நவராத்திரி 5 ஆம் நாள் - மஞ்ச பொங்கல், பாயசம் , வடாம் - Navaratri Day 5 Recipes - Manja Pongal , Payasam, Vadam - navaratri Recipesநவராத்திரி ஐந்தாம் நாள் – வைஷ்ணவீ

கடலிமாவால் பஷிகள் உருவில்; கோலமிட்டு வைஷ்ணவீ என அழைத்து ஜவ்வாது அத்தர் பூசவும். பிரெளடா என்று திருநாமம் சூட்டு அழைக்கவும்.

பூஜிக்க வேண்டிய மலர் – சண்பகம்
நிவேதனம் – மஞ்சள் பொங்கல், பாயசம், வடாம்.
இசை – ஜல்லரி வாத்யம், பந்துவராளி ராகம்.

ஸ்லோகம் :
காளீ  காலயதே ஸர்வம் ப்ரஹ்மாண்டம் ஸசராசரம் |

கல்பாந்த ஸமயேயா தாம்காளிகாம் பூஜயாம் யஹம் ||

மஞ்ச பொங்கல்

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        அரிசி – 1 கப்
·        துவரம் பருப்பு – 1 கப்
·        மஞ்சள் தூள் – 1/2  தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு
·        நெய் / நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி

செய்முறை :
·        அரிசி + துவரம்பருப்பினை நன்றாக தண்ணீரில் கழுவி அத்துடன் மஞ்சள் தூள் + சுமார் 4 – 5 கப் தண்ணீர் ஊற்றி பிரஸர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். (விரும்பினால் இத்துடன் பாசிப்பருப்பு சேர்த்தும் வேகவிடலாம்.)


·        நன்றாக வெந்த சாதத்துடன் நெய் / நல்லெண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

·        சுவையான சத்தான மஞ்ச பொங்கல் ரெடி.


1 comments:

Priya Suresh said...

Wonderful manja pongal..Fantastic prasadams.

Related Posts Plugin for WordPress, Blogger...