25 விதமான சத்தான பார்லி உணவுகள் - 25 Different Varieties of Barley Indian Style Cooking


பார்லியில் எப்பொழுதும் கஞ்சி தான் செய்யலாம் என்று நினைத்துவிட வேண்டாம். பார்லியினை Main Ingredient ஆக வைத்து செய்த சத்தான உணவினை நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


1.பார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai   
எப்பொழுதும் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்யாமல் ஒரு மாறுதலுக்காக பார்லி மாவில் செய்து பாருங்க…ரொம்ப அருமையான வித்தியசமான கொழுக்கட்டை…சத்தும் கூட…


பார்லியில் அதிக அளவு நார்சத்து மற்றும் தேவையில்லாத கொழுப்பினை நீக்கும் தன்மை இருக்கின்றது. கோதுமையினை விட பார்லியில் 3 மடங்கு அதிக அளவு நார்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
இதில் கொள்ளு சேர்த்து இருப்பதால் மேலும் உடலிற்கு தேவையான சத்துகள் அனைத்துமே கிடைக்கும். கொள்ளு “உணவே மருந்து, மருந்தே உணவு “.


வெருமனே கோதுமை மாவு சப்பாத்தி சாப்பிடுவதற்கு பதிலாக 1 : 2 விதிம் பார்லி மாவினையும் சேர்த்து செய்து பாருங்க…சூப்பரான மிருதுவான சப்பாத்தி…அனைவரும் விரும்பி  சாப்பிடுவாங்க…


பார்லி மாவினை அவகேடோவுடன் சேர்த்து செய்த க்ரிஸ்பி ஸ்நாக்…இது அவனில் செய்வதால் உடலிற்கு மிகவும் நல்லது. 1 வாரம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்…


அரிசிக்கு பதிலாக பார்லியினை பயன்படுத்து செய்த உணவு. பார்லியுடன் பருப்பு + காய்கறிகள் சேர்த்து இருப்பதால் கண்டிப்பாக Fully Balanced Foodஆக இது இருக்கும்.


வேகவைத்த பார்லியினை வைத்த செய்த Instant சமையல். அரிசியினை தவிர்த்து பார்லி, ஒட்ஸ், கோதுமை, ரவா போன்றவையினை வைத்து செய்து பாருங்க…சுவையான சத்தான உணவு…


பார்லி மாவில் செய்த முருக்கு…அம்மா வந்து இருந்த பொழுது செய்தாங்க…வீட்டில் அனைவருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது… விரும்பினால் முருக்கு செய்யும் பொழுது பார்லி மாவினை சிறிது வறுத்து கொண்டால் ரொம்ப நன்றாக இருக்கும்.


பால் கொழுக்கட்டை மிகவும் பிரபலான ஸ்வீட்…எங்க வீட்டில் அடிக்கடி செய்வோம்…அவரவர் விருப்பத்திற்கு எற்றாற் போல உருண்டையாக அல்லது நீளமாக வடிவத்தில் செய்வாங்க….

வேகவைத்த பார்லியினை வைத்து செய்த பாயசம் இது…ரொம்ப அருமையான சத்தான பாயசம்…


கேழ்வரகு மாவில் வெங்காயம் + பச்சைமிளகாய் + வேகவைத்த பார்லி சேர்த்து செய்த சத்தான மாலை நேர ஸ்நாகாக இதனை சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.


கேழ்வரகு மாவு மற்றும் பார்லி மாவினை 1 : 1 என்ற விததில் சேர்த்து செய்த புட்டு…இதில் ஏலக்காய், தேங்காய் துறுவல் சேர்த்து இருப்பதால் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.


பண்டிகை ஸ்பெஷலாக வித்தியசமாக இந்த தட்டையினை செய்து கொடுங்க…வீட்டில் அனைவரும் உங்களை கண்டிபாக பாரட்டுவாங்க… தட்டை செய்யும் பொழுது கடலைப்பருப்பு, வேர்க்கடலை போன்றவையினை ஊறவைக்க மறந்துவிட்டால் அதற்கு பதிலாக ஒட்ஸினை சேர்த்து செய்து பாருங்க…வித்தியசமான சுவையான தட்டை கிடைக்கும்…


டயட்டில் இருப்பவங்க மட்டும் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவரிகள் வரை சாப்பிட கூடிய சத்தான லட்டு…இதே மாதிரி ஒட்ஸ், கோதுமை மாவு போன்றவையிலும் செய்து சாப்பிட்டு பாருங்க…சுவையாக இருக்கும்..

l

எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் பொங்கல் இது…அரிசியில் செய்யும்  பொங்கலுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியாது…நீங்கள் செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்லுங்க..


