முட்டை குழம்பு - Muttai Kulambu - Egg Kulambu


சமைக்க தேவைப்படும் நேரம் : 12 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 5
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1 பெரியது
·        பச்சை மிளகாய் - 2

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

அரைத்து கொள்ள :
·        தேங்காய் – 2 துண்டுகள்

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        பட்டை – சிறிய துண்டு
·        சோம்பு – 1/2 தே.கரண்டி

கடைசியில் சேர்க்க :
·        கருவேப்பில்லை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளியினை நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிக்கி கொள்ளவும். தேங்காயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிறகு இத்துடன் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கொள்ளவும்.


·        இத்துடன் 2   - 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.


·        அரைத்த தேங்காய் விழுதினை இதில் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். உப்பின் அளவினை பார்த்து சேர்த்து கொள்ளவும்.


·        ஒரு கொதி வந்தவுடன், முட்டையினை ஒவ்வொன்றாக உடைத்து தனி தனியாக ஒவ்வொரு ஒரத்திலும் ஊற்றிவிடவும். (கவனிக்க : கடாயில், ஒரே இடத்தில் இரண்டு முட்டைகளை ஊற்ற கூடாது. தனி தனி இடத்தில் ஊற்றி கொள்ளவும். )·        சுமார் 10 நிமிடங்கள் மிதமான தீயில் கடாயினை தட்டு போட்டு மூடி வேகவிடவும். (குறிப்பு : விரும்பினால், கடைசியில் முட்டைகளை திருப்பிவிட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடலாம். )


·        கடைசியில் கொத்தமல்லி + கருவேப்பில்லை தூவி பறிமாறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய முட்டை குழம்பு ரெடி.


கவனிக்க :
ஒரு  கிண்ணத்தில் முட்டையினை உடைத்து ஊற்றி அதனை குழம்பில் ஊற்றுவது மிகவும் ஈஸியாக இருக்கும்.

முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி வெரும் வெள்ளை கருவினை வைத்தும் குழம்பு செய்யலாம். அப்படி மஞ்சள் கருவினை நீக்கினால், குழப்பினை 5 – 6 நிமிடங்கள் வேகவிட்டால் போதும்.

தேங்காய்  விழுதினை சேர்க்காமல் செய்தாலும் நன்றாக இருக்கும்.

தேங்காயினை அரைக்கும் பொழுது அத்துடன் சிறிது கசகசா சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


கார சேவ் - Kara Sev - Easy snacks Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        கடலை மாவு – 1 கப்
·        அரிசி மாவு – 3/4  கப்
·        மிளகு பொடித்தது – 1 மேஜை கரண்டி
·        வெண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி (விரும்பினால்)
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:
·        அரிசி மாவு + கடலை மாவினை சலித்து கொள்ளவும்.


·        அத்துடன் வெண்ணெய் + உப்பு + பொடித்த மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        பிறகு, கலந்து வைத்துள்ள மாவுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முருக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.


·        கடாயில் எண்ணெய் காய வைத்து கொள்ளவும். முருக்கு பிழியும் அச்சினை எடுத்து கொள்ளவும்.


·        அச்சில் மாவினை போட்டு, எண்ணெயில் மாவினை வட்டமாக பிழுந்துவிடவும்.·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.


·        நன்றாக வறுத்து எடுத்த பிறகு, சிறிது நேரம் ஆறவைத்து சிறிய துண்டுகளாக பிட்டுகொள்ளவும்.

·        சுவையான மாலை நேர ஸ்நாக் ரெடி. குழந்தைகள் மிகவும் விரும்ப்பி சாப்பிடுவாங்க.


குறிப்பு :
கண்டிப்பாக வெண்ணெய் Room Temperatureயில் இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.

விரும்பினால் சிலர் கலர்புல்லாக இருக்க வேண்டும் என்பதற்காக Color சேர்த்து கொள்வாங்க.

மிளகு Fine Powderஆக இல்லாமல் கொரகொரப்பாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.


மல்டி கலர் குடைமிளகாய் & ப்ரோக்கோலோனி சாலட் - Multicolor capsicum & Broccoloni salad


Broccoloniயில் அதிக அளவில் விட்டமின் C & A, Calcium, Folate மற்றும் Iron இருக்கின்றது . இது ப்ரோக்கோலி மாதிரி இல்லாமல் Mild Flavorயில் இருக்கும். இதனுடைய தண்டு பகுதியினை சமையலில் சேர்த்து கொள்ளலாம். பொரும்பாலும் இது Winter & Spring பொழுது அதிகம் கிடைக்கும்.

