கோவைக்காய் சட்னி - Kovaikkai Chutney / Tindora Chutney - Side Dish for Idly and Dosaகாலை நேர சிற்றூண்டிக்கு எளிதில் செய்ய கூடிய ஹெல்தியான சட்னி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        கோவைக்காய் – 100 கிராம் ( சுமார் 10 – 15 )
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பச்சைமிளகாய் – 2 - 3
·        தேங்காய் துறுவல் – 1/4 கப்
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        புளி - சிறிதளவு
·        உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க:
·        எண்ணெய் – சிறிதளவு
·        கடுகு, சீரகம், உளுத்தமபருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
கோவைக்காயினை வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாயினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து 4 – 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கி கொள்ளவும்.மிக்ஸியில் முதலில் தேங்காய் துறுவலினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். அத்துடன் வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி + உப்பு +புளி சேர்த்து கொரகொரவென அரைத்து எடுக்கவும்.


தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான சத்தான சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும்.


குறிப்பு :
விரும்பினால் தேங்காயினை தவிர்த்து கொள்ளலாம்.

அதற்கு பதிலாக சிறிது உளுத்தமப்ருப்பினை வறுத்து அரைத்து கொள்ளலாம்.

சட்னி அரைக்கும் பொழுது கண்டிப்பாக சிறிதளவு புளி சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

இன்ஸ்டண்ட் ஒட்ஸ் கோதுமை ரவா இட்லி - Instant Oats Wheat Rava Idli - Indian Oats Recipe / Idly Varieties


சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய காலை நேர சிற்றுண்டி. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ஒட்ஸ் – 1 கப்
·        கோதுமை ரவை – 1/2 கப்
·        தயிர் – 1/2 கப்
·        உப்பு – தேவைக்கு
·        பேக்கிங் சோடா – 1/2 தே.கரண்டி

பொடியாக நறுக்கி கொள்ள :
·        பீன்ஸ் – 6
·        கராட் - பாதி
·        பச்சைமிளகாய் – 2 – 3
·        கருவேப்பில்லை, கொத்தமல்லி – சிறிதளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – தேவைக்கு
·        கடுகு – 1/2 தே.கரண்டி
·        சீரகம் – 1/2 தே.கரண்டி
·        உளுத்தமபருப்பு – 1 தே.கரண்டி
·        முந்திரி – 5 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)

செய்முறை :
கடாயில் ஒட்ஸினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும். சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரவென பொடித்து கொள்ளவும்.


பீன்ஸினை , பச்சைமிளகாய் , கருவேப்பில்லை + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கராட்டினை துறுவி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து பீன்ஸ் + கராட் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.


வதக்கிய பொருட்களுடன் கோதுமை ரவையினை சேர்த்து வறுத்து கொள்ளவும்.


பொடித்த ஒட்ஸ் + வதக்கிய பொருட்கள் + தேவையான அளவு உப்பு + தயிர் + 1/2 கப் தண்ணீர் + கொத்தமல்லி + பேக்கிங் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்.


மாவினை 5 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு, இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும். (விரும்பினால் உடனேவும் மாவினை தட்டில் ஊற்றி வேகவிடலாம். )


சுவையான சத்தான ஒட்ஸ் ரவா இட்லியினை சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இட்லி மாவு பதத்திற்கு கரைக்கும் பொழுது நிறைய தண்ணீர் ஊற்ற தேவையில்லை. அப்படி சேர்த்தால் இட்லி நன்றாக இருக்காது.

மாவினை இட்லி தட்டில் ஊற்றும் பொழுது கெட்டியாக தான் இருக்க வேண்டும்.

அவரவர் விரும்பிய காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.

ஸ்டஃப்டு மஷ்ரூம் - Stuffed Mushroom with peasஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        மஷ்ரூம் – 10 பெரியது
·        பிஸ்ஸா சாஸ் – சிறிதளவு
·        மிளகு தூள் – 1 தே.கரண்டி
·        ஆலிவ் ஆயில் – சிறிதளவு
·        உப்பு - தேவைக்கு

ஸ்டஃபிங் செய்ய :
·        Mutligrain Bread – 2 துண்டுகள்
·        பச்சை பட்டாணி – 1/4 கப்
·        புதினா, கொத்தமல்லி – சிறிதளவு
·        பச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
·        உப்பு – 1/4 தே.கரண்டி

கடைசியில் சேர்க்க :
·        சீஸ் - சிறிதளவு

செய்முறை :
ஸ்டஃபிங் :பிரட்யினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும். அத்துடன், பட்டாணி+ புதினா, கொத்தமல்லி + பச்சைமிளகாய் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


மஷ்ரூமினை சுத்தம் செய்து அதனுடைய காம்பு பகுதியினை நீக்கி கொள்ளவும். ஆலிவ் ஆயில் + உப்பு + மிளகுதூள் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையினை மஷ்ரூமின் மீது தடவி விடவும்.


பிறகு, மஷ்ருமீன் குழிவான பகுதியில்(காம்பு நீக்கிய பகுதி) 1 தே.கரண்டி அளவு பிஸ்ஸா சாஸினை ஊற்றி அதன் மீது சிறிது ஸ்டஃபிங்கினை வைக்கவும்.


அவனை 400Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். அவனில் வைக்கும் ட்ரேயில் ஸ்டஃபிங் செய்த மஷ்ரூமினை சுமார் 10 – 15 நிமிடங்கள் bake modeயில் வேக வைக்கவும்.


ட்ரேயினை வெளியில் எடுத்து அதன் மீது சீஸினை தூவி மேலும் 2 – 3 நிமிடங்கள்  Broil Modeயில் வைக்கவும்.


சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக் ரெடி.

குறிப்பு :
பிஸ்ஸா சாஸிற்கு பதிலாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல சாஸ் சேர்த்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...