நவராத்திரி 6 ஆம் நாள் - வெங்காய தேங்காய் சாதம் , மாதுளம், ஆரஞ்சு - Navaratri Day 6 Recipes - Onion Coconut Rice . Pomegranate, Orange - Navaratri Recipes


நவராத்திரி ஆறாம் நாள் – இந்திராணி

பொட்டுக்கடலை பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலமாக எழுதவும். நவரத்ன மாலைகள் அனிவித்து “சண்டிகா” என அழைத்து குங்குமப்பூ குழைத்து பூசவும்.

பூஜிக்க வேண்டிய மலர்கள் – பாரிஜாதம் , விபூதிப் பச்சை , செம்பருந்தி
நிவேதனம் – தேங்காய் சாதம் , மாதுளம் பழம், ஆரஞ்சுப் பழம்.
இசை – மிருதங்கம்  இசைத்து நீலாம்பரி ராகம் பாடவும்.

ஸ்லோகம் :
சண்டிகாம்  சண்டரூபாம்  சண்டமுண்ட விநா ஸிநீம் |

தாம் சண்ட பாபஹரிணிம் சண்டிகாம் பூஜயாம்யஹம் ||


தேங்காய் சாதம்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        வேகவைத்த சாதம் – 3 கப்
·        தேங்காய் துறுவல் – 1/4 கப்
·        வெங்காயம் – 1
·        கருவேப்பில்லை – 2 கொத்து (சுமார் 20 இலை)
·        பச்சைமிளகாய் – 3
·        இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது

முதலில் தாளிக்க :
·        தேங்காய் எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, கடலைப்பருப்பு – தாளிக்க
·        முந்திரி – 10
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

செய்முறை :
·        வெங்காயத்தினை நீளமாக நறுக்கி வைக்கவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு + கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து அத்துடன் முந்திரி சேர்த்து வறுத்து கொள்ளவும்.


·        இத்துடன் வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து கலந்து 2 – 3 நிமிடங்கள் நன்றாக வதக்கி கொள்ளவும்.

·        வெங்காயம் வதங்கிய பிறகு, தேங்காய் துறுவல் + தேவையான அளவு உப்பு + நறுக்கிய இஞ்சியினை சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        பிறகு உதிர் உதிராக வேகவைத்த சாதத்தினை இத்துடன் சேர்த்து கிளறவும்.

·        சுவையான தேங்காய் சாதம் ரெடி. இதனை எதாவது வறுவலுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


குறிப்பு :
தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

தேங்காய் துண்டில் இருக்கும் Brown மேல் பகுதியினை கண்டிப்பாக நீக்கி விட வேண்டும்.

தேங்காய் சாதம் கிளறிய பிறகு அத்துடன் அப்பளத்தினை பொடித்து சேர்த்து கிளறினால் சூப்பராக இருக்கும்.

கண்டிப்பாக கருவேப்பிலை அதிகம் சேர்த்தால் தேங்காய் சாதம் மணமாக இருக்கும்.

இதனை எப்பொழுதும் Ordinary அரிசியில் செய்தால் போதும். பாஸ்மதி அரிசியில் செய்தால் தேங்காய் சாத்தில் இருக்கும் சுவை அவ்வளவாக தெரியாது.

வெங்காயம் சேர்க்க விரும்பாதவர்கள் அதனை நீக்கிவிடலாம். ஆனால் வெங்காயம் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

1 comments:

Priya Suresh said...

Addition of onions makes this rice more flavorful..Delicious.

Related Posts Plugin for WordPress, Blogger...