ரிக்கோடா சீஸ் குலாப் ஜாமூன் - Ricotta Cheese Gulab Jamun / Diwali Sweets / Ricotta Cheese Indian Sweetsஎப்பொழுதும் குலாப் ஜாமூன் மிக்ஸ் வாங்கி தான் செய்வேன்…ஒரு மாறுதலுக்காக ரிக்கோட்டா சீஸ் வைத்து ஜாமூன் செய்தேன்…அப்படியே கோவாவில் இருந்து செய்தது போலவே சுவையாக இருக்கும்…கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ரிக்கோடா சீஸ்(Ricotta Cheese) – 2 கப்
·        மைதா மாவு(All purpose Flour) – 2 மேஜை கரண்டி
·        Condensed Milk – 2 மேஜை கரண்டி
·        பேக்கிங் பவுடர் (Baking Powder) – 1/4 தே.கரண்டி

சக்கரை சிரப் (Sugar Syrup) :
·        சக்கரை – 2 கப்
·        தண்ணீர் – 2 கப்
·        பொடித்த ஏலக்காய் – 1/4 தே.கரண்டி
·        குங்கும பூ – 2 (விரும்பினால்)

குறிப்பு : Condensed Milk இல்லை என்றால் பால் சேர்த்து கொள்ளவும். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

செய்முறை :
·        ரிக்கோட்டா சீஸினை கடாயில் போட்டு வேகவிடவும். (இத்துடன் எதுவும் சேர்த்து வேகவிட வேண்டாம்.)


·        சுமார் 5 – 6 நிமிடங்களில் சீஸ் நன்றாக தண்ணீர் வற்றி தனி தனியாக Milk Powder பதத்திற்கு வந்துவிடும்.(கவனிக்க : நான் பயன்படுத்திய Ricotta Cheeseயில் அதிக அளவு தண்ணீர் இல்லை, அதனால் குறைந்த நேரம் தான் எடுத்தது. சில சமயம் Ricotta Cheeseயில் இருக்கும் தண்ணீர் பதத்தினை வைத்து 20 - 30 நிமிடங்கள் கூட ஆகலாம். )


·        சிறிது நேரம் ஆறவைத்து அத்துடன் condensed milk + மைதா மாவு + பேக்கிங் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். (கவனிக்க : மாவு சரியாக உருட்ட வரவில்லை என்றால் கூடுதலாக சிறிதளவு பால் சேர்த்து மாவினை சரியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.)·        அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு அகலமான பாத்திரத்தில் சக்கரை + தண்ணீர் + பொடித்த ஏலக்காய் + குங்குமப்பூ சேர்த்து 10 – 12 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


·        எண்ணெய் நன்றாக சூடாகியதும் உருண்டைகளை போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.·        அனைத்து குலாப் ஜாமுன்களையும் பொரித்து எடுக்கவும்.


·        கடைசியில் பொரித்த குலாப் ஜாமூன்களை சக்கரை சிரப்பில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய குலாப் ஜாமூன் ரெடி.


17 comments:

Asiya Omar said...

வாவ்! சூப்பர் குலோப்ஜாமுன்.

Participate in my first event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

Jaleela Kamal said...

சூப்பரான குலோப் ஜாமுன்

Nandinis food said...

Easy and tasty gulab jamuns! Tempting picture:)

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான ஜாமூன்...

ரிக்கோடா சீஸ் - சாதாரண சீஸ் தானே...?

Angel said...

குலாப் ஜாமுன் என் மகளுக்கு பிடித்த ஒரே ஸ்வீட் ..இம்முறையில் செய்து பார்க்கிறேன்

Unknown said...

tempting to grab one..looks lovely...

Sangeetha Nambi said...

Super sweet....
http://recipe-excavator.blogspot.com

Shanthi said...

Perfect and looks too good :)

Priya dharshini said...

naaku oruthu geetha...super ah eruku ricotta gulab jamun

Unknown said...

ஆஹா! ஆகா! பார்க்கும் போதே எச்சி ஊறுதே ...

Priya Suresh said...

Super spongy jamuns, inviting.

GEETHA ACHAL said...

நன்றி ஆசியா அக்கா..

நன்றி ஜலிலா அக்கா..

நன்றி நந்தினி..

நன்றி தனபாலன்..ரிக்கோடா சீஸ் நிறைய Italian சமையலுக்கு பயன்படுத்துவாங்க...சாதரண சீஸ் என்று நீங்க குறிப்பிடுவது மொஸருல்லா சீஸாக இருந்தால் பிஸ்ஸாவிற்கு பயன்படுத்துவாங்க..

நன்றி ஏஞ்சலின்..கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..

GEETHA ACHAL said...

நன்றி தமிழரசி...

நன்றி சங்கீதா..

நன்றி சாந்தி..

நன்றி ப்ரியா..

நன்றி ஜமால் அண்ணா..

இமா க்றிஸ் said...

வாவ்! சூப்பர்.

Unknown said...


இனிப்பு வகைகள், இனிப்பு வகைகளை தயாரிப்பது எப்படி, வட இந்திய இனிப்பு வகைகள், தென் இந்திய இனிப்பு வகைகள், இது போன்ற பல வகையான இனிப்பு வகைகளை தெரிந்து கொள்ள http://www.valaitamil.com/recipes_sweets

Unknown said...

சூப்பரான குலோப் ஜாமுன்

Unknown said...

சூப்பரான குலோப் ஜாமுன்

Related Posts Plugin for WordPress, Blogger...