அவகேடோ ஹார்ட்ஸ் - Avocado Hearts - Valentine Special Recipes - Avocado Recipes


அவகேடோவில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் Vitamins C மற்றும் K இருக்கின்றது.

வாழைப்பத்தினை விட இதில் அதிக அளவு Potassium இருக்கின்றது.

இது கெட்ட கொழுப்பினை நீக்கி நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவுகின்றது.

எங்க வீட்டில் அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவோம். நன்றாக பழுத்த அவகேடோவினை விட 90% பழுத்த பழத்தினை சாப்பிட்டல் சுவையாக இருக்கும்.

Avocadoவின் சதை பகுதியின் முன்புறம் Yellowish Greenஆகவும், பின்பக்கம் கொஞ்சம் Dark Green கலரிலும் இருக்கும். இரண்டு கலர் இருப்பதால், Light color மீது Dark Color Hearts (அல்லது vice versa ) வைத்தால் அழகாக இருக்கும்.

நீங்களும் இதனை செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


ஹார்ட்ஸ் செய்ய தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        அவகேடோ Avocado – 1
·        Heart Cookie Cutter – Small, Large

செய்முறை :
·        அவகேடோவினை இரண்டாக வெட்டி கொள்ளவும்.


·        அகலமான Spoonயினால், அதில் இருந்து தோல் மற்றும் விதையினை நீக்கி சதை பகுதியினை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.


·        சதை பகுதியினை மெல்லிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெட்டி துண்டுகளில், Heart Cutterயினை வைத்து வெட்டி கொள்ளவும்.


·        Breadயினை Toast செய்து அதன் மீது எதாவது Cream Cheese தடவி, வெட்டிய Avocado Heartsயினை வைத்து பறிமாறவும்.ஹார்ட் கேக் - Surprise Heart Cake - Valentine Special Recipes - Cake Recipes


எளிதில் செய்ய கூடிய Simple Cake இது. இதனுடைய Specialயே இதன் உள்ளே இருக்கும் Surprise தான். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க…

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்..

சமைக்க தேவைப்படும் நேரம் : 1 மணி நேரம்
தேவையான பொருட்கள் :
White Cake Mix – 1 Packet
Whipped Cream


செய்முறை :
·        கேக் Mixயில் 1 பகுதியினை எடுத்து கொள்ளவும். கேக் செய்ய கொடுத்துள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்து Red Food Colorயினை சேர்த்து கலந்து கொள்ளவும். (என்னிடன் Orange Red Color தான் இருந்தது.அதன் தான் சேர்த்து இருக்கின்றேன். Red Color என்றால் மிகவும் கலர்புல்லாக இருக்கும்.)


·        அவனினை 350Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். கலந்த வைத்துள்ள கலவையினை ஒரு ட்ரேயில் ஊற்றி கொள்ளவும். இதனை, அவனில் வைத்து 12 – 15 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும்.


·        Bake செய்த கேக்கினை சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளவும். இதனை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


·        Heart Shape Cutterயினை வைத்து ஒவ்வொரு துண்டுகளில் இருந்தும் வெட்டி கொள்ளவும். இப்படியே அனைத்து துண்டுகளையும் வெட்டவும். (குறிப்பு : மீதம் இருக்கும் துண்டுகளை வைத்து Cake pops செய்யலாம். )


·        ஒரு பாத்திரத்தில், மீதம் இருக்கும் Cake Mixயினை வைத்து கலந்து கொள்ளவும். (கவனிக்க : இது Plain White ஆக தான் இருக்க வேண்டும். கலர் எதுவும் சேர்க்க வேண்டாம்.)


·        கலந்த வைத்துள்ள கலவையினை ஒரு ட்ரேயில் பாதி மட்டும் ஊற்றி கொள்ளவும். அதன் மீது வெட்டி வைத்துள்ள Cake Heartsயினை அடுக்கவும்.

·        பிறகு அதன் மீது மீதம் இருக்கும் கலவையினை ஊற்றவும். (கவனிக்க : இதனை ஊற்றிய பிறகு ட்ரேயினை தட்டி கொள்ளவும். அப்பொழுது தான் அனைத்து இடத்திலும் Cake Batter சமமாக பரவியிருக்கும்.)


