25 விதமான சத்தான காலை நேர டயட் சிற்றூண்டி - இட்லி வகைகள் - 25 Types of Healthy Diet Idly Varietiesமிகவும் Healthyயான சத்தான காலை நேர டிபன்..இந்த இட்லி வகைகளினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber) மற்றும் புரோட்டின்(Protein) இருக்கின்றது…இந்த இட்லி அரிசியில் செய்யும் இட்லியினை விட மிகவும் Softஆக இருக்கும்.

பார்லி இட்லி உடலிற்கு மிகவும் நல்லது…காலை நேர சிற்றுண்டி மிகவும் Healthyயாக இருக்க விரும்பினால் கண்டிப்பாக் இந்த இட்லியினை try செய்து பாருங்க..

மிகவும் எளிதில் செய்ய கூடிய இட்லி….ஒட்ஸினை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது…அத்துடன் குழந்தைகளுக்கும் ஏற்ற மாதிரி இப்படி செய்து கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவாங்க…

இட்லியினை மிகவும் சத்துள்ள இட்லியாக செய்ய விரும்பினால் கண்டிப்பாக கொண்டைக்கடலையினை சேர்த்து செய்வது மிகவும் நல்லது…இட்லி சத்தான காலை உணவா??? என்பதினை அறிய கொண்டைக்கடலை இட்லியினை பாருங்க…

கோதுமை ரவையில் உப்புமா செய்து சாப்பிடுவோம்…அதுவே இட்லி செய்து சாப்பிட்டால் கூடுதல் சுவையுடன் இருக்கும்…சூப்பரான ஸ்பாஞ்சி இட்லி….

க்ரிட்ஸ் என்பது நன்றாக காய்ந்த சோளத்தின் ரவை…இதில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது… காலை நேர சிற்றூண்டிக்கு ஏற்ற உணவு..

நாம் வாங்கும் பல பொருட்கள் எல்லாம் சுத்தம் செய்து மேல் தோலினை நீக்கி தான் கிடைக்கின்றது..அதாவது “WHOLE GRAIN”ஆக கிடைப்பது இல்லை…ஆனால் நமக்கு அப்படி “WHOLE GRAIN” ஆக கிடைப்பது கினோவா மற்றும் ஒட்ஸ்…ஆக அதனை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்…

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கொள்ளினை தினமும் உணவில் எதாவது ஒரு வகையில் சேர்த்து கொள்வது நல்லது. அதே சமயம் கொள்ளு அதிக சூட்டினை ஏற்படுதுவதால் நிறைய தண்ணீர், மோர் போன்றவற்றினை குடிப்பது நல்லது.

ஏற்கனவே சொன்னது போல நமக்கு Whole Grainஆக கிடைக்கும் இரண்டு பொருட்களில் ஒன்று ஒட்ஸ்…அத்துடன் க்ரிட்ஸ் சேர்த்து செய்தால் கண்டிப்பாக அனைத்து சத்துகளும் நிரம்பிய இட்லி…

கார்ன்மீல் என்பது ரவையினை போல இருப்பதால் ரவையிற்கு பதிலாக சத்தான உணவினை சேர்த்து கொண்ட திருப்தி இருக்கும்..கார்ன்மீலில் அதிக அளவு  Protein இருக்கின்றது/

அவலினை இட்லி செய்யும் பொழுது சேர்த்தாலே இட்லி சூப்பராக இருக்கும்..அதுவே அவலில் மட்டுமே இட்லியினை செய்தால் கேட்கவே வேண்டாம்…சூப்பரோ சூப்பர்ப்…

எதுவுமே எளிதில் செய்ய கூடியதாக இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி…அதுவும் சத்தான உணவினை எளிதில் சுவையாக செய்தால் கூடுதல் சந்தோசம் தானே…செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

கைமா இட்லியினை மீதம் உள்ள இட்லியினை எண்ணெயில் பொரித்து அத்துடன் சிறிது மசாலாவினை பிரட்டி செய்வது…இதனை Healthy optionஆக எண்ணெயில் பொரிக்காமல் அவனில் வைத்து Bake செய்து மசாலாவுடன் கலந்து செய்து இருக்கின்றேன்…அதே சுவையில் மாறாமல் சத்தான மாலை நேர ஸ்நாக்…

பல்கர் என்பது ஒரு வகை கோதுமை உணவு…கோதுமையினை வேகவைத்து பிறகு அதனை காயவைத்து ரவை போல உடைத்தால் அது தான் பல்கர்…கோதுமை ரவையினை விட அதிக சத்துகள் நிரம்பியது பல்கர்…

பாசிப்பருப்பில் அதிக அளவு நார்சத்து, Protein, Vitamin C , கல்கியம் , Magnesium, Phosphorous மற்றும் potassium அதிக அளவில் இருக்கின்றது...இந்த இட்லியில் வெரும் பாசிப்பருப்பினை ஊறவைத்து அரைத்து செய்த இட்லி என்பதால் உடலிற்கு மிகவும் நல்லது.

