கிறிஸ்துமஸ் ஃப்ருட் கேக் - Christmas Fruit Cakeஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        மைதா மாவு – 2 கப்
·        சக்கரை – 1 கப்
·        வெண்ணெய் – 1 Stick (அல்லது ) எண்ணெய் – 1 கப்
·        முட்டை – 2
·        பேக்கிங் பவுடர் – 1 தே.கரண்டி

சேர்த்து கொள்ள :
·        Glazed Mixed Fruits – 1 கப்
·        Nuts (Pecans, Walnuts ) – 1 கப்
·        ஜாதிக்காய் தூள் (Nutmeg Powder) – 1/2 தே.கரண்டி
·        பட்டை தூள் (Cinnamon Powder) – 1/2 தே.கரண்டி

செய்முறை :
·        மைதா மாவு + பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும். வெண்ணெய் + சக்கரை சேர்த்து நன்றாக கலந்து பிறகு முட்டையினை இத்துடன் சேர்த்து கலக்கி கொள்ளவும்.


·        இத்துடன்  மைதா மாவினை சேர்த்து கலக்கவும்.


·        பிறகு Nuts  வகைகளை சேர்க்கவும்.


·        அதன்பின், Mixed Fruits சேர்த்து கலக்கவும்.


·        கடைசியில் Nutmeg Powder, Cinnamon Powder சேர்த்து கொள்ளவும்.


·        அவனை 375 Fயில் மூற்சூடு செய்யவும். அவனில் வைக்கும் பனில் கலவையினை ஊற்றவும்.


·        அவனில் பனினை வைத்து சுமார் 45 – 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய கேக் ரெடி.
குறிப்பு :
Cake Mix(White Cake Mix)யில் Nuts, Fruits, தூள் வகைகள் சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.

அவரவர் விருப்பத்திற்கு எற்றாற் போல Nuts & Fruits சேர்த்து கொள்ளலாம்.

Christmas சமயத்தில் நிறைய கடைகளில் Mixed Fruits Mix கிடைக்கும்.

இந்த Glazed Fruits Mixயிலே Orange Peel, Lemon Zest எல்லாம் இருப்பதால் நான் தனியாக பயன்படுத்தவில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் அதனை சேர்த்து கொள்ளவும்.

Tutti Frutti பயன்படுத்தும் பொழுது அதனை கொஞ்சம் நேரம் ஆரஞ்சு ஜுஸில் ஊறவைத்து பிறகு சேர்த்து கொண்டால் நல்லது.

வெஜிடேபுள் பிரிஞ்சி சாதம் - Vegetable Brinji Riceஇதனை பிரிஞ்சி (பிரியாணி இலை) பயன்படுத்து செய்வதால் பிரிஞ்சி என்று பெயர் வந்தாக சொல்வாங்க… குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…இதில் காய்களை சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

·        இந்த சாதம் வெள்ளையாக இருக்கும். இந்த சாதத்திற்கு எந்த வித மசாலாவும் சேர்க்க தேவையில்லை

·        இது பிரியாணி மாதிரி இல்லாமல் இருந்தாலும் சுவையில் பெரியாதாக வித்தியாசம ஒன்றும் இருக்காது.

·        இதற்கு புதினா, கொத்தமல்லி தேவையில்லை.

·        தக்காளியினை வதக்கி போட கூடாது. தண்ணீர் சேர்க்கும் பொழுது 1 தக்காளியினை நான்கு துண்டுகளாக சேர்த்தால் போதும். தக்காளியினை வதக்கினால் சாதத்தின் கலர் மாறிவிடும்.

·        கண்டிப்பாக தேங்காய் பால் சேர்த்து செய்ய வேண்டும். விரும்பினால் கடைசியில் முந்திரி தாளித்து சேர்த்து கொள்ளலாம்.

·        காரத்திற்காக பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும்.

·        இதில் நெய் சேர்க்க தேவையில்லை. விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாஸ்மதி அரிசி – 2 கப்
·        தேங்காய் பால் – 1 கப்
·        Mixed Vegetables (Carrot,Beans, Peas, Corn) – 1 கப்
·        உப்பு – தேவையான அளவு
நறுக்கி கொள்ள :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1
·        பச்சைமிளகாய் – 3
·        பூண்டு + இஞ்சி – சிறிதளவு

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை

செய்முறை :
·        பாஸ்மதி அரிசியினை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.வெங்காயத்தினை நீளமாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியினை நான்கு துண்டாக நறுக்கவும். பூண்டு+ இஞ்சியினை நசுக்கி கொள்ளவும்.

·        குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        பின்னர் நசுக்கிய இஞ்சி பூண்டினை சேர்த்து நன்றாக வதக்கவும்.


·        அத்துடன் நறுக்கிய வெங்காயம் + கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


·        பிறகு காய்களை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.


·        காய்கள் சிறிதளவு வதங்கிய பிறகு பாஸ்மதி அரிசியினை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


·        இத்துடன் நறுக்கிய தக்காளி + தேங்காய் பால் + 3 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.·        இதனை வேகவைத்து கொள்ளவும். (பிரஸர் குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவிடவும். )


·        சுவையான எளிதில் செய்ய கூடிய பிரிஞ்சி சாதம் ரெடி.


கவனிக்க :
Fresh தேங்காய் பால் எடுக்க முடியவில்லை என்றால் Tin Coconut Milk பயன்படுத்தலாம்.

தக்காளி சேர்ப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளலாம்.

