ப்ரெட் பிஸ்ஸா - Bread Pizza - Easy Snack for KidsGuest Post பகுதியில் திருமதி. மஞ்சுளாவின் ப்ரெட் பிஸ்ஸா குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாலை நேர ஸ்நாக்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும். நன்றி …

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்:
·        ப்ரெட் – 4 துண்டுகள்
·        Mozarella Shredded Chesse – 1/4 கப் + 1/4 கப்
·        சோர் க்ரீம்(Sour Cream ) – 2 மேஜை கரண்டி
·        மிளகு தூள் (Pepper ) – 1/4 தே.கரண்டி
·        ஓரோகனோ (Oregano ) – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் (அ) Paprika – 1/4 தே.கரண்டி

பொடியாக நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 சிறியது
·        குடைமிளகாய் – 1
·        தக்காளி – 1

செய்முறை :
·        வெங்காயம் + குடைமிளகாய் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். (தக்காளியினை விதைகள் நீக்கி வெட்டி கொள்ளவும்.)

·        1/4 கப் சீஸினை நன்றாக Mash செய்து கொள்ளவும். இத்துடன் ஒரோகனோ + மிளகாய் தூள் + மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இத்துடன் சோர் க்ரீமினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (கவனிக்க : சோர் க்ரீமினை சேர்த்து கொண்டால் தான் Breadயில் spread செய்ய ஈஸியாக இருக்கும். )பிறகு நறுக்கிய காய்கள் சேர்த்து கொள்ளவும்.


·        ப்ரெடினை தோசை கல்லில் Toast செய்து கொள்ளவும். (இதனால் Mixயினை ப்ரெடில் தடவும் பொழுது Bread அதிக ஈரபதத்தினை இழுத்து கொள்ளாது)


·        செய்து வைத்து இருக்கும் Mix Spreadயினை ப்ரெட் மீது தடவி விடவும். இதன் மீது மீதம் இருக்கும்  1/4 கப் சீஸினை தூவி விடவும்.


·        அவனை  350 Fயில் மூற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் ட்ரேயில் ப்ரெட் துண்டுகளை வைக்கவும்.

·        அவனில் சுமார் 10 நிமிடங்கள் Bake Modeயில் வேகவிடவும். கடைசியில் 2 – 3 நிமிடங்கள் Broil Modeயில் வைக்கவும்.

·        சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி.

கவனிக்க :
விரும்பினால் Spread செய்யும் பொழுது சிறிது பிஸ்ஸா சாஸ் அல்லது ketchup சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்.

ஆம்பூர் ஸ்டார் பிரியாணி - Ambur Star Biryani - Restaurant / Hotel Style Cooking - Biryani Varietiesஇந்த பிரியாணி மிகவும் பிரபலமான ஒன்று… வேலூர் பகுதியில் வாழும் மக்களுக்கு இந்த பிரியாணி கடை கண்டிப்பாக தெரிந்து இருக்கும்.இந்த பிரியாணியில் ,

·        முதலில் பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பிறகு இஞ்சி விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

·        பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் சேர்க்க கூடாது. அதற்கு பதிலாக காய்ந்த மிளகாயினை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து காரத்திற்கு ஏற்றாற் போல சேர்த்து கொள்ள வேண்டும்.

·        வெங்காயம் + தக்காளி போன்றவையினை சிக்கன் (அல்லது) மட்டன்  சிறிது நேரம் வெந்த பிறகு தான் சேர்க்க வேண்டும். முதலிலே வதக்க கூடாது.

·        தயிர் 1 மேஜைகரண்டி அளவு சேர்த்தால் போதும். அதிகம் சேர்க்க கூடாது.

·        நன்றாக பழுத்த தக்காளி சேர்த்து கொண்டால் சுவையாக கலர்புல்லாக இருக்கும்.

·        தனியாக கலர் அல்லது மஞ்சள் தூள் எதுவும் சேர்க்க வேண்டாம்.

