...

Love to see your post after a long time. Vadai looks superb.

Inviting you to participate in Cook Eat Delicious Desserts Event- Wholesome Desserts with no refined sugar or flours-Event Ending on 31st March

சாந்தி மாரியப்பன் said...

எண்ணெய் அதிகம் சேர்க்க விருப்பப்படாத அதே சமயம் வடை சாப்பிட விருப்பமுள்ளவர்களுக்கு ஏத்த குறிப்பு.. தாங்கீஸ்..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

Related Posts Plugin for WordPress, Blogger...