தில் பசந்த் / தேங்காய் பன் - Dil Pasand using Frozen Parotta / Coconut Bunsமுதன் முதலாக Guest Post பகுதியினை தொடங்கி இருக்கின்றேன். என்னுடைய தோழி திருமதி. மஞ்சளா அவர்கள், எளிய முறையில் செய்ய கூடிய ஸ்வீடினை நமக்காக செய்து இருக்காங்க…

நீங்கள் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்: :
·        Frozen பரோட்டா – 2
·        தண்ணீர் – 2 மேஜை கரண்டி

Stuffing :
·        தேங்காய் துறுவல் – 1 கப்
·        Mixed Fruits / Tutti Frutti – 1 கப்
·        சக்கரை – 1/2 கப்
·        காய்ந்த திரட்சை / Raisins – 2
·        ஏலக்காய் – 1 (பொடித்தது)

செய்முறை :
·        பரோட்டாவினை வெளியில் எடுத்து வைத்து கொள்ளவும்.


·        கடாயில் தேங்காய் துறுவல் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சக்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி அடுப்பினை OFF செய்துவிடவும்.


·        அதன் பிறகு அத்துடன் காய்ந்த திரட்சை சேர்த்து கொள்ளவும்.

·        கடைசியில் Mixed Fruits + பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்த கொள்ளவும்.
·        ஒரு பரோட்டாவினை மட்டும் எடுத்து கொண்டு சிறியதாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது பெரிய சைஸ் பரோட்டா + சிறிய பரோட்டா இருக்கும்.


·        பெரிய பரோட்டாவினை கீழே வைத்து விட்டு அதன் உள்ளே செய்து வைத்து இருக்கும் Stuffingயினை வைத்து அதன் மேலே வெட்டி சிறிய பரோட்டாவினை வைக்கவும்.


·        இப்பொழுது பரோட்டாவினை சிறிது தண்ணீர் தொட்டு ஒரம் பகுதியினை மூடி விடவும்.


·        அவனை 375 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். அவனில் இதனை வைத்து சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான எளிதில் செய்த கூடிய ஸ்வீட் ரெடி.கவனிக்க :
பரோட்டாவினை வெளியில் எடுத்த நிறைய நேரம் வைக்க வேண்டாம். இதற்கு நான் பயன்படுத்து இருப்பது Frozen Parotta.

இந்த Sweetயில் எண்ணெய் / நெய் எதுவும் சேர்க்க வேண்டாம்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளவும்.

பரோட்டாவிற்கு பதிலாக Puff Sheetsயிலும் செய்யலாம்.

அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி - Anjappar Style Chicken Biryani / Biryani Varietiesமிகவும் சுவையாக அப்படியே ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இந்த பிரியாணி இருக்கும். இந்த சிக்கன் பிரியாணியில் கவனிக்க வேண்டியவை ,
·        கண்டிப்பாக நன்றாக பழுத்த தக்காளி சேர்க்க வேண்டும்.

·        பச்சை மிளகாய் கூடுதலாக சேர்த்தால் சுவையாக இருக்கும்.

·        மஞ்சள் தூள் பிரியாணியில் சேர்க்க வேண்டாம். சிக்கனை தண்ணீரில் கழுவும் பொழுது மஞ்சள் தூள் சேர்த்து கழுவி கொள்ளவும்.

·        அரிசியினை சமைக்கும் முன்பு 1 மேஜை கரண்டி நெயில் சுமார் 1 – 2 நிமிடங்கள் வறுத்து எடுக்க வேண்டும். அப்பொழுது தான் சாதம் நன்றாக இருக்கும்.

·        பிரியாணியில் கொத்தமல்லி + புதினாவினை பொதுவாக சிக்கனுடன் சேர்த்து வதக்கிவிடுவோம். ஆனால் இந்த பிரியாணில் அரிசி சேர்க்கும் பொழுது தான் புதினா, கொத்தமல்லியினை சேர்க்க வேண்டும்.

·        இந்த பிரியாணியில் தயிர் சேர்க்க தேவையில்லை.

நன்றி சவிதாஇவங்க Non-Vegயினை மிகவும் சூப்பராக சமைப்பாங்க…நீங்கள் செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 40 – 50 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 2 பெரியது
·        பச்சைமிளகாய்  - 4 – 5
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        நெய் – 2 மேஜை கரண்டி

கடைசியில் சேர்க்க :
·        புதினா – 1 கைபிடி அளவு
·        கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்
·        மிளகாய் தூள் – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க :
·        பட்டை- 1 துண்டு
·        கிராம்பு – 4
·        ஏலக்காய் – 2
·        பிரியாணி இலை – 1

செய்முறை :
·        வெங்காயம்+ தக்காளியினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக வெட்டவும். புதினா + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும். சிக்கனை சுத்தம் செய்து அத்துடன் 1/2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது  + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் வதங்கியவுடன் மீதம் உள்ள இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி + பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


·        தக்காளி நன்றாக கரைந்தவுடன், ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து வேகவிடவும்.


