நவராத்திரி நான்காம் நாள் - தயிர் சாதம் - Navaratri Day 4 Recipes - Curd Rice / Thayir Sadam - Navaratri Recipes


நவராத்திரி நான்காம் நாள் – மஹாலஷ்மி

ரோஹிணீ எனப் பெயர் சூட்டி வணக்க வேண்டிய நாள். அக்‌ஷதையினால் படிக்கட்டு போல் கோலமிட்டு அஷ்டகந்தகளான புனுகு, கஸ்தூரி, கோரோசனை, அகில், சந்தனம், பன்னீர், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் இவைகளை குழைத்து பூசவும். முத்து, பவளம் அணிவிக்கலாம்.

பூஜிக்க வேண்டிய மலர் – ஜாதிப்பூ
நிவேதனம் – தயிர் சாதம்
இசை – கோட்டு வாத்தியம் – பைரவி ராகம் பாடவும்.

ஸ்லோகம் :

ரோஹ்யந்  தீச  பீஜாநி  ப்ராக்ஜந்ம ஸஞ்சிதாநி  வை |

யாதேவீ ஸர்வ பூதாநாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம் ||


தயிர் சாதம்

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        வேகவைத்த சாதம் – 2 கப்
·        பால் – 1 கப்
·        தயிர் – 1/4 கப்
·        வெண்ணெய் – 1 மேஜை கரண்டி (Optional)

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, உளுத்தமபருப்பு – தாளிக்க
·        கருவேப்பிலை – 5 இலை
·        கொத்தமல்லி – சிறிதளவு
·        பெருங்காயம் – 2 சிட்டிகை அளவு
·        பச்சைமிளகாய் – 2 கிறீயது
·        இஞ்சி – 1 தே. கரண்டி (பொடியாக நறுக்கியது)

செய்முறை :
·        வேகவைத்த சாதத்தினை கரண்டியாக மசித்து கொள்ளவும். இத்துடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        இத்துடன்  தயிர் + வெண்ணெய் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தமப்ருப்பு தாளித்து அத்துடன் பச்சைமிளகாய் + இஞ்சி + கருவேப்பிலை + கொத்தமல்லி சேர்த்து தாளித்து இத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.


·        சுவையான தயிர் சாதம் ரெடி. இத்துடன் எதாவது வறுவல், ஊறுகாய் சேர்த்து சாப்பிட சுவையான இருக்கும்.
5 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள நவராத்திரி பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

great-secret-of-life said...

so comforting

சாரதா சமையல் said...

தயிர் சாதமும்,கொண்டைக்கடலை மசாலா சுண்டலும் சேர்த்து சாப்பிட்டால் வாவ்!

Priya Suresh said...

Both are my favourite,lovely dishes.

Ramya said...

Very nice receipes athuvum Tamil language la erukarathu rompa use fulla eruku

Related Posts Plugin for WordPress, Blogger...