சீஸ் ஸ்டஃப்டு ப்ரோக்கோலி உருண்டைகள் - Cheese Stuffed Broccoli Balls - Healthy Snacks Ideas for Kids


மிகவும் Healthyயான சத்தான மாலை நேர ஸ்நாக்…. இந்த Ballsயில் நடுவில் இருந்து சீஸ் வரும் பொழுது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…

நான் இதில் Mozzarella Cheese பயன்படுத்து இருக்கின்றேன். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல விரும்பிய சீஸினை சேர்த்து கொள்ளவும்.

ப்ரோக்கோலியினை பொடியாக நறுக்கி கொள்வதற்கு பதிலாக துறுவி கொள்ளலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        ப்ரோக்கோலி – 1 கப் ( பொடியாக நறுக்கியது)
·        ப்ரெட் க்ரம்ஸ் (Bread Crumbs) – 1 கப்
·        சில்லி ப்ளேக்ஸ் (Chili Flakes) – 1/4 தே.கரண்டி
·        பூண்டு – 1 நசுக்கியது
·        சீஸ் – சிறிதளவு (விரும்பிய சீஸ் சேர்த்து கொள்ளவும்)
·        எண்ணெய் – சிறிதளவு
·        உப்பு – சிறிதளவு

(நான் Bread Crumbsயிற்கு பதிலாக Multigrain Tortillaவினை மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்டேன்)செய்முறை :

·        பனில்  1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பூண்டு + ப்ரோக்கோலி + சிறிதளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


·        வதக்கிய பொருட்கள் + Bread Crumbs + Chili Flakes சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விரும்பினால்  1 – 2 மேஜை கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)


·        கலந்து வைத்து இருக்கும் பொருட்களை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அதன் நடுவில் சீஸினை வைத்து மூடிவிடவும். இப்படியே அனைத்து உருண்டைகளை உருட்டி கொள்ளவும்.

·        குழிபணியார கடாயில்,சிறிது எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை போட்டி 1 - 2 நிமிடம் வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும்.


·        சுவையான சத்தான ஸ்நாக் ரெடி.


குறிப்பு :
குழிபணியார சட்டியில் செய்வதற்கு பதிலாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
3 comments:

Shanthi said...

Awesome recipe..very simply but very healthy..done it perfectly....

Priya Suresh said...

Interesting and healthy balls, kids's friendly snack.

ushaprashanth said...

Very Interesting recipe!!!!! Love the color of the cheese balls!!!

Related Posts Plugin for WordPress, Blogger...