பார்லி என்றாலே டயட் இருப்பவங்க தான் சாப்பிட வேண்டும் என்று இல்லாமல் அனைவருமே சாப்பிட கூடிய உணவு…அதில் கஞ்சி மட்டும் தான் செய்யலாம் என்று இல்லாமல் இது மாதிரி கட்லட் அல்லது வேறு மாதிரியாக செய்து சாப்பிட்டு பாருங்க…அப்பறம் பார்லி கண்டிப்பாக பிடித்துவிடும்.ரிஸோட்டா என்பது இத்தாலிய உணவு..அதிக கஞ்சி தன்மை உள்ள அரிசியில் செய்யும் உணவு தான் ரிஸோட்டோ…அத்துடன் இதில் மஷ்ரூம் சேர்த்து இருப்பதால் மிகவும் சுவையாக இருக்கும்.


பார்லியுடன் எந்த வித கீரையினை சேர்த்து சமைத்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்..கீரையில் நிறைய Vitamins இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


ஸ்வீட் பொங்கல் செய்யும் பொழுது பார்லியில் சக்கரை பொங்கல் செய்து பாருங்க..Healthyயான உணவினை செய்து சாப்பிடுவோம்..


பேன்கேக்ஸ் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் விரும்பமான காலை நேர சிற்றூண்டி…அதனையே ஹெல்தியான உணவாக சாப்பிட்டால் அனைவருக்கும் திருப்தி…பார்லியில் செய்து பாருங்க…ரொம்ப அருமையாக இருக்கும்.


பார்லியினை வேகவைத்து அதில் தயிர் சேர்த்து கஞ்சி போல குடிப்பதினை விட இப்படி தயிர் சாதம் மாதிரி தாளித்து கலந்து செய்தால் மதியம் நேர Lunch Boxயிற்கு கொடுத்து அனுப்ப ஈஸியாக இருக்கும்.


இந்த சாலடில் ஆறு சுவை கலந்து செய்து இருக்கின்றேன். இனிப்புக்கு மாம்பழம், புளிப்புக்கு எலுமிச்சை, கசப்பு சுவைக்கு எலுமிச்சை தோல், துவர்ப்பு சுவைக்கு அவகேடோ, உவர்ப்பு சுவைக்கு உப்பு, காரத்திற்கு பச்சைமிளகாய். இதனை அனைத்தும் பார்லியுடன் சேர்த்து செய்த சத்தான சாலட்..


வெயில் காலம் மட்டும் இல்லாமல் அனைத்து seasonயிலும் சாப்பிட கூடிய சத்தான கூழ்…


பார்லியுடன் சத்தான காய்களை சேர்த்து செய்த ஹெல்தியான மாலை நேர ஸ்நாக்…இதில் காய்கள் சேர்ப்பதால் மிகவும் நல்லது. அதே மாதிரி காய்களை அப்படியே சேர்க்காமல் துறுவி சேர்த்து செய்து பாருங்க…குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிடுவாங்க..


5 நிமிடங்களில் எளிதில் செய்ய கூடிய ஈஸி தோசை இது. எப்பொழுதும் தோசைமாவு என்று செய்யாமல் உடனடியாக செய்ய கூடிய தோசை இது. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க…


க்ரிட்ஸ் என்பது நன்றாக காய்ந்த சோளத்தின் ரவை. அதில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. க்ரிட்ஸுடன் பார்லியினை சேர்த்து செய்த சத்தான இட்லி இது. இதற்கு காரமான சட்னி செய்து பாருங்க…சூப்பர்ப் காம்பினேஷன்.


இதனையும் ட்ரை செய்து பாருங்க…9 comments:

ADHI VENKAT said...

பார்லியை வைத்து இத்தனை ரெசிபிக்களா! என ஆச்சரியப்பட வைத்தது.

அசத்தலாக இருந்தது. பாராட்டுகள்.

Menaga Sathia said...

சூப்பர்ர் கலெக்‌ஷன்ஸ் கீதா!!

Asiya Omar said...

பார்லி குறிப்புக்கள் அசத்தல்.பகிர்வுக்கு நன்றி.

Priya Suresh said...

Super collection,wat a array of healthy foods.

Sangeetha Nambi said...

Super post with lot of collections... thanks..
http://recipe-excavator.blogspot.com

Encourage spice said...

loved u r amazing collection of barley.congrats .

ஸாதிகா said...

பார்லியில் சமைத்ததே இல்லை.நீங்கள் இத்தனை இத்தனை சத்து மிகு உணவுகளை சமைத்து பகிர்ந்துள்ளீர்கள் சூப்பர்,

Saraswathi Ganeshan said...

Very healthy collection I am going to try one by one for sure.

Anonymous said...

I am a diabetic. Thanks for barley foods.

Related Posts Plugin for WordPress, Blogger...