·        அவனினை 350Fயில் முற்சூடு செய்து கொள்ளவும். ட்ரேயினை, அவனில் வைத்து 12 – 15 நிமிடங்கள் பேக் செய்து கொள்ளவும். (கவனிக்க :அவரவர் அவனின் திறனினை பெருத்து பேக் செய்து கொள்ளவும்.)

·        கேக் சிறிது ஆறியதும் அதன் மீது Icing தடவி கொள்ளவும். விரும்பினால் சிறிது Sprinkles தூவி கொள்ளலாம். Cakeயினை Cut செய்யும் பொழுது அழகாக Hearts தெரியும். மிகவும் சிம்பிளான கேக் ரெடி.


கவனிக்க :
இதில் தான் Readymade White Cake Mix தான் பயன்படுத்தி இருக்கின்றேன்.  விரும்பினால் நீங்களே கேக் மிக்ஸ் செய்து அதில் கலரினை கலந்து கேக் செய்யலாம்.

முதலில் செய்யும்  Color Cake நன்றாக வேகவேண்டும் என்று அவசியம் இல்லை. சுமார் 90% - 95% வெந்தால் போதும். ஏன் என்றால் அதனை திரும்பவும் Bake செய்ய போகிறோம்.


இதே மாதிரி Chocolate கேக்யிலும் செய்யலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல கலர் சேர்த்து கொள்ளலாம்.


அகத்தி கீரை சாம்பார் - Agathi Keerai Sambar - Sambar Recipes


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 35 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        அகத்திக்கீரை – 1 கட்டு
·        துவரம் பருப்பு – 1 கப்
·        சின்ன வெங்காயம் – 20
·        தக்காளி – 1
·        புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
·        பெருங்காயம் – 1/4 தே.கரண்டி

முதலில் தாளிக்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        கடுகு, வெந்தயம் – தாளிக்க
·        கருவேப்பில்லை – 10 இலை

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு


செய்முறை :
·        அகத்திக்கீரையினை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி கொள்ளவும். தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

·        துவரம் பருப்பினை கழுவி அத்துடன் 2 கப் தண்ணீர் வைத்து பிரஸர் குக்கரில் போட்டு 4 – 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். புளியினை 1 கப் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

·        கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும். அத்துடன் வெங்காயம் + தக்காளி சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிறகு, சுத்தம் செய்து வைத்துள்ள அகத்திக்கீரையினை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.


·        பிரஸர் குக்கரினை திறந்து பருப்பினை நன்றாக மசித்து கொள்ளவும். இத்துடன் வதக்கிய பொருட்கள் + தூள் வகைகள் சேர்த்து 10 – 12 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.·        கடைசியில் பெருங்காயம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். சுவையான சத்தான் அகத்திக்கீரை சாம்பார் ரெடி.


குறிப்பு :

அகத்திக்கீரை வேக கொஞ்சம் நேரம் ஆகும். அதனால் காய்கள் போட்டு வேகவைப்பது மாதிரி இந்த கீரையினையும் வேகவிட வேண்டும்.


செட்டிநாடு கோழி ரசம் - Chettinadu Kozhi Rasam - Rasam Recipes - Chettinad Special

       print this page Print


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        சிக்கன் – 1/4 கிலோ (எலும்புடன்)
·        சின்ன வெங்காயம் – 10 -15
·        தக்காளி – 1 பெரியது
·        பூண்டு – 10 பல் தோல் நீக்கியது

கொரகொரப்பாக அரைத்து கொள்ள :
·        மிளகு – 1 தே. கரண்டி
·        சீரகம் – 2 தே.கரண்டி
·        பூண்டு – 4 பல் தோலுடன்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·        மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·        மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·        தனியா தூள் – 1 தே.கரண்டி
·        சோம்பு தூள் – 1/2 தே.கரண்டி
·        உப்பு – தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
·        எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·        பட்டை -1, சோம்பு – 1/4 தே.கரண்டி
·        கருவேப்பிலை – 10 இலை

கடைசியில் சேர்க்க : (விரும்பினால் சேர்க்கவும்)
·        எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
·        கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை :
·        அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தினை தோல் நீக்கி கொள்ளவும். சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தக்காளியினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.


