கொண்டைகடலை மசாலா சுண்டல் - Channa Masala Sundal - Chickpeas Sundal - Navaratri Recipes


பொதுவாக எப்பொழுதும் ஒரே மாதிரி தாளித்து செய்யாமல், சிறிது காரசாரமாக செய்து கொடுத்தல் மிகவும் அருமையாக இருக்கும்.

இதில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை செய்து வைத்து கொண்டால் வேலை மிச்சம்.

என்னுடைய தோழி சுதாவிற்காக இந்த போஸ்டிங்க… போன வருடம் நவராத்திரி சமயமே இந்த போஸ்டிங்க போட சொல்லி கேட்டாங்க..

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேகவைத்த கொண்டைக்கடலை – 2 கப்
·        தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி

வறுத்து பொடித்து கொள்ள :
·        கடலைப்பருப்பு – 2 மேஜை கரண்டி
·        தனியா – 1 மேஜை கரண்டி
·        காய்ந்த மிளகாய் – 3
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தம்பருப்பு – தாளிக்க
·        கருவேப்பிலை – 5 இலை
·        பெருங்காயம் – 2 சிட்டிகை அளவு

செய்முறை :
·        வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனிதனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து கொள்ளவும்.


·        கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு + உளுத்தம்பருப்பு தாளித்து அத்துடன் கருவேப்பிலை + பெருங்காயம் + வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        அத்துடன் பொடித்த பொடி + தேங்காய் துறுவல் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        சுவையான சத்தான கொண்டைக்கடலை சுண்டல் ரெடி.


குறிப்பு :
வறுத்த அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காயினையும் வறுத்து அரைத்து கொள்ளலாம்.

கொண்டைக்கடலையினை வேகவைக்கும் பொழுதே உப்பு சேர்த்து இருந்தால், தாளிக்கும் பொழுது உப்பின் அளவினை பார்த்து கொள்ளவும்.
0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...