     நீங்களும் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        பாஸ்மதி அரிசி – 3 கப்
·        இஞ்சி விழுது – 1 மேஜை கரண்டி
·        பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 2 பெரியது
·        புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி

ஊறவைத்து அரைத்து கொள்ள :
·        காய்ந்த மிளகாய் – 6 – 8 (காரத்திற்கு ஏற்றாற் போல)

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        நெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை ,கிராம்பு, ஏலக்காய்

செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி வைக்கவும். புதினா, கொத்தமல்லியினை நறுக்கி கொள்ளவும். அரிசியினை தண்ணீரில் 10 – 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். காய்ந்த மிளகாயினை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.


கடாயில்       எண்ணெய்+ நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பிறகு, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.


பிறகு அரைத்த காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.


இத்துடன் சிக்கனை சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


இதன் பின், நறுக்கிய புதினா + கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து 1 – 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


தக்காளி நன்றாக வதங்கிய பிறகு தயிர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பிறகு அதில் ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியினை சேர்த்து 3/4 பாகம்(75 %) வேகவைத்து கொள்ளவும். பிறகு தண்ணீர் வடித்து கொள்ளவும்.


சிக்கனில் இருந்து தண்ணீர் முக்கால் வாசி வற்றிய பிறகு, வேகவைத்துள்ள சாதத்தினை இதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.(கவனிக்க : சிக்கன் மசாலா சாதத்தில் நன்றாக கலக்கிவிடவும்.)
இப்பொழுது இதனை அப்படியே தம் போட்டு வேகவைக்கலாம். நான் அவனை 375 Fயில் 15 நிமிடங்கள் வேகவைத்தேன்.


சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்த பிறகு காரம் குறைவாக இருப்பதாக தெரிந்தால் பச்சை மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

அதே மாதிரி காய்ந்த மிளகாயில் இருந்து வரும் கலரே போதுமானதாக இருக்கும். சில மிளகாயில் கலர் வராது. அப்படி இருக்கும் பொழுது விரும்பினால் கலர் சேர்த்து கொள்ளவும்.கினோவா ரோமா பீன்ஸ் புலாவ் - Quinoa Roma Beans Pulaoரோமா பீன்ஸ் மிகவும் சுவையான பீன்ஸ். இதில் மிகவும் அதிக அளவு நார்சத்து , Protein , Calcium மற்றும் Iron சத்துகள் நிறைந்து உள்ளன. உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இது போன்ற பருப்பு வகைகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

கினோவாவிலும் நார்சத்து மற்றும் Minerals இருக்கின்றது. நமக்கு WHOLE GRAIN ஆக கினோவா கிடைப்பதால் உடலிற்கு மிகவும் நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கினோவா – 2 கப்
·        ரோமா பீன்ஸ் – 1/2 கப்
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி

நறுக்கி கொள்ள  :
·        வெங்காயம் – 1
·        தக்காளி – 1
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        கொத்தமல்லி – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

முதலில் தாளிக்க:
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        சோம்பு தூள் – 1/2 தே.கரண்டி

செய்முறை :
வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும். பூண்டு + இஞ்சியினை பொடியாக வெட்டி வைக்கவும்.

பிரஸர் குக்கரில் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து பிறகு பூண்டு + வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி + இஞ்சி சேர்த்து வதக்கவும்.


இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.


வதக்கிய பொருட்களுடன்  2 கப் தண்ணீர் + ரோமா பீன்ஸ் + கினோவா சேர்த்து கொள்ளவும்.குக்கரினை மூடி போட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். பிரஸர் அடங்கியதும் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி  சேர்த்து கிளறிவிடவும்.


சுவையான சத்தான புலாவ் ரெடி. இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
1 கப் தண்ணீர் + 1 கப் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

எப்பொழுதும் 1 கப் கினோவாவிற்கு 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.