·        சிக்கனை பாதி வெந்தவுடன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். ( 1 கப் அரிசிக்கு 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)


·        ஒரு பாத்திரத்தில் 1 மேஜை கரண்டி நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியினை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து கொண்டு நெயில் 1 – 2 நிமிடங்கள் வதக்கவும்.


·        ரைஸ் குக்கரில் அரிசி + சிக்கன் கலவை + புதினா, கொத்தமல்லி சேர்த்து 15 - 20 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : பிரஸர் குக்கர் என்றால் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.)


·        கடைசியில் எலுமிச்சை சாறு பிழிந்து மேலும் இருக்கும் 1 மேஜை கரண்டி நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சுவையான பிரியாணி ரெடி.

ஆலிவ் கார்டன் மினஸ்ட்ரோன் சூப் - Olive Garden Minestrone Soup / Restaurant Style Cooking Recipes
Olive Gardenயில் கொடுக்கும் Minestrone Soup எங்க வீட்டில் எல்லோரும் மிகவும் பிடிக்கும்..வீட்டில் அதே மாதிரி செய்த சூப்..நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        தக்காளி சாஸ் (Italian Style) – 3 மேஜை கரண்டி
·        எதாவது ஒரு வகை பாஸ்தா – 1/2 கப்
·        பிண்டோ பீன்ஸ் (Canned Pinto Beans) – 1 டின்
·        பிரியாணி இலை – 1
·        மிளகு தூள் – சிறிதளவு
·        ஆலிவ் ஆயில் (Olive Oil) – 2 தே.கரண்டி
·        உப்பு, Parmesan Cheese – தேவையான அளவு

சேர்க்க வேண்டிய காய்கள் :
·        பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
·        பொடியாக நறுக்கிய காரட் – 1 கப்
·        பொடியாக நறுக்கிய செலரி (Celery Sticks) – 1 கப்
·        ஸ்விஸ் சார்டு(Swiss Chard) (அ) ஏதாவது ஒரு வகை கீரை இலை – 2 கப்
·        பொடியாக நறுக்கிய சுக்கினி( Zucchini) – 1 கப்
·        பூண்டு – 3 பல் நசுக்கியது

செய்முறை :
·        பத்திரித்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் வதங்கியவுடன் Celeryயினை சேர்த்து வதக்கவும்.


·        பிறகு காரட் சேர்த்து வதக்கவும்.


·        அத்துடன் 4 -5  கப் தண்ணீர் + தக்காளி சாஸ் சேர்த்து வேகவிடவும்.


·        நன்றாக கொதிக்கும் பொழுது சுக்கினி + ஸ்விஸ் சார்டு + பூண்டு சேர்க்கவும்.


·        இத்துடன் பிரியாணி இலை+ தேவையான அளவு உப்பு + பாஸ்தாவினையும் சேர்த்து நன்றாக வேகவிடவும்.


·        கடைசியில் Pinto Beansயினை சேர்த்து வேகவிடவும். (Soupயில் தண்ணீர் குறைவாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)


·        அனைத்தும் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான சத்தான சூப் ரெடி. பரிமாறும் பொழுது சிறிது பெப்ப்ர் மற்றும் சீஸ் தூவவும். Breadsticksயுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
Pinto Beansயிற்கு பதிலாக எந்த ஒரு வகை பீன்ஸ் வகையும் சேர்த்து கொள்ளலாம்.

Olive Gardenயில் Mini Shell pasta தான் சேர்ப்பாங்க்..ஆனால் நான் வேறு விதமான பாஸ்தா சேர்த்து இருக்கின்றேன்.

Italian Style தக்காளி சாஸ் கிடைக்கவில்லை என்றால் Plain தக்காளி சாஸுடன் Basil, Oregano மற்றும் Parsley Leaves சேர்த்து கொள்ளவும்.

ரிக்கோடா சீஸ் குலாப் ஜாமூன் - Ricotta Cheese Gulab Jamun / Diwali Sweets / Ricotta Cheese Indian Sweetsஎப்பொழுதும் குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கி தான் செய்வேன்…ஒரு மாறுதலுக்காக ரிக்கோட்டா சீஸ் வைத்து ஜாமூன் செய்தேன்…அப்படியே கோவாவில் இருந்து செய்தது போலவே சுவையாக இருக்கும்…கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ரிக்கோடா சீஸ்(Ricotta Cheese) – 2 கப்
·        மைதா மாவு(All purpose Flour) – 2 மேஜை கரண்டி
·        Condensed Milk – 2 மேஜை கரண்டி
·        பேக்கிங் பவுடர் (Baking Powder) – 1/4 தே.கரண்டி

சக்கரை சிரப் (Sugar Syrup) :
·        சக்கரை – 2 கப்
·        தண்ணீர் – 2 கப்
·        பொடித்த ஏலக்காய் – 1/4 தே.கரண்டி
·        குங்கும பூ – 2 (விரும்பினால்)

குறிப்பு : Condensed Milk இல்லை என்றால் பால் சேர்த்து கொள்ளவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

செய்முறை :
·        ரிக்கோட்டா சீஸினை கடாயில் போட்டு வேகவிடவும். (இத்துடன் எதுவும் சேர்த்து வேகவிட வேண்டாம்.)


