நீலகிரி பிரியாணி - Nilgiri Biryaniமிகவும் சுவையான பிரியாணி…இந்த பிரியாணியின் ஸ்பெஷலிடி,
        இதில் தக்காளி சேர்க்க தேவையில்லை….
·        வெங்காயத்தினை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து அதனை அரைத்து கொள்ள வேண்டும்.
·        புதினா+ கொத்தமல்லி + பச்சைமிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும்.
·        தனியாக கலர் எதுவும் சேர்க்காமலே மிகவும் கலர்புல்லாக இருக்கும்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்….நன்றி ஆசியா அக்கா…

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        சிக்கன் – 1/2 கிலோ
·        இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜை கரண்டி
·        தயிர் – 1/2 கப்
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        எண்ணெய் & நெய் – சிறிதளவு
·        உப்பு – தேவையான அளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        கரம்மசாலா – 1 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·        ஏலக்காய், கிராம்பு ,பட்டை – தலா இரண்டு
·        முழு மிளகு – 10
·        பிரியாணி இலை – 1

அரைத்து கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        புதினா, கொத்தமல்லி – தலா அரை கப்
·        பச்சைமிளகாய் – 3
·        முந்திரி – 10

செய்முறை :
·        அரிசியினை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

·        வெங்காயத்தினை சிறிய துண்டுகளாக நறுக்கி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து Microwaveயில் 4 நிமிடங்கள் வேகவிடவும். இதனை சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் கொரகொரவெனெ அரைத்து கொள்ளவும்.

·        புதினா + கொத்தமல்லி + பச்சைமிளகாய் + தயிர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். முந்திரியினை தனியாக சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

·        இஞ்சி பூண்டு விழுது வதங்கியவுடன் அரைத்த வெங்காய விழுதினை சேர்த்து நன்றாக 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

·        பிறகு அரைத்த புதினா, கொத்தமல்லி விழுதினை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.

·        இத்துடன் தூள் வகைகள் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

·        அனைத்து பொருட்களும் நன்றாக வதங்கியவுடன், சிக்கன் + முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

·        சிக்கன் நன்றாக வெந்து தண்ணீர் சுண்டி, எண்ணெய் மேலே வரும்.

·        அந்த சமயம், தேவையான அளவு தண்ணீர் + பாஸ்மதி அரிசி + உப்பு சேர்த்து வேகவிடவும்.

·        பிரஸர் குக்கரில் சுமார் 1 விசில் வரும்வரை வேகவிடவும். கடைசியில் எலுமிச்சை சாறு விட்டு கிளறிவிடவும்.

·        சுவையான நீலகிரி பிரியாணி ரெடி.

குறிப்பு :
ஊறவைத்த அரிசியினை சிறிது நெயில் 1 நிமிடம் வதக்கிய பிறகு பிரியாணி செய்தால் சாதம் நன்றாக இருக்கும்…

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புரட்டாசி மாதம் அதுவுமா, இப்படி பதிவிட்டு....


அசத்துறீங்க...

ஸாதிகா said...

பிரியாணியை விட சைடில் வைத்துள்ள சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கும் போலிருக்கே.அந்த ரெசிப்பி போடுங்க கீதாஆச்சல்.

அம்பாளடியாள் said...

என்ன விளையாட்டு இது வெள்ளிக் கிழமை அதுவுமா சாப்பிட மாட்டம் என்று தெரிந்தே கண்ணுக்குக் கவர்ச்சியாய்செய்முறையை வாசிக்கவே ஒரு கலன் உமிழ்நீர் ஓடும்படி
செய்துவிட்டீர்கள் தோழி :( ஞாயிற்றுக் கிழமை வரைக்கும் இனிக்
காத்திருக்க முடியாது போலும் :)))))

Asiya Omar said...

வாவ்! கலர்ஃபுல்லாக சூப்பராக இருக்கு,நான் மட்டனில் செய்த பொழுது இந்த கிரீன் வரலை..அருமை.குறிப்பை செய்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

Priya Satheesh said...

Bookmarked!!!!Mouthwatering.....

Chitra said...

chicken illaama try panren :)

Anonymous said...

கீதா சமீபமா உங்க ரேசிபிஸ் தான் வீட்டில் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். கார்ன் மீல் தோசை, கிநோவா தோசை, கொள்ளு அடை ன்னு எல்லாமே சூப்பர். நான் வெஜிடேரியன் வீட்டில் பிரியாணி அதுவும் சிக்கன் பிரியாணி ன்னா ரொம்ப இஷ்டம் ஸோ ட்ரை பண்ணிட வேண்டியதுதான். அந்த சிக்கென் கிரேவி ரெசிபியும் போடுங்க

Anonymous said...

கீதா சமீபமா உங்க ரேசிபிஸ் தான் வீட்டில் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன். கார்ன் மீல் தோசை, கிநோவா தோசை, கொள்ளு அடை ன்னு எல்லாமே சூப்பர். நான் வெஜிடேரியன் வீட்டில் பிரியாணி அதுவும் சிக்கன் பிரியாணி ன்னா ரொம்ப இஷ்டம் ஸோ ட்ரை பண்ணிட வேண்டியதுதான். அந்த சிக்கென் கிரேவி ரெசிபியும் போடுங்க

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்...அடுத்த மாதம் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக அந்த ரெஸிபியினையும் பதிவு போடுகிறேன்..அது kodi vepudu...

நன்றி அம்பாளடியாள்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி ஆசியா அக்கா...உங்க குறிப்புகள் அனைத்துமே சூப்பர்ப்...

GEETHA ACHAL said...

நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

நன்றி சித்ரா..சிக்கன் இல்லாமல் செய்தாலும் சூப்பாராக தான் இருக்கும்..

Shylaashree said...

Nice recipe geetha mam. I will try this tomorrow and update you

Related Posts Plugin for WordPress, Blogger...