25 விதமான ஹெல்தியான சட்னி குறிப்புகள் - 25 Types of Chutney Varieties / 25 Types of Side Dish for Idly and Dosai


காலை நேர சிற்றுண்டயான இட்லி, தோசைக்கு பொருத்தமான காம்பினேஷன் சட்னி வகைகள்…நீங்களும் செய்து பார்த்து உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…

பொதுவாக கார சட்னி என்றால், காய்ந்த் மிளகாயினை அரைத்து கொள்ள வேண்டும். இந்த சட்னியில் காய்ந்த மிளகாயினை தண்ணீரில
 ஊறவைத்து அதனை அரைத்து, மிளகாய் தூளிற்கு பதிலாக சேர்த்து கொள்ள வேண்டும்.


மாங்காய் இஞ்சியினை நாம் அனைவரும் மாங்காய் அல்லது இஞ்சி குடும்பத்தினை சேர்த்தது என்று நினைத்து கொண்டு இருப்போம்…ஆனால் இது மஞ்சள் வகைகயினை சேர்ந்தது. இதனை சமையலில் சேர்க்கும் பொழுது மாங்காய் மற்றும் இஞ்சியில் வாசனையுடன் இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்.


கத்திரிக்காயில் மிகவும் குறைந்த அளவு கலோரிஸ் (Low Calories) தான் இருக்கின்றது. இதில் கல்சியம், Dietary Fiber, Potassium & Vitamins இருக்கின்றது. சக்கரையின் அளவு அதிகம் இருப்பவர்கள் இந்த காயினை விதவிதமாக சமைத்து சாப்பிடலாம்.


வதக்கிய வெங்காயகத்துடன் புதினா சேர்த்து செய்த சூப்பரான சட்னி. வெங்காயத்துடன் புதினா சேர்த்ததால் மிகவும் சுவையாக இருந்தது.


மிகவும் சுவையான வித்தியசமான ஹெல்தியான சட்னி… இது எங்க தாத்தாவோட Favorite சட்னி..பொதுவாக இதனை தேங்காய் சேர்க்காமல் செய்வாங்க…ஆனால் தேங்காய் சேர்த்தாலும் நன்றாக தான் இருக்கும்.


ஹோட்டல்களில் கிடைக்கும் பச்சை சட்னி அதே சுவையில் இருக்கும்…இதில் கொத்தமல்லி மற்றும் மிகவும் சிறிதளவு புதினா சேர்த்து செய்ய வேண்டும்.


நான் எப்பொழுதும் வேர்க்கடலை மட்டும் தான் வைத்து செய்வேன். ஆனால் , இந்த சட்னியில் வேர்க்கடலையுடன் சிறிது பொட்டுக்கடலையும் சேர்த்து செய்ய வேண்டும். மிகவும் சுப்பராக இருக்கும்.


இந்த சட்னியில் புளியின் அளவு கூடுதலாக இருக்க வேண்டும். இதில் வறுத்த உளுத்தம்பருப்பினையும் சேர்த்து கொள்ள வேண்டும். முதலில் உளுத்தம்பருப்பினை அரைத்து கொண்டு பிறகு புளி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்.


தனியாவில் அதிக அளவு நார்சத்து இருக்கினறது. தனியாவினை உணவில் சேர்த்து கொள்வதால், உணவில் உள்ள Mercuryயின் அளவினை குறைக்கின்றது என்று ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது. கெட்ட  Cholesterolயினை குறைத்து நல்ல Cholestrolயினை அதிகம் செய்யும் தன்மை உடையது.


மிகவும் குறைவான கலோரிஸில் சுவையான சட்னி. வெரும் 2 நிமிடங்களில் குறைந்த பொருட்கள் வைத்து செய்ய கூடிய சட்னி.


ஒட்ஸினை வைத்த செய்த சட்னி இது. பொதுவாக தேங்காய் சட்னியில் பொட்டுக்டலை சேர்த்து கொள்வோம்..அதே மாதிரி ஒட்ஸினை சிறிது தேங்காயுடன் சேர்த்து செய்த சட்னி இது.


காய்ந்த மிளகாய் சேர்த்து செய்த சட்னி..மிகவும் சுவையான சட்னி..தோசைக்கு சூப்பர்ப் காம்பினேஷன்..


