கும்பகோணம் கடப்பா - Kumbakonam Kadappa - Side Dish for Idly / Dosai Recipes


கடப்பா என்பது பருப்புடன் உருளைகிழங்கினை சேர்த்து செய்யும் குழம்பு வகை… இது இட்லி, தோசை சூப்பர்ப் காம்பினேஷன்…

இதில் காரத்திற்கு பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நான் பாசிப்பருப்புடன்,துவரம்பருப்பினை சேர்த்து செய்து இருக்கின்றேன். இதனை வெரும் பாசிப்பருப்பினை வைத்தும் செய்யலாம்.

தேங்காய் விழுதினை மைய அரைப்பதற்கு பதிலாக தேங்காய் பால் கூட சேர்த்து கொள்ளலாம்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :  
·        பாசிப்பருப்பு – 1/2 கப்
·        துவரம் பருப்பு – 1/2 கப்
·        உருளைகிழங்கு – 2 பெரியது
·        வெங்காயம் – 1
·        பச்சை மிளகாய் - 4
·        இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை – 2
·        சோம்பு – 1/4 தே.கரண்டி, கிராம்பு – 2

அரைத்து கொள்ள :
·        தேங்காய் துண்டுகள் – 4
·        பச்சைமிளகாய் - 2

கடைசியில் சேர்க்க :
·        கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :
·        வெங்காயத்தினை நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். உருளைகிழங்கினை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

·        பிரஸர் குக்கரில் பாசிப்பருப்பு + துவரம்பருப்பு + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 – 4 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். உருளைகிழங்கினை தனியாக வேகவைத்து கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் பருப்புடன் உருளைகிழங்கினை சேர்த்து வேகவைத்து கொள்ளலாம்)

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

·        இத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.


·        பிறகு வேகவைத்த பருப்பு + பச்சைமிளகாய் சேர்க்கவும்.


·        2  கப் தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.


·        அத்துடன் வேகவைத்த உருளைகிழங்கினை சேர்த்து சிறிது மசித்து 2  நிமிடங்கள் வேகவிடவும் (கவனிக்க: உருளையினை நன்றாக மசிக்க கூடாது.ஒன்றும்பாதியுமாக மசிக்கவும்.)


·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக மைய அரைத்து இதில் சேர்த்து 4 – 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கடைசியில் கொத்தமல்லி தூவி பறிமாறவும்.·        சூடான இட்லி, தோசைக்கு சூப்பரான காம்பினேஷன்…


11 comments:

Aruna Manikandan said...

love it with hot idli's,ippadi platea pass pannunga :)

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் போங்க... பசிக்குது...!!!

Subramaniam Yogarasa said...

அய்யோ...அய்யோ...அய்யோ.......இங்கயுமா?///வூட்ல 'தோச' நைட்டுக்கு,ஹி!ஹி!!ஹீ!!!

Savitha Ganesan said...

Hot hot idli dosai with these kadappas are alwaysa bliss. My MIL makes this very much.

ChitraKrishna said...

Very tempting geetha... Will try soon.

Veena Theagarajan said...

every time I see this brings back my my hostel day memories.. This is one of few dishes I like in those days

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Kalpana Sareesh said...

kadappa sooper..

Snow White said...

wow..wow... superrrrrruuuuu

Saratha said...

கடப்பா சைட் டிஷ் இட்லி,தோசையுடன் சேர்த்து போட்டிருப்பது அருமை.

ushaprashanth said...

Hi!
I was searching for this recipe!! Glad I got it!

Related Posts Plugin for WordPress, Blogger...