நவராத்திரி 7 ஆம் நாள் - எலுமிச்சை பொடி சாதம், சத்து மாவு - Navaratri Day 7 Recipes - Lemon Podi Rice, Sathu Maavu - Navaratri Recipes


நவராத்திரி ஏழாம் நாள் – மஹா சரஸ்வதி

மலர்களால் கோலமிட்டு நலங்கு மஞ்சள் பூசி, புஷ்ப ராகம் , ஸ்படிக மாலை சூட்டி சாம்பவீ என அழைத்து வணங்க வேண்டும்.

பூஜிக்க வேண்டிய மலர்கள் – வெந்தாழம்பூ, தும்பை
நிவேதனம் – எலுமிச்சை சாதம், சத்து மாவு.
ராகம் – பேரி வாத்யத்துடன் பிலஹரி ராகம்.

ஸ்லோகம் :
அகாரணாத்  ஸமுத்பத்தி  யந்மயை  பரிகீர்த்திதா |

யஸ்யாஸ் தாம் ஸுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம் ||

பொடி  எலுமிச்சை சாதம்

எப்பொழுதும் செய்யும் எலுமிச்சை சாதத்துடன் பொடி சேர்த்து செய்து பாருங்க…ரொம்ப நன்றாக இருக்கும்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
        வேகவைத்த சாதம் – 2 கப்
·        எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, கடலைப்பருப்பு – தாளிக்க
·        வேர்க்கடலை – 10
·        இஞ்சி – பொடியாக நறுக்கியது 1 தே.கரண்டி
·        பச்சைமிளகாய் – 2 கீறியது
·        கருவேப்பிலை – 10 இலை

செய்முறை :
·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு , வேர்க்கடலை சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


·        இத்துடன் 2 மேஜைகரண்டி அளவு தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

·        பிறகு பொடி + உப்பு + எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பினை நிறுத்திவிடவும்.


·        சாதம் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        சுவையான ஸ்பைசியான எலுமிச்சை சாதம் ரெடி.


4 comments:

Saratha said...

எலுமிச்சை சாதமும்.சத்துமாவு உருண்டையும் சூப்பர் ரெசிபி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;

அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

Priya Suresh said...

Both sadhama and urundai looks seriously irresistible.

கீத மஞ்சரி said...

நீங்கள் சொன்ன முறையில் பொடியும் குழம்பும் செய்து புளியோதரை செய்தேன். சூப்பர். இனி எலுமிச்சை சாதமும் அதே பொடியைக் கொண்டு செய்யலாம் என்பது இன்னும் வசதி. நன்றி கீதா.

Related Posts Plugin for WordPress, Blogger...