கத்திரிக்காயினை அடுப்பில் சுட்ட பிறகு, அதனை வைத்து செய்த சட்னி.. நெருப்பில் Directஆக சுட பயமாக இருந்தால்,இதனை அவனில் வைத்தும் Grill செய்த பிறகு சமைக்கலாம்.


சுமார் 20 – 30 பூண்டு பல் சேர்த்து செய்தால் இந்த சட்னி நன்றாக இருக்கும். பூண்டு அளவு குறைத்தால் சுவையில் வித்தியாசம இருக்கும். மிகவும் காரமான , உடலிற்கு மிகவும் நல்ல சட்னி.


என்னுடைய ப்ளாகில் அதிக அளவு பார்க்கபட்ட சட்னி குறிப்பு இது தான்…நான் ஏன் இதனை இன்னும் Step by Step Picturesயுடன் Update செய்யவில்லை என்றே தெரியவில்லை…மிகவும் காரசராமான சட்னி. இதனை 1 வாரம் வரை செய்து வைத்து சாப்பிடலாம்.


பீர்க்கங்காயில் அதிக அளவு நார்சத்து மற்றும் தண்ணீரில் அளவு அதிகம் இருப்பதால் சட்னிக்கு ஏற்ற காய். உணவில் காய்களினை இப்படி சேர்த்தால் மிகவும் நல்லது.


பீர்க்கங்காயினை எப்பொழுதும் தோல் நீக்கி தான் காயினை சமைப்போம். தோலினை வைத்து செய்த சட்னி இது. இட்லி, தோசைக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.


மிகவும் எளிதில் செய்ய கூடிய தேங்காய் சட்னி..பெரும்பாலும் வீட்டில் அனைவரும் செய்யும் சட்னி தான் இது…ஆனால் ஒரு சில பொருட்களின் அளவினை கூடியோ அல்லது குறைத்தால் சுவையில் வித்தியாசம் இருக்கும்…இதே மாதிரி தான் இந்த சட்னியும்.


எப்பொழுதும் சட்னியில் கடைசியில் தாளித்து சேர்ப்போம். அதே தாளித்த பொருட்களை சட்னியில் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


எளிதில் செய்ய கூடிய தக்காளி சட்னி…தக்காளியினை முதலில் அரைத்து பிறகு வதக்கி செய்த சட்னி இது. சுமார் 5 – 6 நிமிடங்கள் சுவையான சட்னி ரெடி.


ஹோட்டலில் எப்படி தான் ரெட் கலர் வர மாதிரி செய்வாங்க என்று நினைத்து பல மாதிரி ட்ரை செய்தேன்..ஆனால் சுவை இருந்தால் கலர் இருக்காது..அப்பறம் தக்காளி சேர்த்து செய்தேன்…அதே சுவையில் அதே கலரில் வந்தது… கண்டிப்பாக நன்றாக பழுத்த தக்காளி தான் சேர்க்க வேண்டும்.


சக்கரையின் அளவு அதிகம் இருப்பவர்கள் இதனை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால் சக்கரையின் அளவு சிறிது கட்டுபாட்டில் இருக்கும். மிகவும் குளுமை என்பதால் இரவு நேரத்தில் சாப்பிட வேண்டாம். எப்பொழுதும் பொரியல், வறுவல் , சாம்பார் என்று செய்யாமல் இப்படி செய்து பாருங்க…நன்றாக இருக்கும்.


இந்த சட்னி இட்லி,தோசைக்கு விட சப்பாத்தி, பூரி போன்றவைக்கு மிகவும் பொருத்தமான காம்பினேஷன்… வெங்காயம் நன்றாக வதங்கிய உடன், தேங்காய் விழுதினை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.


வெங்காயம் , தக்காளி மற்றும் அனைத்து பொருட்களும் சேர்த்து செய்த கலவை சட்னி.


இதில் கொத்தமல்லியினை வதக்க தேவையில்லை. தேங்காய் சேர்க்காமல் செய்வதால் 2 நாட்கள் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்.
இதனையும் ட்ரை செய்து பாருங்க…. இதுவும் இட்லி , தோசைக்கு பொருத்தமான சட்னி …
புதினா துவையல்

Related Posts Plugin for WordPress, Blogger...