1 நிமிடம் மைக்ரோவேவ் இட்லி & தக்காளி கார சட்னி - 1 Minute Microwave Idly / Tomato Kara chutney - Side Dish for Idly and Dosaமிகவும் எளிதில் 1 நிமிடத்தில் இட்லியினை செய்துவிடலாம்… இந்த இட்லி செய்ய எந்த வித Special இட்லி பாத்திரம் தேவையில்லை…எல்லா வித மைக்ரோவேவ் கிண்னங்களிலும் செய்யலாம்…

நானும் என்னுடைய Friend மஞ்சுளாவும் , Microwave Cake பற்றி பேசி கொண்டு இருந்த பொழுது தான் இதில் இட்லி செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று Test செய்து பார்த்தோம் ..மிகவும் அருமையாக அப்படியே இட்லி பாத்திரத்தில் செய்தது போலவே இருந்தது…


அவரவர் Microwaveயின் திறனை பொருத்து Time பார்த்து கொள்ளுங்க…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 நிமிடம்
தேவையான பொருட்கள் :
  • இட்லி மாவு
  • எண்ணெய் – Spray செய்து கொள்ள (விரும்பினால்)

செய்முறை :
Microwave கிண்ணத்தில் எண்ணெயினை Spray செய்து அதில் 1 கரண்டி இட்லி மாவு ஊற்றவும்.

அதனை Microwaveயில் 1 நிமிடம் வைக்கவும்.

இப்பொழுது சுவையான எளிதில் செய்ய கூடிய இட்லி ரெடி.

குறிப்பு :
எனக்கு இந்த இட்லி செய்ய 1 Minute 10 seconds தேவைப்பட்டது. இதுவே குட்டி கிண்னத்தில் சரியாக 1 நிமிடமே போதுமாக இருந்தது.

தக்காளி கார சட்னி

இந்த சட்னியில் மிளகாய் தூளினை சேர்க்காமல், காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து சேர்க்க வேண்டும்…மிகவும் காரசராமாக இருக்கும்… நன்றி Prema…

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 2
  • காய்ந்த மிளகாய் – 5 – 6
  • மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

 முதலில் தாளிக்க:
  • எண்ணெய் – 2 மேஜை கரண்டி
  • கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க

செய்முறை :
வெங்காயம் , தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். காய்ந்த மிளகாயினை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.

கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி + உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

காய்ந்த மிளகாயினை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து கொண்டு அதனை சட்னியில் சேர்த்து நன்றாக வதக்கவும்.

சுவையாக தக்காளி கார சட்னி ரெடி.


20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இட்லி கேக் மாதிரி இருக்கு...

யப்பா... தக்காளி கார சட்னி... !!!

நன்றி...

Sangeetha Nambi said...

Wow !! Never tried this...
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

மைக்ரோவேவில் மெத்தென்ற இட்லியும் அருமையான சட்னியும் சூப்பர்

Priya Satheesh said...

sooper...nalla idea..kandipa try panuraen..

angelin said...

Wowwwww!!! microwave idlis look yummilicious !!!

shall try this to day .iv'e got idli batter at home ..

.....
(iv'e added sukkaangaai vatrals photo in the post ..)

Kanchana Radhakrishnan said...

மைக்ரோவேவ் இட்லி சூப்பர்.

Vijayalakshmi Dharmaraj said...

lovely idli... n i too made this idli in the same way...

Join my first event - FEAST FOR YOUR GURU
VIRUNTHU UNNA VAANGA

Lakshmi said...

நானும் இதே முறையில்தான் என் பேரப்பசங்களுக்கு இட்லி செய்து கொடுப்பேன்

குட்டிபிசாசு said...

piramaatham. naanum muyarchchikkiren.

குட்டிபிசாசு said...

பிரமாதம். நானும் முயற்சிக்கிறேன்.

Asiya Omar said...

வாவ்! முயற்சிக்கிறேன்..கீதா.

Premalatha Aravindhan said...

wow microwave idly super,luks so soft and yum... wonderful combo with chutney...Thanks a lot for trying geetha:)

Kalpana Sareesh said...

wow will try it.. thanks for sharing ..

ஹுஸைனம்மா said...

இந்தியாவில் மைக்ரோவெவ் ஓவன் வாங்கியபோது, அதனோடு (microwave-able) இட்லி பாத்திரம் ஒன்று தந்தார்கள். எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலேயே சும்மா வைத்திருக்கிறேன். சாதாரணமாக, செய்வது போல, பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, தட்டுகளில் மாவு ஊற்றி அவித்து எடுக்கலாமா? பாத்திரத்திற்கு மூடியும் (lid) உண்டு.

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்...

நன்றி சங்கீதா...

நன்றி ஸாதிகா அக்கா..

நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி ஏஞ்சலின்..கண்டிப்பாக எப்படி வந்ததுனு சொல்லுங்க...

GEETHA ACHAL said...

நன்றி கஞ்சனா..

நன்றி விஜி...

நன்றி லஷ்மி அம்மா..குட்டிஸிற்கு ரொம்பவும் பிடிக்கும்...நமக்கு வேலை மிச்சம்..

நன்றி குட்டிபிசாசு..

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ப்ரேமா..

GEETHA ACHAL said...

நன்றி கல்பனா..

நன்றி ஹுஸைனம்மா...நான் அதனை பற்றி வேள்விபட்டு இருக்கின்றேன்...ஆனால் செய்தது இல்லை...அந்த பாத்திரதினை எப்படி பயன்படுத்துவது என்று Book எதுவும் கொடுக்கவில்லையா...

நீங்க இட்லி செய்வது போலவே Microwave பாத்திரத்திலும் தண்ணீர் ஊற்றி வேகவிட்டு பாருங்க..நன்றாக வரும் என்று தான் நினைக்கிறேன்..

இமா said...

எனக்கு இட்லியை விட சட்னி பிடிச்சிருக்கு கீதா.

jeevitha jagadeesh said...

wow super...im going to try this today.....

rajesh raj said...

your biriyani recepies so yummy.you just try hotel pandiyas
(washermenpet) biriyani once. find out and please let me know how to prepare like that.really very fantastic smell and taste very very good.

Related Posts Plugin for WordPress, Blogger...