இந்த வகை கார்ன்மீல் மஞ்சள்கலரில் இருக்கும். இதில் coarse, Fine cornmeal என்று விதவிதாமாக இருக்கும். Coarse யினை வாங்கினால் சிறிது மிக்ஸியில் 1 நிமிடம் அரைத்து கொண்டு சேர்த்து கொள்ளலாம்.

பார்லியில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளதால் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அத்துடன் க்ரிட்ஸ் சேர்த்து செய்வதால் கூடுதல் நார்சத்து கிடைக்கின்றது.

Flax seedயில் அதிக அளவு Omega-3 இருப்பதால் அசைவம் சாப்பிடாதவர்கள் இதனை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

இந்த விதையினை அப்படியே சாப்பிட கூடாது…இதனை எப்பொழுதுமே பொடித்து தான் சாப்பிட வேண்டும்.

எளிதில் செய்ய கூடிய மாலை நேர டிபன்…இதில் நமக்கு விருப்பத்திற்கு ஏற்றார் போல காய்கறிகள், நட்ஸ் போன்றவையினை சேர்த்து செய்யலாம்…

இந்த செய்முறையில் ரவாயினை உளுத்தமாவுடன் கலந்து இட்லி மாவு மாதிரி புளித்த பிறகு இட்லி செய்யப்படும்…அரிசிக்கு பதிலாக ரவாயினை சேர்த்து செய்வதால் வேலை மிச்சம்..

எப்பொழுதும் செய்யும் இட்லி உப்புமாவினை விட கோதுமை ரவையில் செய்யும் உப்புமா கூடுதல் சுவையுடன் இருக்கும்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…

ஒட்ஸில் அதிக அளவு நார்சத்து, கல்சியம், Iron , Thiamine, Magnesium ,Phosphorous & Manganese போன்றவை இருக்கின்றது… அத்துடன் கார்ன்மீலில் அதிக அளவு  Protein இருப்பதால் காலை நேர சத்தான சிற்றூண்டி

இட்லிமாவு மீதம் இருந்தால் அத்துடன் சிறிது வெங்காயம் சேர்த்து ஊத்தப்பம் மாதிரி செய்து சாப்பிடுவோம்..மாவு காலியானால் சரி என்ற நினைப்பே இருக்கும்..ஒரு மாறுதலுக்காக இந்த கொழுக்கட்டையினை செய்து பாருங்க…அப்பறம் மாவினை எப்படி காலி செய்வது என்ற கவலையே இருக்காது…

Cholesterol யினை குறைக்க விரும்புவோர் பிரவுன் ரைஸினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது…பிரவுன் ரைஸ் என்பது நெல்லின் தோலினை மட்டும் நீக்கும் அரிசி…அதாவது கைக்குத்தல் அரிசி…


அவசர உலகிற்கு ஏற்ற இட்லி…எந்த வித ஸ்பெஷல் இட்லி பாத்திரமும் இல்லாமல் செய்ய கூடிய 1 நிமிட இட்லி…

சும்மா ஜாலியாக இதனையும் ட்ரை செய்யுங்க..

இட்லிமாவினை வைத்து செய்ய போண்டா…இது மிகவும் சுவையாக இருக்கும்…தீடீர் விருந்தாளியினை இதனை செய்து கொடுத்து பாராட்டு வாங்கிவிடலாம்….


1 நிமிடம் மைக்ரோவேவ் இட்லி & தக்காளி கார சட்னி - 1 Minute Microwave Idly / Tomato Kara chutney - Side Dish for Idly and Dosaமிகவும் எளிதில் 1 நிமிடத்தில் இட்லியினை செய்துவிடலாம்… இந்த இட்லி செய்ய எந்த வித Special இட்லி பாத்திரம் தேவையில்லை…எல்லா வித மைக்ரோவேவ் கிண்னங்களிலும் செய்யலாம்…

நானும் என்னுடைய Friend மஞ்சுளாவும் , Microwave Cake பற்றி பேசி கொண்டு இருந்த பொழுது தான் இதில் இட்லி செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று Test செய்து பார்த்தோம் ..மிகவும் அருமையாக அப்படியே இட்லி பாத்திரத்தில் செய்தது போலவே இருந்தது…


அவரவர் Microwaveயின் திறனை பொருத்து Time பார்த்து கொள்ளுங்க…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 நிமிடம்
தேவையான பொருட்கள் :
 • இட்லி மாவு
 • எண்ணெய் – Spray செய்து கொள்ள (விரும்பினால்)

செய்முறை :
Microwave கிண்ணத்தில் எண்ணெயினை Spray செய்து அதில் 1 கரண்டி இட்லி மாவு ஊற்றவும்.

அதனை Microwaveயில் 1 நிமிடம் வைக்கவும்.

இப்பொழுது சுவையான எளிதில் செய்ய கூடிய இட்லி ரெடி.

குறிப்பு :
எனக்கு இந்த இட்லி செய்ய 1 Minute 10 seconds தேவைப்பட்டது. இதுவே குட்டி கிண்னத்தில் சரியாக 1 நிமிடமே போதுமாக இருந்தது.

