செட்டிநாடு மிளகாய் சட்னி - Chettinad Milagai Chutney / Chettinad chilli chutney


நிறைய ப்ளாக நண்பர்கள் சட்னி குறிப்புகளை வெளியிடும் மாறு கேட்டு கொண்டனர்…ரொம்ப நாளாக draftயில் இருந்த போஸ்டிங்கு இது…  எளிதில் செய்ய கூடிய சட்னி இது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5  - 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வெங்காயம் – 1 பெரியது
·        தக்காளி – 1
·        பூண்டு – 5 பல் (தோல் நீக்கியது)
·        காய்ந்த மிளகாய் – 8 – 10 (காரத்திற்கு ஏற்றாற்போல)
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·        உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·        வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் காய்ந்த மிளகாயினை வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

·        அதன் பிறகு, வெங்காயம் + பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


·        இத்துடன் தக்காளியினை சேர்த்து வதக்கவும். அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவிடவும்.


·        மிக்ஸியில் முதலில் காய்ந்த மிளகாயினை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இத்துடன் புளி + வறுத்த பொருட்கள் + உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கொள்ளவும். இட்லி, தோசையினை இந்த சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


கவனிக்க :
கண்டிப்பாக பூண்டு சேர்த்து கொள்ளவும்.

காரத்திற்கு ஏற்றாற் போல காய்ந்த மிளகாயினை சேர்த்து கொள்ளவும்.

புளியிற்கு பதிலாக புளி paste சேர்த்து கொள்ளவும்.


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறித்துக் கொண்டாயிற்று... நன்றி சகோதரி...

Kalpana Sareesh said...

sama hoott chutney..

Asiya Omar said...

சட்னி கலர் சூப்பர், எனக்கு ரொம்ப பிடிக்கும்.

CHITRA said...

I too make the same. my fav chutney :)

Vimitha Anand said...

Color e arumaiya irukka geetha

சங்கவி said...

விரைவில் செய்து பார்த்துவிடுகிறேன்..

Veena Theagarajan said...

super yummy chutney.. Love the color

Priya Suresh said...

Dosaiku yetha chutney,love it.

S.Menaga said...

ஆஹா சட்னி கலர்புல்லா இருக்கு..

ஸாதிகா said...

நிறமே அச்த்துகிறதே!

Related Posts Plugin for WordPress, Blogger...