ஹார்ட் ஹேப் கொரியன் முட்டை ஆம்லெட் - Heart Shape Korean Egg Omelet - Valentine Special Recipesகுழந்தைகளுக்கு விதவிதமான வடிவில் உணவுகள் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…எப்பொழுதும் வட்ட வடிவில் ஆம்லெட் செய்து கொடுத்துவிட்டு, ஒரு மாறுதலாக ஹார்ட் வடிவில் செய்து கொடுத்தால் மிகவும் சந்தோசம் படுவாங்க…

இந்த கொரியன் ஸ்டைல் ஆம்லெட் செய்வதற்கு எந்த ஒரு ஸ்பெஷல் Pan அல்லது Cookie Cutters தேவையில்லை….நாம் எப்பொழுதும் செய்யும் panயே போதும்…சரி…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…நன்றி பாயிஜா

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        முட்டை – 5
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – தேவைக்கு

பொடியாக நறுக்கிய கொள்ள:
·        வெங்காய தாள் – 1
·        காரட் – சிறிய துண்டு (Baby Carrots – 3)
·        குடைமிளகாய் – 1/4

செய்முறை :
வெங்காய தாள் + காரட் + குடைமிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையினை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அத்துடன் சிறிதளவு தண்ணீர் + உப்பு சேர்த்து Forkயினால் நன்றாக அடித்து கொள்ளவும்.

பொடியாக நறுக்கி வைத்துள்ள பொருட்களை முட்டையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது கலந்துள்ள அளவு மூன்று ஆம்லெட் போடும் அளவிற்கு இருக்கும்.

ஆம்லெட் பனில் சிறிது எண்ணெய் ஊற்றி கலந்து வைத்துள்ள முட்டைகலவையில் ஒரு ஆம்லெட் போடும் அளவிற்கு ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.

எப்பொழுதும் ஆம்லெட் போடும் பொழுது ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போடுவோம்…ஆனால் இந்த ஆம்லெட் செய்யும் பொழுது திருப்பி போட கூடாது…மெதுவாக கரண்டியினால் ஆம்லெடுகளை சுற்றிவிட வேண்டும்...

ஒரு ஆம்லெட் சுற்றிவிட்ட பிறகு, மீண்டும் சிறிது எண்ணெயினை பனில் ஊற்றி, இன்னொரு ஆம்லெட் போடுவதற்கான கலவையினை பனில் ஊற்றவும். அதே போல ஆம்லெடினை சுற்றிவிடவும். இதே போல எல்லா கலவையிலும் செய்து கொள்ளவும்.

இப்பொழுது சுவையான கொரியன் ஆம்லெட் ரெடி.

இதனை சிறிது நேரம் ஆறவிட்டு 1” துண்டுகளாக வெட்டி அப்படியே பரிமாறலாம்…

Heart Shape செய்ய கட் செய்துள்ள ஒரு பகுதியினை Diagonalஆக் மீண்டும் வெட்டிகொள்ளவும்.

ஒரு பக்கம் கட் செய்த முட்டை அப்படியே இருக்க, மறுபக்கம் உள்ள துண்டினை திருப்பி வைத்தால் Heart Shape கிடைத்துவிடும்.

சிறிதளவு முட்டை கலவையில் பிரட்டி எடுத்துகொள்ளவும். இந்த துண்டுகளை தோசை கல்லில் போட்டு வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தவுடன் திருப்பி விடவும்.

சுவையான எளிதில் செய்ய கூடிய Heart Shape ஆம்லெட் ரெடி….


கவனிக்க:
ஆம்லெடுகளை சுற்றிவிடும் பொழுது இரண்டு கரண்டிகளால் திருப்பிவிட்டால் ஈஸியாக இருக்கும்.
தோசை கல்லில் செய்யாமல் இப்படி பனில் செய்தால் சுலபமாக இருக்கும்.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எவ்வளவு அழகாக செய்து உள்ளீர்கள்...

செய்து பார்க்க வேண்டும்... நன்றி அம்மா...

சாருஸ்ரீராஜ் said...

super geetha will try soon

Chitra said...

Super shape. kids will be attracted :)

Priya Suresh said...

Omg, i wanted to try this egg omelet since a long too. Love the heart shaped omelet,prefect for st valentines day.

Unknown said...

You have done it very perfectly. Very new recipe to me.

Unknown said...

அருமையாக இருக்கு. நான் வெங்காயம், கேரட் போட்டு செய்தேன். அதில் கொஞ்சம் காரத்துக்கு மிளகுத்தூள் சேர்த்தால் நன்றாக இருக்கும்..

Menaga Sathia said...

Love those cute shaped omlettes...

Related Posts Plugin for WordPress, Blogger...