ஸ்டஃப்டு புடலங்காய் - Stuffed Pudalangai / Stuffed Snake Gourd with Dalபுடலங்காயில் அதிக அளவு தண்ணீர் தன்மை இருப்பதால் உடலில் எற்படும் சூட்டினை குறைக்கும். சளி, இருமல் போன்ற நேரத்தில் சாப்பிடுவதினை தவிர்கவும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் சீக்கிரமாக குணமடையும்.

புடலங்காயில் எளிதில் செய்ய கூடிய ஸ்நாகினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்…

பருப்பினை ஊறவைத்து கொள்ள : 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        புடலங்காய் – 1 நீளமானது
·        உப்பு , எண்ணெய் – சிறிதளவு

ஸ்டஃபிங் செய்ய :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு – தாளிக்க
·        வெங்காயம் – 1 பொடியாக நறுக்கி வைக்கவும்
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        உப்பு – தேவையான அளவு

முதலில் அரைத்து கொள்ள :
·        கடலைப்பருப்பு – 1 கப்
·        காய்ந்த மிளகாய் - 2

செய்முறை :
·        கடலைப்பருப்பினை தண்ணீரில் சுமார் 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த கடலைப்பருப்பினை நன்றாக கழுவி தண்ணீர் வடித்து கொள்ளவும். கடலைப்பருப்புடன் காய்ந்த மிளகாய் + 1/2 தே.கரண்டி உப்பு சேர்த்து கொர கொரப்பாகா அரைத்து கொள்ளவும்.


·        அரைத்த கலவையினை இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல சும்மர் 8 – 10 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும்.


·        புடலங்காயினை மேல் சாம்பல் போல இருக்கும் தோலினை நீக்கிவிடவும். (இல்லை என்றாலும் பராவயில்லை. நான் எப்பொழுதும் ஸ்பூன் அல்லது கத்தியின் பின்புறம் வைத்து நீக்கிவிடுவேன். ) இதனை 1 இஞ்ச் அளவிற்கு வெட்டி கொள்ளவும். உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.


·        புடலங்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி Microwaveயில் 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும். (குறிப்பு : இப்படி செய்வதால் புடலங்காய் சீக்கிரமாக வெந்துவிடும். அதே மாதிரி அதனுடைய கலரும் மாறாது. ஸ்டஃபிங் செய்வதும் ஈஸியாகிவிடும். )


·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு , இத்துடன் வேகவைத்து இருக்கும் கடலைபருப்பினை உதிர்த்து சேர்க்கவும்.

·        அதன்பின் தேங்காய் துறுவல் + கொத்தமல்லி + தேவையான அளவு உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியில் 2 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து கொள்ளவும். (குறிப்பு : தண்ணீர் சேர்ப்பதால் Stuffing அழுத்தமாக உடையாமல் இருக்கும். )


·        இதனை புடலங்காயின் நடுவில் வைத்து Stuff செய்யவும்.


·        Panயில்  1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி புடலங்காயினை போட்டு வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு திருப்பிவிட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியில் 2 நிமிடங்கள் தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
·        சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்நாக் ரெடி.


கவனிக்க :
கடலைப்பருப்பு இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல Stuffing செய்து கொள்ளலாம்.

முதலிலேயே தண்ணீரில் புடலங்காயினை வேகவைக்காமல் Stuffing செய்த பிறகு இட்லி தட்டில் போட்டு வேகவைத்து பிறகு Panயில் ப்ரை செய்து கொள்ளலாம்.

அவனிலும் இதனை Bakeசெய்யலாம். ஆனால் அவனில் செய்யும் பொழுது பச்சை கலர் முற்றிலும் மாறிவிடும்.

பிரவுன் ரைஸ் உப்புமா - Brown Rice Upma - Easy Breakfastஎளிதில் செய்ய கூடிய காலை நேர சத்தான டிபன்…நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.

ஊறவைத்து கொள்ள : 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பிரவுன் ரைஸ் – 2 கப்
·        வெங்காயம் – 1
·        இஞ்சி – சிறிய துண்டு
·        உப்பு - தேவைக்கு

ரவையாக உடைக்கும் பொழுது சேர்த்து கொள்ள :
·        சீரகம் – 1 தே.கரண்டி
·        கடலைப்பருப்பு – 2 மேஜை கரண்டி

தாளிக்க:
·        எண்ணெய் – சிறிதளவு
·        கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க
·        காய்ந்த மிளகாய் – 2
·        கருவேப்பில்லை – சிறிதளவு

செய்முறை :
·        பிரவுன் அரிசியினை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.


·        நன்றாக அரிசியினை கழுவிய பிறகு, காய்ந்த துணியில் அரிசியினை தண்ணீர்  இல்லாமல் 1/2 மணி நேரம் காயவிடவும்.


·        பிரவுன் ரைஸ் + சீரகம் + கடலைப்பருப்பு சேர்த்து மிக்ஸியில் அரிசியினை ஒன்றும்பாதியுமாக Pulse Modeயில் அரைத்து கொள்ளவும்.


·        குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        அத்துடன் வெங்காயம் + இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளவும்.

·        வெங்காயம் வதங்கியதும் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அரைத்த அரிசியினை சேர்த்து வேகவிடவும்.


·        சுவையான சத்தான பிரவுன் ரைஸ் உப்புமா ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

கவனிக்க :
பிரஸர் குக்கர் என்றால் 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

அரைத்த அரிசியினை Air tight Container யில் 2 - 3 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...