·        சுமார் 5 – 6 நிமிடங்களில் சீஸ் நன்றாக தண்ணீர் வற்றி தனி தனியாக Milk Powder பதத்திற்கு வந்துவிடும்.(கவனிக்க : நான் பயன்படுத்திய Ricotta Cheeseயில் அதிக அளவு தண்ணீர் இல்லை, அதனால் குறைந்த நேரம் தான் எடுத்தது. சில சமயம் Ricotta Cheeseயில் இருக்கும் தண்ணீர் பதத்தினை வைத்து 20 - 30 நிமிடங்கள் கூட ஆகலாம். )


·        சிறிது நேரம் ஆறவைத்து அத்துடன் condensed milk + மைதா மாவு + பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (கவனிக்க : மாவு சரியாக உருட்ட வரவில்லை என்றால் கூடுதலாக சிறிதளவு பால் சேர்த்து மாவினை சரியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.)·        அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் சக்கரை + தண்ணீர் + பொடித்த ஏலக்காய் + குங்குமப்பூ சேர்த்து 10 – 12 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


·        எண்ணெய் நன்றாக சூடாகியதும் உருண்டைகளை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.·        அனைத்து குலாப் ஜாமுன்களையும் பொரித்து எடுக்கவும்.


·        கடைசியில் பொரித்த குலாப் ஜாமூன்களை சக்கரை சிரப்பில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய குலாப் ஜாமூன் ரெடி.


ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய் - Stuffed ennai kathirikkai /Stuffed Brinjal recipeமிகவும் சுவையான ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…நன்றிஆசியா அக்கா

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        குட்டி கத்திரிக்காய் – 1/2 கிலோ
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேஜை கரண்டி
·        கரம் மசாலா – 1/4 தே.கரண்டி
·        கொத்தமல்லி ,கருவேப்பில்லை – சிறிதளவு
·        உப்பு – தேவைக்கு

வறுத்து அரைக்க :
·        மிளகாய் வற்றல் – 5
·        தனியா – 2 தே.கரண்டி
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        மிளகு – 1/2 தே.கரண்டி
·        வெந்தயம் – 1/4 தே.கரண்டி
·        கடுகு – 1/4 தே.கரண்டி
·        எள் – 2 தே.கரண்டி
·        வேர்க்கடலை – 2 தே.கரண்டி
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·        முந்திரி – 4

தாளிக்க :
·        நல்லெண்ணெய் – 4 மேஜை கரண்டி
·        கடுகு – 1 தே.கரண்டி
·        உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·        கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை:
·        வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக தனி தனியாக வறுத்து எடுத்து கொள்ளவும்.


·        வறுத்த பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.


·        வெங்காயம் + தக்காளியினை ஒன்றும் பாதியுமாக அரைத்து வைக்கவும்.


·        கத்திரிக்காயினை காம்பு பக்கமாக நறுக்கி கொண்டு அதில் நாம் வறுத்து அரைத்த பொருட்களை ஸ்டஃப் செய்யவும்.


·        குக்கரில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்தவுடன், தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.


·        இத்துடன் இஞ்சி பூண்டு விழுது + கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு, ஸ்டஃப்டு செய்து வைத்து இருக்கும் கத்திரிக்காயினை சேர்க்கவும்.


·        2 – 3 நிமிடங்கள் அப்படியே கத்திரிக்காயினை வேகவிடவும் பிறகு இத்துடன் அரைத்து வைத்து இருக்கும் வெங்காயம் + தக்காளி விழுதினை சேர்க்கவும்.·        சுமார் 4 – 5 நிமிடங்கள் அனைத்து நன்றாக கிளறிவிட்டு வேகவிடவும்.


·        தேவையான அளவு உப்பு + 1 கப் அளவிற்கு புளி தண்ணீர் கரைத்து இதில் ஊற்றவும். குக்கரினை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும்.


·        சுவையான ஸ்டஃப்டு எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.கடைசியில் கொத்தமல்லி சிறிதளவு சேர்க்கவும்.  இதனை பிரியாணி, கலந்த சாதம், தயிர் சாதம்,சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


 குறிப்பு :
அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல மசாலாவிற்கு கூட்டு கொள்ளவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...