நவராத்திரி இரண்டாம் நாள் - கோவில் புளியோதரை & வாழைக்காய் வறுவல் - Navaratri Day 2 Recipes - Kovil Puliyodharai & Varuval - Navaratri Recipes நவராத்திரி இரண்டாம் நாள் – கெளமாரீ

கட்டம் போட்ட நேரிழைக் கோலம் இட்டு – கஸ்தூரி மஞ்சள் ,பூலாங்கிழங்குப்பொடி இவற்றால் நீராட்டி , மூன்று வயது நிரம்பிய குழந்தையாக பாவித்து , த்ருமூர்த்தி என அழைத்து, விளையாட செப்பு கூடை அளித்து வணக்க வேண்டும்.

பூஜிக்க வேண்டிய மலர்கள் : முல்லை, துளசி.
நிவேதனம் புளியோதரை, வறுவல்.
விநியோகம் – சுண்டல், பழம், தாம்பூலம்.
ராகம் – கல்யாணி.

ஸ்லோகம் :
 -
ஸ்த்வாதிபி : த்ருமூர்த்திர் யாதைர்ஹி நாநாஸ்வரூபிணி |
த்ரிகால  வ்யாபிநீ  சக்திஸ் த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம் ||

 கோவில் புளியோதரை

இது எங்க அம்மாவோட புளியோதரை செய்முறை… ஏற்கனவே இதே மாதிரி போஸ்டிங்கினை பிரவுன் ரைஸ் வைத்து செய்து இருக்கின்றேன்.  நிறைய Readers, Basic Cooking கேட்டதால் இந்த போஸ்டிங்க…

இந்த குழம்பு மற்றும் பொடியினை செய்து வைத்து கொண்டால் வேலை மிச்சம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேகவைத்த சாதம் – 4 கப்

புளி குழம்பு செய்ய :
·        புளி – எலுமிச்சை பழம் அளவு
·        தண்ணீர் – 2 கப்
·        நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு தாளிக்க
·        கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
·        காய்ந்த மிளகாய் – 4
·        கருவேப்பிலை – 5 இலை
·        பெருங்காயம் – சிறிதளவு
·        மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

புளி சாதம் பொடி செய்ய :
·        தனியா – 1 கப்
·        காய்ந்த மிளகாய் – 10 – 12 (காரத்திற்கு ஏற்றாற் போல)
·        கடுகு – 1 தே.கரண்டி
·        வெந்தயம் – 1 தே.கரண்டி
·        கடலைப்பருப்பு – 1/4 கப்
·        உளுத்தம்பருப்பு – 1/4 கப்
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

கடைசியில் தாளித்து சேர்க்க :
·        நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        வேர்க்கடலை – சிறிதளவு
·        கருவேப்பிலை – 10 இலை

செய்முறை :
புளி குழம்பு செய்முறை :
·         புளியினை தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, 2 கப் புளிதண்ணீரை கொஞ்சம் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + கடலைபருப்பு + காய்ந்த மிளகாய் + கருவேப்பில்லை தாளிக்கவும்.


·         இத்துடன் புளி தண்ணீர் + மஞ்சள் தூள் + உப்பு + பெருங்காயம் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இப்பொழுது புளி குழம்பு ரெடி. (குறிப்பு : இதனை 1 மாதம் வரை வைத்து இருந்து சாப்பிடலாம்…அப்படி நிறைய நாள் வரவேண்டும் என்றால் எண்ணெயினை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.)

புளிசாதம் பொடி செய்முறை :
·         தனியா + காய்ந்த மிளகாய் + கடுகு + வெந்தயம் + கடலைபருப்பு + உளுத்தம் பருப்பு என எல்லா பொருட்களையும் தனி தனியாக கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். (கவனிக்க : ஒவ்வொரு பொருளாக தனி தனியாக தான் வறுக்க வேண்டும்…நேரம் மிச்சம் செய்யலாம் என்று ஒன்றோடு ஒன்று சேர்த்து வறுத்தால் சுவை மாறுபடும்.)

·         வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிடவும்.          மிக்ஸியில் முதலில் தனியா சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாயினை சேர்த்து அரைக்கவும்.


·         கடைசியில் தனியா மிளகாய் பொடியுடன் கடுகு + வெந்தயம் சேர்த்து அரைத்து பாத்திரத்தில் கொட்டிகொள்ளவும்.         மிக்ஸியில் கடலைபருப்பு + உளுத்தம் பருப்பினை கொரகொரவென அரைத்து கொள்ளவும்.

·         இந்த பொடியினை தனியா பொடியுடன் சேர்க்கவும். இத்துடன் பெருங்காயம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது பொடி ரெடி. ( குறிப்பு : இந்த பொடியினையும் செய்து வைத்து கொண்டால் இரண்டு மாதங்கள் ஆனாலும் கொடாது….)


புளி சாதம் செய்முறை :
·         அரிசியினை உதிர் உதிராக வேகவைத்து  கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.


·          தேவையான  அளவு குழம்பு + தாளித்த பொருட்களினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.


·         அதன் பிறகு 2 தே.கரண்டி பொடியினை சாதத்துடன் சேர்த்து கிளறவும்.


·         சுவையான புளியோதரை ரெடி. இதனை வாழைக்காய் வறுவல் அல்லது விரும்பிய வறுவல், சிப்ஸ், வடை வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
10 comments:

ஸாதிகா said...

vவாவ்..சூப்பர்ப்!

திண்டுக்கல் தனபாலன் said...

கோவில் புளியோதரை என்றால் அந்த சுவையே தனி தான்... செய்முறைக்கு நன்றி...

Priya Suresh said...

Makes me hungry..Super dishes.

கீதமஞ்சரி said...

இந்தமாதிரி புளியோதரை செய்முறை புதியது எனக்கு. நன்றி கீதா. நவராத்திரிக் கொண்டாடும் வழிமுறைகள் பற்றிய குறிப்புகளுக்கும் நன்றி.

great-secret-of-life said...

very tempting preparation.. love it

சாரதா சமையல் said...

கோவில் புளியோதரை செய்முறை சூப்பராக இருக்கு.நவராத்திரி வாழ்த்துக்கள்.

Magees kitchenworld said...

tempting recipe and informative topics

VASANTHA said...

PULISATHAM TRY PANNEN SUPER BUT ULUTHAM PARUPPU MARANTHUTEN . NEXT TIME ADD PANNIKALAM

Anonymous said...

Thnks also,spreading ur preparation ideas,to my friends and family members

Mithra said...

Super geetha.. I made it today.. It was awesome.��

Related Posts Plugin for WordPress, Blogger...