சன் பால்ஸ் - Sunflower Seeds Balls - Healthy recipes


எளிதில் செய்ய கூடிய சத்தான ஸ்வீட்..இதனை Akshataவின் Classmateயுடைய அம்மா, தோழி Allisonனிடன் கற்று கொண்டது..

Sunflower Seeds உள்ள  Phytosterols,  Cholesterol குறைக்க பெரிது உதவுகின்றது.

இதில் அதிக அளவு Vitamin E, Vitamin B1 & B6 , Folate, Manganese, Magnesium, Copper, Selenium உள்ளது.

Sunflower Seedsயினை தினமும் 1 மேஜை கரண்டி அளவு சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது.

ஸ்வீட் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        Sunflower Seeds – 1 கப்
·        துறுவிய தேங்காய் – 1/4 கப் + 2 மேஜை கரண்டி
·        தேன் – 1 மேஜை கரண்டி
·        ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை (Optional)

செய்முறை :
·        சூரியகாந்தி விதைகளை 1 – 2 நிமிடங்கள் வறுத்து / Toast செய்து கொள்ளவும்.

·        இதனை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.


·        பொடித்த விதைகள் + 1/4 கப் துறுவிய தேங்காய் + தேன் + ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


·        உருட்டிய உருண்டைகளை 2 மேஜை கரண்டி தேங்காயில் பிரட்டி கொள்ளவும்.


·        சுவையான சத்தான சன் பால்ஸ் ரெடி. இதனை 1 வாரம் வரை வைத்து கொள்ளலாம்.


குறிப்பு :
Fresh தேங்காயிற்கு பதிலாக Unsweetened dry Coconut பயன்படுத்தினால் 1 வாரம் வரை வைத்து இருக்கலாம்.

Honeyயிற்கு பதிலாக Maple syrup அல்லது சக்கரை பயன்படுத்தி கொள்ளலாம்.


4 comments:

Lifewithspices said...

tis s sawesome.. i too love sunflower seeds. grt n healty recipe..

great-secret-of-life said...

healthy ladoos

Unknown said...

Very healthy laddoo

Priya Suresh said...

Omg, wat a healthy balls...Wish i have some sunflower seeds rite now.

Related Posts Plugin for WordPress, Blogger...