ஹரியாலி சிக்கன் - Hariyali Chicken - Spicy Green Chicken - Chicken Recipes


இந்த சிக்கனின் specialயே பச்சை கலரில் ( Green Color) இருப்பது தான்.

இதில் புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய் , பூண்டு , இஞ்சி என்று அனைத்து சேர்த்து மைய அரைத்து  கொண்டு அதனை சிக்கனுடன் சேர்த்து ஊறவைத்து grill செய்து கொள்ளலாம்.

இதில் எந்த வித தூள் வகைகளும் சேர்க்க தேவையில்லை.

இந்த சிக்கனை Direct Fire / Oven அல்லது Grill Panயில் செய்தால் சூப்பராக இருக்கும். அது இல்லை என்றால் கடாயில் சிக்கனை மிகவும் High Flameயில் வேகவிடவும்.

சிக்கன் ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் (Bonless Skinless) – 1/2 கிலோ
·        தயிர் -1/4 கப்
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் - சிறிதளவு

அரைத்து கொள்ள :
·        கொத்தமல்லி – 1 கைபிடி
·        புதினா – 1 கைபிடி
·        பச்சைமிளகாய் – 2 – 3 (காரத்திற்கு ஏற்ப)
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – 1 துண்டு
·        சீரகம் – 1 தே.கரண்டி

செய்முறை:
·        சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.


·        மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து கொள்ளவும்.


·        சிக்கனுடன் அரைத்த பொருட்கள் + தயிர் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இதனை குறைந்தது 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.


·        Grill panயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை தனிதனியாக போட்டு வேகவிடவும்.


·        ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு வேகவிடவும்.·        சுவையான சிக்கன் ரெடி. இதனை சாலட் அல்லது எதாவது ஒரு Dip சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். 


3 comments:

Magees kitchenworld said...

Such a delicious recipe ...

Anonymous said...

can you send raita recepies

Nancy said...

Hi,my name is Nancy,got excited with your recipes,tried this recipe,came out very well,can you suggest a dip for this green chicken with recipe.

Related Posts Plugin for WordPress, Blogger...