பாலன்னம் / பால் பொங்கல் -நவராத்திரி 8 ஆம் நாள் - Navaratri Day 8 Recipes - Pal Annam / Pal Pongal - Navaratri Recipes


நவராத்திரி எட்டாம் நாள் :
பத்மம போல் கோலமிட்டு கஸ்தூரி தைலம்பீசி நீராட்டி மரகத மணி, பச்சை நிற மாலை அணிவித்து தருணீ என வணங்க வேண்டும்.

பூஜிக்க வேண்டிய மாலர்கள் – மருதோன்றி பூ, சம்பங்கி
நிவேதனம் – பாலன்னம்
இசை – பின்னாகவராளி ராகம் பாடிக் கும்மி அடித்தம் வேண்டும்.

ஸ்லோகம் :
துர்க்கா த்ரயாதி பக்திம் யா ஸ்தா துர்கார்த்தி நாசிநீ |

துர்ஜ்ஞேயா ஸர்வ தேவாநாம் தாம்துர்காம் பூஜயாம்யஹம் ||

பால் பொங்கல் 

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் : 
  • அரிசி - 1 கப்
  • பால் - 5 - 6 கப்
  • உப்பு - தேவையான அளவு
செய்முறை :
  • அரிசியினை தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
  • இத்துடன் பால் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 5 - 6 விசில் வரும் வரை வேகவிடவும்.
  • பிரஸர் அடங்கியதும், குக்கரினை திறந்து அத்துடன் தேவையான அளவு (சுமார் 1/2 தே.கரண்டி ) உப்பு சேர்த்து மசித்து கொள்ளவும்.
  • சுவையான பால் பொங்கல் ரெடி. இதனை தயிர் + வாழைப்பழம் சேர்த்து எங்க வீட்டில் சாமிக்கு படைப்பாங்க...இந்த பொங்கலினை சாம்பார் சாதம், குழம்பு , ரசம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

கவனிக்க :
பாலில் முதலிலேயே உப்பு சேர்த்தால் திறந்த மாதிரி இருக்கும். அதனால் கடைசியில் சேர்த்தால் நல்லது.

பிரஸர் குக்கரில் வேகவைப்பதற்கு பதிலாக இதனை பாத்திரம் / பானையில் வேகவிடலாம். கூடுதலாக கொஞ்சம் நேரம் எடுக்கும் அவ்வளவு தான்...


5 comments:

Magees kitchen said...

Superb recipe, and very traditional...Do visit my blog if you get time.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் செய்முறை... நன்றி...

Priya Anandakumar said...

my fav paal pongal, made very nicely...

Saratha said...

பாலன்னமும் பால் பொங்கலும் அட்டகாசம்.

Kalpana Sareesh said...

wow wonderful recipe..

Related Posts Plugin for WordPress, Blogger...