கலர்புல் டோமேடோ & சீஸ் சாலட் - Colorful Tomato and Mozzarella Cheese Salad



தக்காளியினை கண்டிப்பாக தினமும் நாம் சமையலில் சேர்த்து கொள்வோம்… அதனையே சாலடாக சாப்பிடும் பொழுதும் மிகவும் சுவையாகவும் நமக்கு தேவையான அனைத்தும் சத்துகளும் கிடைக்கின்றது.

சுமார் 100 கிராம் தக்காளியில் வெரும் 20 கலோரில் தான் இருக்கும். அதனால் டயட்டில் இருப்பவங்க இதனை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

Fresh தக்காளியில் அதிக அளவு Potassium இருக்கின்றது. இதில் நிறைய நார்சத்து (Dietary Fiber), Antioxidants, Vitamins A , C & K இருக்கின்றது.

இந்த சாலடில் நான் சீஸ் சேர்த்து இருக்கின்றேன். சீஸ் சேர்க்க விரும்பதவங்க சேர்க்க தேவையில்லை. அதே மாதிரி கொத்தமல்லியிற்கு பதிலாக Basil, oregano போன்றவையினை சேர்த்து கொள்ளலாம்.


சாலட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள்  :
·        தக்காளி – சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு (Red, Yellow, Orange)
·        Mozzarella Cheese – தேவையான அளவு
·        கொத்தமல்லி - சிறிதளவு
·        உப்பு – தேவைக்கு

செய்முறை :
·        தக்காளியினை கழுவி கொள்ளவும். தக்காளியினை வட்ட வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.

·        தக்காளி வெட்டிய பிறகு அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொண்டு சிறிது நேரம் ஊறவிடவும். ( கவனிக்க : கண்டிப்பாக இதில் முதலேயே உப்பு சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். கடைசியாக உப்பு சேர்த்தால் தக்காளியின் சுவை அவ்வளவாக தெரியாது.)


·        சீஸினையும் அதே மாதிரி வெட்டி வைக்கவும். பரிமாறும் ட்ரேயில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், சீஸ் துண்டு என்று விதத்தில் அலங்கரித்து பரிமாறவும். கடைசியில் சிறிது கொத்தமல்லி தூவவும்.

·        சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய சாலட் ரெடி.




3 comments:

Priya said...

Love this salad very much, very catchy and attractive.

Mahi said...

Colorful n attractive recipe geetha! Haven't seen yellow n orange tomatoes so far..

Jeyashrisuresh said...

Very colorful and yummy salad

Related Posts Plugin for WordPress, Blogger...