ஸ்பைசி சேப்பங்கிழங்கு ப்ரை - Spicy Seppakizhangu Fry / Taro Root Fryசேப்பங்கிழங்கில்  அதிக நார்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

பொதுவாக சக்கரை அதிக உள்ளவர்கள் (Diabetic) எந்த ஒரு கிழங்கு வகைகளையும் அதிகம் சாப்பிட கூடாது…ஆனால் இந்த காயில் LOW GI Value இருப்பதால்  சேர்த்து கொள்ளலாம்.

சுமார்  100 கிராம் சேப்பங்கிழங்கில் வெரும் 130 – 140 கலோரிஸ் தான் இருக்கின்றது…இதில் Protein , Vitamin A & C , Iron , Calciumயும் இருக்கின்றது.

மற்ற கிழங்கு வகைகளினை காட்டிலும் இந்த சேப்பங்கிழங்கு உடலிற்கு மிகவும் நல்லது. கண்டிப்பாக Cholestrol மற்றும் Diabetic உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ
·        எண்ணெய் – 2 - 3 மேஜை கரண்டி
·        உப்பு – தேவைக்கு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        தனியா தூள் – 1/2 தே.கரண்டி
·        சோம்பு தூள் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
சேப்பங்கிழங்கினை நன்றாக தண்ணீரில் கழுவி கொள்ளவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து  கொள்ளவும் (கவனிக்க : சேப்பங்கிழங்கினை நன்றாக வேகவைத்து கொள்ளகூடாது…3/4 பாகம் வெந்தால் போதும் )


சேப்பங்கிழங்கினை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + தேவையான அளவு உப்பு சேர்த்து சேப்பங்கிழங்கில் கலந்து 5 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


அகலமான கடாயில்  2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சேப்பங்கிழங்கு துண்டுகளை போட்டு 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.


ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 2 -3 நிமிடங்கள் வேகவிடவும்.


சுவையான சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி. இதனை கலந்த சாதம், சாம்பார் , ரசம் போன்றவையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
இந்த ப்ரைக்கு 2 – 3 மேஜை கரண்டி எண்ணெயே போதும். அதிகம் எண்ணெய் சேர்க்க வேண்டாம்.

கண்டிப்பாக சேப்பங்கிழங்கினை முக்கால்பாகத்திற்கு மேல் வேகவைக்க வேண்டாம். அதிகம் வெந்தால் கொழகொழப்பாக இருப்பதால் எண்ணெயை அதிகம் குடிக்கும்

16 comments:

Nithu Bala said...

Delicious.

jeyashrisuresh said...

Romba tempting a irruku. Love to have with sambar rice

Priya Satheesh said...

I just love this...perfect with sambhar rice....Love to grab this crispy ones...

Lakshmi said...

கீதா சேப்பங்கிழங்கில் நிறைந்திருக்கும் சத்துக்களையும் ருசியான ரெசிப்பியும் கொடுதிருக்கீங்க நன்றி

Kalpana Sareesh said...

my husbands fav.. n i love this version..

Valarmathi Sanjeev said...

Wow....this makes me mouthwatering, looks so tempting and yummy... perfect with dal/sambhar and rice.

கோவை2தில்லி said...

சேப்பங்கிழங்கு எங்கள் வீட்டில் எல்லோருக்குமே மிகவும் பிடித்தது.நானும் இப்படித் தான் செய்வேன்.

Nandini said...

Delicious crispy fry! Love to have with rasam rice.

srividhya Ravikumar said...

my fav fry...looks yum..

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக இருக்கு... படங்கள் யப்பப்பா...

காரமாக இருக்குமோ...? செய்து பார்ப்போம்...

Saraswathi Tharagaram said...

Slurp...Droolworth fry..Love the crispy masala over it..yum

S.Menaga said...

காரசாரமான சூப்பர்ர் வறுவல்...

எல் கே said...

எனக்கு ரொம்ப பிடிச்சது சேப்பங்கிழங்கு

இமா said...

தனியாகவே சாப்பிடலாம் போல இருக்கிறதே!

Priyas Feast said...

Next time besan flour serthu seithu parunga..athuvum nalla erukum

Kanchana Radhakrishnan said...

சூப்பர் வறுவல்

Related Posts Plugin for WordPress, Blogger...