தக்காளி கார சட்னி

இந்த சட்னியில் மிளகாய் தூளினை சேர்க்காமல், காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்…மிகவும் காரசராமாக இருக்கும்… நன்றி Prema…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
 • வெங்காயம் – 1
 • தக்காளி – 2
 • காய்ந்த மிளகாய் – 5 – 6
 • மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
 • உப்பு – தேவையான அளவு

 முதலில் தாளிக்க:
 • எண்ணெய் – 2 மேஜை கரண்டி
 • கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க

செய்முறை :
வெங்காயம் , தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி + உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

காய்ந்த மிளகாயினை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொண்டு அதனை சட்னியில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

சுவையாக தக்காளி கார சட்னி ரெடி.


நீலகிரி பிரியாணி - Nilgiri Biryaniமிகவும் சுவையான பிரியாணி…இந்த பிரியாணியின் ஸ்பெஷலிடி,
        இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை….
·        வெங்காயத்தினை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து அதனை அரைத்து கொள்ள வேண்டும்.
·        புதினா+ கொத்தமல்லி + பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும்.
·        தனியாக கலர் எதுவும் சேர்க்காமலே மிகவும் கலர்புல்லாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்….நன்றி ஆசியா அக்கா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        சிக்கன் – 1/2 கிலோ
·        இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·        தயிர் – 1/2 கப்
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        எண்ணெய் & நெய் – சிறிதளவு
·        உப்பு – தேவையான அளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        கரம்மசாலா – 1 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·        ஏலக்காய், கிராம்பு ,பட்டை – தலா இரண்டு
·        முழு மிளகு – 10
·        பிரியாணி இலை – 1

அரைத்து கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        புதினா, கொத்தமல்லி – தலா அரை கப்
·        பச்சைமிளகாய் – 3
·        முந்திரி – 10

செய்முறை :
·        அரிசியினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

·        வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து Microwaveயில் 4 நிமிடங்கள் வேகவிடவும். இதனை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரவெனெ அரைத்து கொள்ளவும்.

·        புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் + தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். முந்திரியினை தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

·        இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன் அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

·        பிறகு அரைத்த புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

·        இத்துடன் தூள் வகைகள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

·        அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியவுடன், சிக்கன் + முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

·        சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டி, எண்ணெய் மேலே வரும்.

·        அந்த சமயம், தேவையான அளவு தண்ணீர் + பாஸ்மதி அரிசி + உப்பு சேர்த்து வேகவிடவும்.

·        பிரஸர் குக்கரில் சுமார் 1 விசில் வரும்வரை வேகவிடவும். கடைசியில் எலுமிச்சை சாறு விட்டு கிளறிவிடவும்.

·        சுவையான நீலகிரி பிரியாணி ரெடி.

குறிப்பு :
ஊறவைத்த அரிசியினை சிறிது நெயில் 1 நிமிடம் வதக்கிய பிறகு பிரியாணி செய்தால் சாதம் நன்றாக இருக்கும்…

முட்டையில்லாத ப்ளுபெர்ரி கப் கேக் - Eggless Blueberry Cupcakes - Celebrationஎன்னுடைய ப்ளாக் இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான ஹிட்களை பெற்றுள்ளது…உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல….என்னை எப்பொழுது ஊக்கவிக்கும் ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி….கேக் எடுத்து கொள்ளுங்க….


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:

 • மைதா மாவு (All Purpose Flour) – 2 கப் + 1/4 கப்
 • சக்கரை – 1 கப்
 • ப்ளூபெர்ரீஸ்(Blueberries) – 1 கப்
 • வெண்ணெய் (Butter) – 4 மேஜை கரண்டி
 • வென்னிலா ஏசன்ஸ் – சிறிதளவு (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
 • பேங்கிங் பவுடர் – 1 மேஜை கரண்டி
 • தயிர் – 3/4 கப்செய்முறை :
Blueberriesயின 1/4 கப் மைதா மாவில் பிரட்டி கொள்ளவும். வெண்ணெயினை Room temperatureயில் வைக்கவும். வெண்ணெய் + சக்கரையினை நன்றாக கலந்து கொண்டு அத்துடன் தயிரினை சேர்த்து கலக்கவும்.

மைதா மாவு + பேக்கிங் பவுடர் சேர்த்து 2 – 3 முறை சலித்து கொள்ளவும். இதனை சக்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும். அத்துடன் பெர்ரீஸையும் சேர்த்து கலக்கவும்.

அவனை 375Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். கலவையினை சிறிய சிறிய கப்பில் ஊற்றி கொள்ளவும்.

சுமார் 15 – 20 நிமிடங்கள் வேகவிடவும். வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

சுவையான சத்தான கப் கேக் ரெடி…


கவனிக்க:
தயிருக்கு பதிலாக 2 முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டையினை சேர்க்கும் பொழுது நன்றாக அடித்து கொண்டு பிறகு கலவையில் சேர்க்கவும்.

கேக் நன்றாக வெந்துவிட்டதா என்பதினை பார்க்க Toothpickயினை கேக் மீது நுழைத்து ஒட்டாமல் வர வேண்டும். இல்லை என்றால் மேலும் சிறிது நேரம்வேகவிடவும்.

இதே மாதிரி Readymade Cake Mixயில் Blueberries சேர்த்து செய்யலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...