Can u Guess this vegetableயில் கொடுத்துள்ள காய் – Broccoloni . கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரோக்கோலோனி – 10
·        கப்ஸிகம் (Red, Orange, Yellow, Green) -1
·        சிவப்பு வெங்காயம் (Red Onion ) – 1
·        பூண்டு பல் – 2 நசுக்கியது
·        உப்பு – தேவையான அளவு
·        ஆலிவ் ஆயில் – சிறிதளவு

செய்முறை :
·        கப்ஸிகம்  + வெங்காயத்தினை ஒரே அளவிலான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

·        ப்ரோக்கோலோனியிம் அடிப்பகுதியினை மட்டும் நீக்கி விடவும்.

·        பனில் எண்ணெய் ஊற்றி நசுக்கிய பூண்டு பல்லினை சேர்த்து வதக்கியபிறகு, ப்ரோக்கோலோனியினை சிறிது உப்பு சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.


·        அதே பனில், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் + வெங்காயம் + தேவையான அளவு உப்பு சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        பறிமாறும் தட்டில் வதக்கிய பொருட்கள் சேர்த்து பறிமாறவும். சுவையான சத்தான சாலட் ரெடி.


குறிப்பு :
இதே மாதிரி Broccoli யிலும் செய்யலாம். மிகவும் அருமையாக இருக்கும்.


ஆந்திரா கொடி கூரா - Andhra Kodi Kura - Chicken Curry


எப்பொழுதும் போல சிக்கன் ஒரே மாதிரி செய்து போர் அடித்துவிட்டதா… இந்த மாதிரி சிக்கனை கொஞ்சம் ஸ்பைசியாக செய்து பாருங்க… மிகவும் சுவையாக இருக்கும்.

என்னுடைய தோழி திருமதி.சவிதா,  இந்த க்ரேவி ரொம்ப அருமையாக இருக்கும் செய்து பாருங்க என்று சொன்னாங்க…அதே மாதிரியே மிகவும் சூப்பராக இருந்தது……

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/2 கிலோ
·        வெங்காயம் – 2
·        தக்காளி – 1
·        இஞ்சி பூண்டு – 1 மேஜை கரண்டி நசுக்கியது
·        கொத்தமல்லி – சிறிதளவு (கடைசியில் சேர்க்க)

சிக்கனுடன் ஊறவைக்க :
·        தயிர் – 2 மேஜை கரண்டி
·        மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைத்து கொள்ள :
·        பட்டை – 1 துண்டு
·        கிராம்பு – 3
·        கருவேப்பிலை இலை – 10 – 15 இலைகள்

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·        சோம்பு – 1 தே.கரண்டி
·        கருவேப்பில்லை – சிறிதளவு

குழம்பில் சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        சீரக தூள் – 1 தே.கரண்டி
·        மிளகு தூள் – 1 மேஜை கரண்டி
·        உப்பு - தேவைக்கு

செய்முறை :
·        வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்து கொள்ளவும்.


·        சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.


·        வெங்காயம் + தக்காளியினை வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்த பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


·        வெங்காயம் வதக்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.


·        அதன் பிறகு, இஞ்சி பூண்டு நசுக்கியது சேர்த்து கொள்ளவும். (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.)


·        இத்துடன் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வேகவிடவும்.


·        இத்துடன் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        அதன் பிறகு வறுத்து அரைத்த தூளினை சேர்த்து கிளறிவிடவும். இத்துடன் குழம்பிற்கு தேவையான அளவு (சுமார் 1 + 1/2 கப்) தண்ணீர் சேர்த்து கொள்ளவும். உப்பின் அளவினை பார்த்து கொள்ளவும்.·        சும்மர் 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும். சுவையான ஆந்திரா சிக்கன் கொடி கூரா ரெடி.


குறிப்பு :
விரும்பினால் முந்திரி சிறிதினை வறுத்து அதனை பாலுடன் மிக்ஸியில் மைய அரைத்து இந்த சிக்கனில் கடைசியில் ஊற்றி  3 – 4 நிமிடங்கள் வேகவிடலாம். சுவை அருமையாக இருக்கும்.

தண்ணீரின் அளவினை  குறைந்து இதனை குழம்பு மாதிரி இல்லாமல் Dryஆகவும் செய்யலாம்.

கண்டிப்பாக கருவேப்பிலை சேர்த்து செய்தால் தான் சுவையாக இருக்கும்.


Can u Guess this Vegetable -- 2பார்பதற்கு ப்ரோக்கோலி  ( Broccoli )  போல இருந்தாலும் இது அந்த காய் கிடையாது…மிகவும் சுவையாகவும், சத்துகள் அதிகம் நிறைந்து இருக்கும் இந்த காயின் பெயர் உங்களுக்கு தெரியுமா…can u guess it…


Related Posts Plugin for WordPress, Blogger...