முட்டையில்லாத ப்ளுபெர்ரி கப் கேக் - Eggless Blueberry Cupcakes - Celebrationஎன்னுடைய ப்ளாக் இதுவரை 10 லட்சத்திற்கும் மேலான ஹிட்களை பெற்றுள்ளது…உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல….என்னை எப்பொழுது ஊக்கவிக்கும் ப்ளாக் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி….கேக் எடுத்து கொள்ளுங்க….


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:

  • மைதா மாவு (All Purpose Flour) – 2 கப் + 1/4 கப்
  • சக்கரை – 1 கப்
  • ப்ளூபெர்ரீஸ்(Blueberries) – 1 கப்
  • வெண்ணெய் (Butter) – 4 மேஜை கரண்டி
  • வென்னிலா ஏசன்ஸ் – சிறிதளவு (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
  • பேங்கிங் பவுடர் – 1 மேஜை கரண்டி
  • தயிர் – 3/4 கப்செய்முறை :
Blueberriesயின 1/4 கப் மைதா மாவில் பிரட்டி கொள்ளவும். வெண்ணெயினை Room temperatureயில் வைக்கவும். வெண்ணெய் + சக்கரையினை நன்றாக கலந்து கொண்டு அத்துடன் தயிரினை சேர்த்து கலக்கவும்.

மைதா மாவு + பேக்கிங் பவுடர் சேர்த்து 2 – 3 முறை சலித்து கொள்ளவும். இதனை சக்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும். அத்துடன் பெர்ரீஸையும் சேர்த்து கலக்கவும்.

அவனை 375Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். கலவையினை சிறிய சிறிய கப்பில் ஊற்றி கொள்ளவும்.

சுமார் 15 – 20 நிமிடங்கள் வேகவிடவும். வெளியில் எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

சுவையான சத்தான கப் கேக் ரெடி…


கவனிக்க:
தயிருக்கு பதிலாக 2 முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டையினை சேர்க்கும் பொழுது நன்றாக அடித்து கொண்டு பிறகு கலவையில் சேர்க்கவும்.

கேக் நன்றாக வெந்துவிட்டதா என்பதினை பார்க்க Toothpickயினை கேக் மீது நுழைத்து ஒட்டாமல் வர வேண்டும். இல்லை என்றால் மேலும் சிறிது நேரம்வேகவிடவும்.

இதே மாதிரி Readymade Cake Mixயில் Blueberries சேர்த்து செய்யலாம்.


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான செய்முறை... நன்றி...

10 Lakhs...!!!

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

சந்திர வம்சம் said...

தங்களின் சிற்றுண்டி செய்முறை, அதனை படத்துடன் வெளியிடும் பாங்கு அனைத்தும் மிக அருமை.பார்க்கவே நாவில் நீர் ஊற்கிறது!

Priyaram said...

ப்ளு பெர்ரி ஸ்டார் கப் கேக் ரொம்ப நல்லா இருக்கு கீதா...

Related Posts Plugin for WordPress, Blogger...