போச்சிடு சிக்கன் உருண்டை சாலட் – Poached Chicken Balls Salad - Oil Free Chicken Salad - Low Fat Food


இந்த சாலடில் உள்ள சிக்கனை எண்ணெய் சேர்க்காமல் , அதனை தண்ணீரில் வேகவைத்து இருக்கின்றேன் (Poaching Technique Used ).

மிகவும் ஹெல்தியான சுவையான சிக்கன் சாலட். இதில் சிக்கன் மிகவும் Moistஆக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் (Boneless Skinless Chicken) – 1/4 கிலோ
·        சீஸ் – 2 மேஜை கரண்டி துறுவியது
·        உப்பு – தேவையான அளவு

சிக்கனுடன் அரைத்து கொள்ள :
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        புதினா – 10 இலை
·        பச்சைமிளகாய் – 2 (காரத்திற்கு ஏற்றாற் போல)
·        பூண்டு – 3 பல் (தோல் நீக்கியது)
·        இஞ்சி – 1 சிறிய துண்டு
·        தனியா (Coriander Seeds ) – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.


·        அத்துடன் சிக்கனை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.


·        அரைத்து வைத்துள்ள சிக்கன் கலவையுடன் துறுவிய சீஸ் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        ஒரு அகலமான பாத்திரத்தில், பாதி பாங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் நன்றாக கொதித்து கொண்டு இருக்கும் பொழுது அதில் உருட்டி வைத்துள்ள சிக்கன் உருண்டைகளை போட்டு வேகவிடவும்.


·        சுமார் 4 - 5 நிமிடங்கள் கழித்து சிக்கன் உருண்டைகள் நன்றாக வெந்து மேலே எழும்பி வந்து இருக்கும். இப்பொழுது சிக்கன் உருண்டைகள் ரெடி.


·        சாலட் பறிமாறும் தட்டில் Romaine Lettuce யினை பொடியாக வெட்டி வைக்கவும். அதன் மீது இந்த சிக்கன் உருண்டைகள் + Cheese Cubes + விரும்பினால் எதாவது ஒரு சாஸ் (அல்லது எலுமிச்சை சாறு ) சேர்த்து கொள்ளவும். (நான் Ranch பயன்படுத்து இருக்கின்றேன் ).

·        இத்துடன் உருளை வறுவல் + Cucumber Slices வைத்து இருக்கின்றேன். இந்த சாலடில் Protein, Carbohydrates & Vitamins என்று அனைத்து இருக்கின்றது. எளிதில் செய்ய கூடிய சத்தான முறையில் செய்த சாலட்.


குறிப்பு :
சிக்கன் உருண்டைகள் வேகவைத்த தண்ணீர் Chicken Stock மாதிரி இருக்கும். இதனை வேறு எதாவது சமையலில் தண்ணீருக்கு பதிலாக (சாதம் வேகவைக்க அல்லது கிரேவி செய்ய) பயன்படுத்தி கொள்ளலாம்.


2 comments:

Priya Suresh said...

Super platter, appadiya antha plate yennaku kedacha nalla irrukum.

Saratha said...

செய்முறை விளக்கம் அருமை.அப்படியே ஒரு பார்சல் அனுப்புங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...