நவராத்திரி முதல் நாள் - வெண்பொங்கல் ( நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில்) - Navaratri Day 1 Recipes - Venpongal ( Nanganallur Anjaneyar Kovil Style)


எங்க அம்மா, சில வருடங்களுக்கு முன்பு நவராத்திரி சமயம், நவராத்திரி  எப்படி கொண்டாடுவது என்று ஒரு புத்தகத்தினை Print போட்டு அனைவருக்கும் கொடுத்தாங்க…எனக்கும் நான்கு வருடம் முன்பு, US வந்த பொழுது ஒரு Copy எடுத்து வந்தாங்க…

அதன்பிறகு, ஒவ்வொரு வருடமும் அதனை பற்றி எழுத வேண்டும் என்று எண்ணம் இருக்கும், ஆனால் எதோ காரணத்தினால் எழுத முடியவில்லை. இந்த வருடம் எழுத வேண்டும் என்று தோன்றியது. கண்டிப்பாக இது அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கின்றேன்.

சரி, முதல் நாள் செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்….

முதல் நாள் – பாலா மஹேஸ்வரி

அரிசி மாவால் பொட்டு வைத்து கோலம் போட்டு அம்பாளை இரண்டு வயது குழந்தையாக கருதி வாசனை தைலம் பூசி நீராட்டி, ஆடை அணிவித்து பால குமாரி என அழைத்து சந்தனம், குங்குமம் என விளையாட்டு பொருட்கள் வைத்து வணங்க வேண்டும்.

முதல் நாள் பூஜிக்க வேண்டிய மலர்கள் – மல்லிகை, வில்வம்.
நிவேதனம் – வெண் பொங்கல்
விநியோகம் – சுண்டல், பழம்.
ராகம் – தோடி

ஸ்லோகம் :
குமாரஸ்ய  ச தத்வாநி  யாஸ்ருஜத்யபி    லீலயா |
காதீ நபிச தேவாந் தாந் குமாரிம் பூஜயாம் யஹம் ||நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் கோவில் ஸ்டைல் வெண்பொங்கல்

எப்பொழுதும் எங்க வீட்டில் அம்மா, பொங்கல் செய்யும் பொழுது மிளகினை பொடித்து தான் சேர்ப்பாங்க… நாங்கள் மிளகினை தூக்கி போட்ட மாட்டோம் என்று அப்படி செய்வாங்க…

நங்கநல்லூர் ஆஞ்சிநேயர் கோவில் பொங்கலின் ஸ்பெஷலே இதில் சீரகம் + மிளகினை பொடித்து சேர்ப்பது தான். நன்றி ப்ரேமா

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பச்சரிசி – 1 கப்
·        பாசிப்பருப்பு – 1/2 கப்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·        பொடித்த சீரகம் – 1 தே.கரண்டி
·        பொடித்த மிளகு தூள் – 1 தே.கரண்டி
·        முந்திரி – சிறிதளவு
·        கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·        அரிசி + பாசிப்பருப்பினை தண்ணீரில் கழுவி அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ( சுமார் 4 – 5 கப் தண்ணீர் )  + நறுக்கிய இஞ்சி + தேவையான அளவு உப்பு சேர்த்து 5 – 6 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        சீரகம் + மிளகினை ஒன்றும்பாதியுமாக பொடித்து கொள்ளவும்.

·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·        தாளித்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        சுவையான சத்தான பொங்கல் ரெடி. இதனை சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை பிரமாதம்...

Lifewithspices said...

wow nice post.. and perfect naivedhyams..

Shanthi said...

Lovely dishes..perfect for navrathiri...

Vijiskitchencreations said...

Super combination recipe Geetha.

Magees kitchenworld said...

Interesting

Anonymous said...

very great recepies....gives instant ideas for people new to cooking, who wants to do navrathri pooja....durga matha ke jai !

Anonymous said...

very great recepies....gives instant ideas for people new to cooking, who wants to do navrathri pooja....durga matha ke jai !

Related Posts Plugin for WordPress, Blogger...