அஷ் ப்ரவுன்ஸ் - Hash Browns - Healthy Breakfast


சத்தான காலை நேர சிற்றூண்டி…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10  - 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        உருளைகிழங்கு – 2 பெரியது
·        வெங்காயம் – 1/4
·        மிளகு – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி

செய்முறை :
·        உருளைக்கிழங்கினை தோல் நீக்கி கழுவி கொள்ளவும். அதனை கேரட் துறுவது போல துறுவி கொள்ளவும். அத்துடன் வெங்காயமும் சேர்த்து துறுவி கொள்ளவும்.


·        துறுவிய உருளை + வெங்காயம் சேர்த்து கை வைத்து அதில் இருக்கும் தண்ணீரினை பிழிந்து கொள்ளவும். (தண்ணீர் அனைத்துமே பிழிந்துவிடவும். )


·        ஒரு அடிஅகலமான pan நன்றாக காய்ந்த பிறகு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் துறுவிய பொருட்களை பரவலாக போடவும்.


·        கரண்டியினை வைத்து அழுத்திவிடவும். அதன் மீது உப்பு + மிளகு தூள் தூவிவிடவும்.


·        அதனை அப்படியே 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும். ஒருபக்கம் நன்றாக வெந்தபிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.


·        அதேமாதிரி 2 – 3 நிமிடங்கள் கழித்து விரும்பினால் திருப்பி போட்டு வேகவிடலாம். அதனை துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


·        எளிதில் செய்ய கூடிய சுவையான சத்தான காலை நேர சிற்றூண்டி ரெடி.


கவனிக்க :
கண்டிப்பாக உருளைகிழங்கினை அடிக்கடி கிளறிவிட வேண்டாம். ஒருபக்கம் நன்றாக வெந்தபிறகு அதனை திருப்பிவிடலாம்.

துறுவிய உருளைக்கிழங்கினை வைத்து செய்தால் தான் மிகவும் சுவையாக இருக்கும். விரும்பினால் துறுவதற்கு பதிலாக பொடியாக நறுக்கியும் செய்யலாம்.

எண்ணெயிற்கு பதிலாக Butter சேர்த்து கொள்ளலாம்.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான குறிப்பு... சத்து அதிகம் என்பதால் செய்து விட வேண்டியது தான்...

நன்றி...

Shanthi said...

Nice one . Tempting and wonderful. :)

ஸாதிகா said...

அட..வித்தியாசமாக இருக்கே!

Lifewithspices said...

ada sooper yummy english breakfast..

Akila said...

hash browns, romba nalla iruku.. pakkathula irukum dish enna??? athuvum superra iruku...

Related Posts Plugin for WordPress, Blogger...