ஆல்மண்ட் பட்டர் - Homemade Almond Butter - Kids Lunch Box Menu


எப்பொழுதும் Peanut Butter கொடுக்காமல் இப்படி Almond Butterயினை சாப்பிடுவது மிகவும் நல்லது. சில பேர்க்கு Peanut Allergy இருக்கும். அவர்கள் வேர்கடலையிற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நல்லது. பாதாம் பருப்பில் அதிக அளவு நார்சத்து, Protein, Iron மற்றும் Calcium இருக்கின்றது.

பட்டர் என்றவுடன் இதில் பட்டர் சேர்க்க வேண்டுமே என்று எண்ண வேண்டாம்…பாதாம் பருப்பில் இருந்து வரும் எண்ணெயே போதுமானது.

வறுத்த பாதாமில் செய்தால் கலர் கொஞ்சம் Darkஆக இருக்கும். அதுவே வறுக்காத பாதாமில் செய்தால் கலர் Lightஆக இருக்கும். அதனை அரைப்பதும் கொஞ்சம் அதிக நேரம் எடுத்து கொள்ளவும்.

பாதாமினை அரைக்கும் பொழுது கண்டிப்பாக தண்ணீரோ அல்லது எண்ணெயே என்று எதுவுமே சேர்க்க கூடாது.

கடைசியில் Almond Butter செய்த பிறகு, விரும்பினால் சுவைக்காக Honey (தேன்) அல்லது சக்கரை சேர்த்து கொள்ளலாம். அப்படி சேர்த்தால் அதனுடைய Self-Life 2 –  3 நாட்கள் தான். எதுவும் சேர்க்கவில்லை என்றால் 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.

கண்டிப்பாக நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.


செய்ய தேவைப்படும் நேரம் : 8  - 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாதாம் பருப்பு (Almonds) – 2 கப்

செய்முறை :
·        அவனை  400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும். பாதாம் பருப்பினை அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.


·        மூற்சூடு  (Preheat) செய்யப்பட்ட அவனில் பாதாம் பருப்பினை வைத்து இருக்கும் ட்ரேயினை சுமார் 3 - 4 நிமிடங்கள் Toast செய்யவும்.


·        அதன் பிறகு நன்றாக வறுப்பட்டு இருக்கும். (கவனிக்க : கலர் மாறும் வரை வறுத்தால் போதும். அவன் இல்லாதவர்கள் கடாயில் பருப்பினை வறுத்து கொள்ளலாம். )


·        மிக்ஸியில் வறுத்த பாதாம் பருப்பினை அரைக்கவும். முதலில் இப்படி Powder மாதிரி அரைப்படும். (குறிப்பு : இந்த Almond Powderயினை cake செய்யும் பொழுது அல்லது Smoothie / Salad மேலே தூவி சாப்பிட சுவையாக இருக்கும். )
·        அதனை அப்படியே அரைக்கவும். கொகொரப்பாக அரைப்படும்.


·        அதன் பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் வெளியில் வரும்.


·        நன்றாக மைய அரைக்க வேண்டும். ( தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது. ) அதுவே Paste மாதிரி வரும். கடைசியில் சிலர் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவாங்க…விரும்பினால் சேர்க்கவும்.
·        எளிதில் வீட்டிலேயே செய்ய கூடிய Almond Butter ரெடி. இதனை Bread, Apples, Fruitsயுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சத்துள்ள குறிப்பு... நன்றி...

Asiya Omar said...

easy and tasty.

ஹுஸைனம்மா said...

ஓ.. பாதாம் பட்டர் இப்படித்தான் செய்யணுமா.. நானும், சாதா வெண்ணெய் போல அதையும் பாலெடுத்து கடைஞ்சு எடுப்பாங்களோன்னு (அப்பாவியா) நெனச்சுகிட்டிருந்தேன்... :-))) அப்ப Peanut butter-ம் இப்படித்தான் எடுப்பங்களோ?

Unknown said...

Very healthy spread geetha

கீதமஞ்சரி said...

almond butter செய்முறைப் பகிர்வுக்கு மிக்க நன்றி. மிகவும் எளிமையான செய்முறையாக உள்ளது. விரைவில் செய்வேன்.

Lifewithspices said...

sooperbb preperation..

Priya Suresh said...

Fantastic spread, nothing can beat the homemade na.

GEETHA ACHAL said...

நன்றி தனபாலன்..

நன்றி ஆசியா அக்கா...

GEETHA ACHAL said...

நன்றி ஹுஸைனம்மா...ஆமாம் இப்படி தான் செய்ய வேண்டும்...Peanut Butterயும் கூட இதே மாதிரி தான்...Roastedயில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

GEETHA ACHAL said...

நன்றி விமிதா...

நன்றி கீத மஞ்சரி....கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்.

நன்றி கல்பனா..

நன்றி ப்ரியா...

ADHI VENKAT said...

சத்தான சுவையான குறிப்பு. செய்து தருகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...