பன் ப்ரைட் கோல்டன் ப்ரான்ஸ் - Pan Fried Golden Prawns - Healthy Snack Recipesஎளிதில் செய்ய கூடிய சத்தான ஸ்நாக்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரான் – 20 – 25
·        மைதா மாவு / All Purpose Flour – 2 மேஜை கரண்டி
·        உப்பு – 1/2 தே.கரண்டி
·        Multigrian Bread / Tortilla – 2 or 3
·        எண்ணெய் – சிறிதளவு

செய்முறை :

·        மிக்ஸியில் Multigrain Tortillaவினை போட்டு பொடித்து கொள்ள்வும்.


·        ப்ரான்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் மைதா மாவு + உப்பு + 2 மேஜை கரண்டி கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        ப்ரான்களை பொடித்து வைத்துள்ள Homemade Tortilla Breadcrumbsயில் பிரட்டி கொள்ளவும்.

·        Panயினை சூடுப்படுத்திய பிறகு, 1 – 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கொண்டு, பிரட்டி வைத்துள்ள ப்ரான்களை ஒவ்வொன்றாக எடுத்து கடாயில் போடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக சிவந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·        பறிமாறும் பொழுது சாலட் மேலே வைத்து பறிமாறலாம். அல்லது குழந்தைகளுக்கு ஸ்நாக் மாதிரி கொடுக்கலாம். சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்நாக் ரெடி.


குறிப்பு :
எந்த வித Breadcrumbsயும் பயன்படுத்தலாம்.

Breadcrumbsயில் பிரட்டிய பிறகு அதனை Freeze கூட செய்து வைத்து கொள்ளலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...