ஸ்பானீஷ் ஆம்லெட் - Spanish Omelette - Healthy Omelette - Easy Egg Recipes


முட்டையுடன் உருளைகிழங்கினை சேர்த்து ஆம்லெட் செய்தால் அது தான் ஸ்பானீஷ் ஆம்லெட்.

இதில் நான் சுவைக்காக இத்துடன் சிறிது வெங்காயம் சேர்த்து இருக்கின்றேன். அதே மாதிரி கலர்புல்லாக இருக்க தக்காளி சேர்த்து இருக்கின்றேன்.

ஆனால் பொதுவாக இந்த ஆம்லெடில் உருளைகிழங்கு மட்டுமே இருக்கும்.

விரும்பினால் உருளைகிழங்கினை பொடியாக நறுக்கி கொள்வதற்கு பதிலாக அதனை துறுவி சேர்த்து செய்தால் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        முட்டை – 4
·        உருளைகிழங்கு – 100 கிராம் (1 பெரியது)
·        வெங்காயம் – 1 சிறியது
·        தக்காளி  / சிவப்பு குடைமிளகாய் – சிறிது (விரும்பினால் சேர்த்து கொள்ளலாம்)
·        உப்பு, மிளகு தூள் – சிறிதளவு
·        எண்ணெய் – 2 மேஜை கரண்டி

செய்முறை :
·        உருளைகிழங்கினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

·        கடாயில்  1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் + உருளைகிழங்கினை போட்டு 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.
·        முட்டையினை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அத்துடன் 2 மேஜைகரண்டி அளவு தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து Forkயினால் நன்றாக அடித்து கொள்ளவும்.

·        இத்துடன் வதக்கி வைத்து இருக்கும் பொருட்கள் + மிளகு தூள் + தக்காளி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.


·        ஆம்லெட் pan காய்ந்ததும் , மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி அதில் கலந்து வைத்து இருக்கும் கலவையினை ஊற்றி வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.·        சுவையான சத்தான காலை நேர உணவு ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க…


7 comments:

Unknown said...

Very healthy omlett and kids will love it for sure.

Unknown said...

Filling and healthy omelette

இமா க்றிஸ் said...

wow! looks great.

Mahi said...

Nice omelet! Shall try with color capsicum n some Thai chillies n let u know! :)

Priya Anandakumar said...

Lovely omelette Bertha, yummy...

சாரதா சமையல் said...

இந்த ஆம்லெட் குழைந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் .

Unknown said...

yummyyyyy .............

Related Posts Plugin for WordPress, Blogger...