வேர்க்கடலை சுண்டல் - நவராத்திரி ஸ்பெஷல் - Verkadalai Sundal / Peanut Sundal - Navaratri Recipes


வேர்க்கடலை ஊறவைக்க : குறைந்ததது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேர்க்கடலை – 2 கப்
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        கடுகு, உளுத்தமபருப்பு – தாளிக்க
·        கருவேப்பில்லை – 5 இலை
·        காய்ந்த மிளகாய் – 2

செய்முறை :
·        வேர்க்கடலையினை தேவையான தண்ணீரில் குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

·        ஊறவைத்த வேர்க்கடலையினை பிரஸர் குக்கரில் தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து 3 – 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.


·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வேர்க்கடலையுடன் சேர்த்து கொள்ளவும்.


·        சுவையான சத்தான வேர்க்கடலை சுண்டல் ரெடி.

குறிப்பு :

விரும்பினால் இத்துடன் தேங்காய் துறுவல் சேர்த்து கொள்ளலாம்.6 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படம்...

வேர்க்கடலை சுண்டலைப் பார்த்தவுடன் கை தானாக கணினியின் திரை நோக்கி நகர்வதைத் தடுக்க வேண்டியதாக இருந்தது!

பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படம்...

வேர்க்கடலை சுண்டலைப் பார்த்தவுடன் கை தானாக கணினியின் திரை நோக்கி நகர்வதைத் தடுக்க வேண்டியதாக இருந்தது!

பகிர்வுக்கு நன்றி.

Veena Theagarajan said...

looks so yummy I am addicted to this

Vimitha Anand said...

Healthy sundal Geetha

Saratha said...

Healthy and tasty sundal.

Magees kitchen said...

Healthy and tasty sundal...

Related Posts Plugin for WordPress, Blogger...