நவராத்திரி மூன்றாம் நாள் - சக்கரை பொங்கல் & பலாப்பழம் - Navaratri Day 3 Recipes - Sakkarai Pongal & Jackfruit - Navaratri Recipes


நவராத்திரி மூன்றாம் நாள் – வாராஹி

மலர்கள் உருவில் மாக்கோலம் இட்டு சந்தனம், குங்குமம் சாத்தி முத்து பவளம் நகைகளால் அலங்கரிக்க வேண்டும். கன்யா கல்யாணி என்று அழைக்க வேண்டும்.

பூஜிக்க வேண்டிய மலர்கள் : சம்பங்கி, மருவு.
நிவேதனம் – பலாப்பழம், சக்கரை பொங்கல்.
இசை  - வீணை இசைத்து காம்போதி ராகம் பாடவும்.

ஸ்லோகம் :
கல்யாண  காரிணீ நித்யம் பக்தாநாம் பூஜிதா அநிஸம் |
பூஜயாமி ச தாம் பக்த்யா கல்யாணீம் ஸர்வ காமதாம் ||சக்கரை பொங்கல்

இந்த சக்கரை பொங்கலின் ஸ்பெஷலே இதில் Nutmeg Powder (ஜாதிக்காய் பொடி ) சேர்ப்பது தான்…

விரும்பினால் இத்துடன் சிறிதள விரும்பினால் பச்சைகற்பூரம் (Edible Camphor ) ஒரு சிட்டிகை அளவு சேர்த்தால் சூப்பராக இருக்கும்.

ஜாதிக்காய் பொடி இல்லை என்றால் ஒரு கிராம்பினை சேர்த்து கொள்ளலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        பச்சரிசி – 1 கப்
·        பாசிப்பருப்பு – 1/4 கப்
·        வெல்லம் – 3/4  கப்
·        ஜாதிக்காய் பொடி ( Nutmeg Powder) – 1 சிட்டிகை அளவு
·        ஏலக்காய் – 2 (பொடித்து கொள்ளவும்)

கடைசியில் சேர்க்க :
·        நெய் – 2 மேஜை கரண்டி
·        முந்திரி, திரட்சை – சிறிதளவு

செய்முறை :
·        அரிசி + பாசிப்பருப்பினை தண்ணீரில் கழுவி கொள்ளவும். இத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து அதனை பிரஸர் குக்கரில் போட்டு 3 – 4 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        ஒரு பாத்திரதில், வெல்லம் + 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன், அதனை வடித்து கொள்ளவும். (குறிப்பு : இப்படி Stainerயில் வடித்து கொண்டால் எதாவது Impuritiesயினை நீக்கிவிடலாம். )


·        பிரஸர் குக்கரினை திறந்து கரண்டியினால் கிளறிவிடவும். இத்துடன் ஜாதிக்காய் பொடி + பொடித்த ஏலக்காய் + கொதித்த வெல்லம் தண்ணீரினை சேர்த்து சுமார் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.


·        கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி + திராட்சை சேர்த்து வறுத்து கொள்ளவும்.


·        வறுத்த பொருட்களினை பொங்கலில் சேர்த்து கிளறிவிடவும். சுவையான சக்கரை பொங்கல் ரெடி.

குறிப்பு :
இதில் கண்டிப்பாக Nutmeg Powder  சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.5 comments:

சாரதா சமையல் said...

மூன்றாவது நாளான நவராத்திரி ரெசிபி மனதை கொள்ளை கொண்டதே!!!

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தகவல்களும்...

நன்றி...

Magees kitchenworld said...

Yummy and waiting for the other 6 days information :)

Priya Suresh said...

Love to add pacha karupooram or nutmeg powder in sakkara pongal..Wonderful neivedyam.

Anonymous said...

Tasty recipes! Where do you get these clay vessels? Please share about it.

Related Posts Plugin for WordPress, Blogger...