திராமிசு - இத்தாலியன் கேக் - Tiramisu - Italian Dessert


திராமிசு மிகவும் பிரபலமான இத்தாலியன் கேக் வகையினை சேர்த்தது. இதன் original ரெசிபியில் White Cakeயிற்கு பதிலாக Lady Fingers என்ற பிஸ்கட் போல இருப்பதினை வைத்து செய்வாங்க….ரொம்ப சுவையாக இருக்கும். அதே சுவையில் நமக்கு கிடைக்கும் பொருட்களையினை வைத்து செய்த கேக் இது. நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
·        க்ரீம் சீஸ் (Cream Cheese) – 8 oz
·        Whipped Cream (Cool Whip Brand) – 2 கப்
·        முட்டை மஞ்சள் கரு – 3
·        சக்கரை – 1/4 கப் + 2 மேஜை கரண்டி
·        Instant Coffee Powder – 2 மேஜை கரண்டி
·        Unsweetened Cocoa Powder – 3 மேஜை கரண்டி (மேலே தூவ)
·        White cake Mix – 1 Packet (Any Brand)

செய்முறை :
·        முதலில் Square Panயில் இரண்டு கேக் செய்து கொள்ளவும். (நான் பயன்படுத்து இருப்பது Betty Crocker White Cake Mix. அதில் கொடுத்துள்ள அளவின்படி கேக்கினை bake செய்து இருக்கின்றேன்.)


·        1 கப் தண்ணீரினை நன்றாக கொதிக்கவிடவும். அதில் Instant Coffee Powderயினை சேர்த்து கொள்ளவும். இப்பொழுது Coffee ரெடி.


   க்ரீம் செய்ய :
·        முதலில் ஒரு அகலமான பவுலில் முட்டை மஞ்சள் கரு + 2 மேஜை கரண்டி சக்கரையினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·        அடுப்பில் ஒரு பத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதிக்கும் பத்திரத்தில் இருந்து தண்ணீர் படும்மாறு நாம் கலந்து வைத்து இருக்கும் முட்டை மஞ்சள் கரு பவுலினை வைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். (இது Double Broiler Method).  கவனிக்க: கிளறி கொண்டே இருக்கவும். இல்லை என்றால் முட்டை Scrambled முட்டை மாறி ஆகிவிடும்.


·        இன்னொரு பவுலில் க்ரீம் சீஸ் + 1/4 கப் சக்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (கவனிக்க: க்ரீம் சீஸினை Room Temperatureயில் இருந்தால்  கலக்க ஈஸியாக இருக்கும். )


·        இதில் நாம் வேகவைத்து இருக்கும் முட்டை கலவையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இத்துடன் Whipped Creamயினை சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது நம்முடைய க்ரீம் topping ரெடி.·        அகலமான Square Panயில், முதலில் ஒரு கேக்யினை வைத்து கொண்டேன். அதன் மீது செய்து வைத்து இருக்கும் Coffee டிகஷனினை Brushயினை வைத்து அனைத்து இடத்திலும் தடவி விடவும்.


·        பிறகு அதன் மீது நாம் செய்து வைத்து இருக்கும் Cream toppingயினை சமமாக தடவிவிடவும்.·        அதன் பின், Cocoa powderயினை அதன் மீது Dust செய்து கொள்ளவும். (Coffee Strainerயினை பயன்படுத்தினால் அழகாக Spreadஆகும்.)


·        இதே மாதிரி அடுத்த Layerயினை செய்து கொள்ளவும். இப்பொழுது கேக் ரெடி.   குறிப்பு : இந்த கேகினை உடனே பரிமாறுவதற்கு பதிலாக குறைந்தது 3 – 4 மணி நேரமாவது fridgeயில் வைத்து இருந்து பரிமாறினால் நன்றாக செட் ஆகி இருக்கும்.கவனிக்க:
·        பொதுவாக இந்த கேகில் Mascarpone cheese தான் பயன்படுத்துவாங்க…அதற்கு பதில் நான் Philadelphia cream cheese பயன்படுத்து இருக்கின்றேன்.

·        கேக் Layering செய்து முடித்த Fridgeயில் வைத்த பிறகு, அதனை அடிக்கடி திறந்து பார்க்க வேண்டாம். குறைந்தது 3 – 4 மணி நேரம் ப்ரிட்ஜில் இருந்தால் தான் நன்றாக இருக்கும்.

·        முட்டையின் வெள்ளை கருவினை White கேக் செய்ய பயன்படுத்து கொள்ளவும்.Related Posts Plugin for WordPress, Blogger...