கோசம்பரி - Kosambari - Navaratri Recipes - Traditional Moong dal salad with Veggies - Healthy Salad Varieties


கோசம்பரி என்பது பாசிப்பருப்பினை வைத்து செய்யும் ஒரு வித சத்தான சாலட்.

இதில் பொதுவாக வெள்ளரிக்காய் , காரட், மாங்காய் சேர்த்து செய்வாங்க…இதனை விரும்பினால் தாளித்து கொள்ளலாம்.

அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் மாதிரி காய்கள் சேர்த்து கொள்ளலம்.

பருப்பினை ஊறவைத்து கொள்ள : குறைந்தது 30 நிமிடங்கள்
கோசம்பரி செய்ய தேவைப்படும்  நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பாசிப்பருப்பு – 1/4 கப்
·        வெள்ளரிக்காய் – 1 பெரியது
·        காரட் – 1
·        பச்சைமிளகாய் – 2
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        தேங்காய் துறுவல் (Fresh) – 2 மேஜை கரண்டி (Optional)
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 தே.கரண்டி
·        கடுகு , கருவேப்பில்லை – தாளிக்க


செய்முறை :
·        பாசிப்பருப்பு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊறவைத்து கொள்ளவும்.

·        வெள்ளரியினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும். காரட்டினை தோல் நீக்கி துறுவி கொள்ளவும்.


·        அகலமான பாத்திரத்தில் ஊறவைத்த பாசிப்பருப்பு + நறுக்கிய வெள்ளரி + காரட் சேர்த்து கலந்து கொள்ளவும்.

·        இத்துடன் எலுமிச்சை சாறு + உப்பு + பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் + கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து இத்துடன் சேர்த்து கலக்கவும்.

·        சுவையான சத்தான கோசம்பரி ரெடி.
7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சத்தான சமையல்... நன்றி...

Priya Suresh said...

Very nutritious kosambari.

Vimitha Anand said...

Healthy salad akka

இமா said...

பிடிச்சிருக்கு.

Priyas Feast said...

Healthy and delicious kosambari..ethukku oru neelambari ye padalam..

Magees kitchen said...

healthy...

Anonymous said...

Hi,

Super website thanks

Related Posts Plugin for WordPress, Blogger...