·        பிரஸர் குக்கரில் சிக்கன் + சின்ன வெங்காயம் + அரைத்த  தக்காளி + பூண்டு + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் +  6 - 7 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


·        விசில் அடங்கியதும், குக்கரினை திறந்து கொரகொரப்பாக அரைத்த பொருட்கள் + தாளித்த பொருட்கள் சேர்த்து கொதிவரும் வரை வேகவிடவும்.·        கடைசியில் எலுமிச்சை சாறு + கொத்தமல்லி தூவி பறிமாறவும். சுவையான காரசாரமான கோழி ரசம் ரெடி.


குறிப்பு :
இதில் எலும்புடன் இருக்கும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சிக்கனை பெரிய பெரிய துண்டுகளாக போடாமல் சிறிய துண்டுகளாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.

அவரவர் காரத்திற்கு ஏற்றாற் போல் மிளகினை சேர்த்து கொள்ளவும்.

அதே போல தண்ணீரின் அளவினையும் அதிகம் / குறைத்து கொள்ளலாம்.


க்ராப் கேக்ஸ் - Heart Shaped Crab Cakes - Healthy Appetizer - Valentine Special Recipes


எளிதில் செய்ய கூடிய Simpleஆன Appetizer. நீங்கள் செய்து பார்த்து விட்டு உங்கள் அன்பான கருத்தினை தெரிவிக்கவும்…
          
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·        நண்டு சதை பகுதி – 1/4 கிலோ
·        வெங்காயம் – 1 சிறியது
·        பூண்டு – 4 பல்
·        இஞ்சி – சிறிய துண்டு
·        செலரி – 1 மேஜை கரண்டி (பொடியாக நறுக்கியது)
·        மயோனேஸ் – 1 மேஜை கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
·        மிளகு தூள் – 1 தே.கரண்டி (கொரகொரப்பாக அரைத்தது)
·        ப்ரெட் துண்டுகள் – 2 + 1
·        உப்பு – தேவையான அளவு
·        எண்ணெய் – சிறிதளவு


செய்முறை :
·        வெங்காயம் + பூண்டு + இஞ்சியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து 3 – 4 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும்.


·        2 ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து தனியாக வைத்து கொள்ளவும். பிறகு மீதம் உள்ள 1 ப்ரெட் துண்டினை போட்டு பொடித்து வைக்கவும்.

·        நண்டுன் சதை பகுதியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். (குறிப்பு : விரும்பினால் மிக்ஸியில் போட்டு Pulse Modeயில் 1 முறை அடித்து கொள்ளலாம். இல்லை என்றால், துறுவி கொள்ளலாம்)


·        பொடியாக நறுக்கிய நண்டு துண்டுகள் + 2 ப்ரெட் தூள் + வதக்கிய பொருட்கள் + மயோனேஸ் + மிளகுதூள் + உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.·        அவரவர் விரும்பிய வடிவத்தில் அதனை தட்டி கொள்ளவும்.


·        பிறகு, மீதம் உள்ள ப்ரெட்தூளில், தட்டி வைத்துள்ள துண்டுகளை பிரட்டி கொள்ளவும்.

·        இதனை Fridgeயில் 15 – 20 நிமிடங்கள் வைத்து கொள்ளவும். கடாயினை சூடுபடுத்தி, அதில் 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கட்லெடுகளை போட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும்.


·        ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, அதனை திருப்பி போட்டு மேலும் வேகவிடவும்.


·        சுவையான சத்தான Crab Cakes ரெடி.


குறிப்பு :
அவரவர் விருப்பதிற்கு ஏற்றாற் போல Seasoning / Lemon Zest சேர்த்து கொள்ளலாம்.

White Breadயிற்கு பதிலாக whole Multigrain Bread பயன்படுத்தினால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.


கண்டிப்பாக Celery / Celery salt பயன்படுத்தினால் சூப்பராக இருக்கும். 
Related Posts Plugin for WordPress, Blogger...