தில் பசந்த் / தேங்காய் பன் - Dil Pasand using Frozen Parotta / Coconut Bunsமுதன் முதலாக Guest Post பகுதியினை தொடங்கி இருக்கின்றேன். என்னுடைய தோழி திருமதி. மஞ்சளா அவர்கள், எளிய முறையில் செய்ய கூடிய ஸ்வீடினை நமக்காக செய்து இருக்காங்க…

நீங்கள் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்: :
·        Frozen பரோட்டா – 2
·        தண்ணீர் – 2 மேஜை கரண்டி

Stuffing :
·        தேங்காய் துறுவல் – 1 கப்
·        Mixed Fruits / Tutti Frutti – 1 கப்
·        சக்கரை – 1/2 கப்
·        காய்ந்த திரட்சை / Raisins – 2
·        ஏலக்காய் – 1 (பொடித்தது)

செய்முறை :
·        பரோட்டாவினை வெளியில் எடுத்து வைத்து கொள்ளவும்.


·        கடாயில் தேங்காய் துறுவல் போட்டு நன்றாக வதக்கவும். நன்றாக வதங்கிய பிறகு சக்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி அடுப்பினை OFF செய்துவிடவும்.


·        அதன் பிறகு அத்துடன் காய்ந்த திரட்சை சேர்த்து கொள்ளவும்.

·        கடைசியில் Mixed Fruits + பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்த கொள்ளவும்.
·        ஒரு பரோட்டாவினை மட்டும் எடுத்து கொண்டு சிறியதாக வெட்டி கொள்ளவும். இப்பொழுது பெரிய சைஸ் பரோட்டா + சிறிய பரோட்டா இருக்கும்.


·        பெரிய பரோட்டாவினை கீழே வைத்து விட்டு அதன் உள்ளே செய்து வைத்து இருக்கும் Stuffingயினை வைத்து அதன் மேலே வெட்டி சிறிய பரோட்டாவினை வைக்கவும்.


·        இப்பொழுது பரோட்டாவினை சிறிது தண்ணீர் தொட்டு ஒரம் பகுதியினை மூடி விடவும்.


·        அவனை 375 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். அவனில் இதனை வைத்து சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.


·        சுவையான எளிதில் செய்த கூடிய ஸ்வீட் ரெடி.கவனிக்க :
பரோட்டாவினை வெளியில் எடுத்த நிறைய நேரம் வைக்க வேண்டாம். இதற்கு நான் பயன்படுத்து இருப்பது Frozen Parotta.

இந்த Sweetயில் எண்ணெய் / நெய் எதுவும் சேர்க்க வேண்டாம்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளவும்.

பரோட்டாவிற்கு பதிலாக Puff Sheetsயிலும் செய்யலாம்.

13 comments:

Angel said...

செய்முறை சுலபமா இருக்கு கீதா ...நான் விரைவில் செய்து விட்டு சொல்றேன் ...

Mahi said...

அட, தேங்கா பன் போலவே இருக்கே! பரோட்டாவில செய்வது நல்ல ஐடியா..படங்கள் தெளிவா இருக்கு. ரெசிப்பியை தந்த மஞ்சுளாவுக்கும், பகிர்ந்த கீதாவுக்கும் பாராட்டுக்கள்!

Unknown said...

wow quick and easy dil pasand,sure kids love it...too gud recipe manjula..

Sangeetha Nambi said...

Perfect... My moms perfect...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த முறை செய்து விடலாம்... எளிதான குறிப்பிற்கு நன்றி...

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் எளிமையாய் இருக்கு......பகிர்வுக்கு மிக்க நன்றி........

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Menaga Sathia said...

ரொம்ப ஈசியா இருக்கு, ரெசிபி தந்த மஞ்சுளாவுக்கும்,உங்களுக்கும் நன்றி!!

Saraswathi Ganeshan said...

Simply superbbbb that too with frozen paratha makes it more interesting...Nice idea Geetha nad thanks for making it soo easy and simple and I am extending my do to list nowww...

Priya Suresh said...

Really very brilliant idea of using frozen parotta, delicious dilpasand.

Unknown said...

உங்க coconut பன் ரெசிப் பார்த்து ரொம்ப சந்தோசம் . இந்தியால bakery இல கிடைக்கும் . நான் இருக்கும் ஊரில் கிடைக்குமானு தெரியல . எனக்கு ரொம்ப use full உங்க ரெசிப்

ஹுஸைனம்மா said...

பரோட்டாவுக்கு இப்படியும் ஒரு பயன்பாடா!! ஆச்சரியம். நல்லா இருக்குப்பா.

Unknown said...

very easy recipe...It came really good.My friends thought that i bought this from the shop when i give this for Christmas !

GEETHA ACHAL said...

நன்றி Robert...ரொம்ப மகிழ்ச்சி...

Related Posts Plugin for WordPress, Blogger...