மணத்தக்காளி டோஃபு ரைஸ் - Manathakkali Tofu Rice - Simple Variety Rice


மணத்தக்காளி காய் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு விட்டமின்ஸ் (A , B Complex) இருக்கின்றது.

இந்த காய் சிறியதாக மணி மாதிரி இருப்பதால் மணித்தக்காளி என்று பெயர் , அதுவே காலபோக்கில் மாறி மணத்தக்காளி என்று ஆகிவிட்டது.

இந்த கலந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்…எளிதில் செய்ய கூடிய variety ரைஸ் ரெடி...

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 – 8 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        மணத்தக்காளி வத்தல் – 2 மேஜை கரண்டி
·        டோஃபு – 1 கப் (நீளமாக நறுக்கியது)
·        வேகவைத்த சாதம் – 2 கப்
·        உப்பு – 1/4 தே.கரண்டி (டோஃபுவிற்கு)

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு + கடலைப்பருப்பு – தாளிக்க
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        கருவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
·        டோஃபுவினை நீளமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும். Panயினை சூடனாதும், 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டி வைத்துள்ள டோஃபுவினை சேர்த்து வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வறுப்பட்டவுடன், அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.  கடைசியில் அதன் மீது உப்பு தூவி கொள்ளவும். இப்பொழுது டோஃபு ரெடி.


·        Panயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் மணத்தக்காளி வத்தல் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        வேகவைத்த சாதத்தில் இதனை சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        அத்துடன் டோஃபுவினையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        சுவையான எளிதில் செய்ய கூடிய கலந்த சாதம் ரெடி. இத்துடன் அப்பளம் பொடித்து சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


குறிப்பு :
வத்தலில் உப்பு இருக்கும் என்பதால் உப்பு சேர்க்க தேவையில்லை.


2 comments:

S.Menaga said...

சாதம் கலர் சூப்பரா இருக்கு..

Priya Suresh said...

Super interesting intha dish, wow..

Related Posts Plugin for WordPress, Blogger...